புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013





           தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக... கடந்த 31-ந் தேதி கோலிவுட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அஜீத்தின் "ஆரம்பம்' படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம், விஜய்யின் "ஜில்லா' படத்தை தயாரித்துவரும் ஆர்.பி.சௌத்ரி, கார்த்தியின் "அழகு ராஜா' படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.

"வரி கட்டமாட்டேன்' எனச் சொல்லி அதிகாரிகளை அந்தக் காலத்தில் அலறவிட்டவர் "நடிகவேள்' எம்.ஆர்.ராதா.

"வரி கட்டாமல் விடமாட்டேன்' என அதிகாரிகளை இப்போதும் அசர வைப்பவர் கமல்.

இப்போது நடந்த ரெய்டில் என்ன சுவாரஸ்யம்?

தினசரி சம்பளமாக நாள் ஒன்றுக்கு சுமார் பத்து லட்ச ரூபாய் வாங்குகிறார் சந்தானம்.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்டி அதை வாடகைக்கு விடும் தொழில் செய்யப் போகிறார் சந்தானம். 

தமிழ்நாட்டில் சொற்ப பேர்களே வைத்திருக்கும்... குறிப்பாக சினிமாவில் விஜய்யும், டைரக்டர் ஷங்கரும் மட்டுமே வைத்திருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் கேட்டு அந்த நிறுவனத்திற்கு அப்ளை பண்ணியிருக்கிறார் சந்தானம்.

ரோல்ஸ்ராய்ஸ் கார் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய். ("தசாவதாரம்' புகழ் மல்லிகா ஷெராவத் இந்த  கார் கேட்டு அப்ளை செய்தபோது, "உங்களுக்கு குறிப்பிடும் படியான பாரம்பரிய பின்னணி இல்லை' என கார் நிறுவனம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது)

சம்பளம், அபார்ட்மெண்ட், ரோல்ஸ்ராய்ஸ் கார்... இந்த மூன்று விஷயங்களுக்காகவே சந்தானம் முற்றுகை யிடப்பட்டார். சொத்து ஆவணங்களை மட்டும் சந்தானத்திடமிருந்து அதிகாரிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படு கிறது.

"ஜில்லா' படத்தின் தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்யப்படாததால், "நாங்க எப்படி தீபாவளி கொண்டாடுறது?' என ஆர்.பி.சௌத்ரி அலுவலகத்திற்கு படக்குழுவினர் படையெடுத்து வந்தனர். அவர்களுக்குத் தருவதற்காக வைக்கப்பட் டிருந்த 25 லட்ச ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி னாங்களாம். பெரும்பாலும் சௌத்ரி அலுவலகத்தில் கடன் வாங்கிய டாகுமெண்ட்ஸ்களே இருந்த தாம்.

சில வாரங்களுக்கு முன் லிங்குசாமி அலுவலகத்தில் சோதனை நடந்தபோதே... தனது அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருந்தாராம் ஞானவேல்ராஜா. சென்னை வீடு, அலுவலகம், கோவை வீடு... என சில இடங்களில் சோதனை நடந்தது. அக்கவுண்ட்ஸ் தஸ்தாவேஜுகள் மட்டுமே வெரிபிகேஷனுக்காக அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாம்.

ஏகப்பட்ட கடனிலிருக்கும் ஏ.எம்.ரத்னம் தன் மகன் பெயரில் அஜீத்தை வைத்து பிரமாண்டமாக "ஆரம்பம்' படம் தயாரித்ததால் அவரும் ரெய்டுக்கு இலக்கானார்.

இந்த ரெய்டு தகவல்களை விசாரிக்கப் போன இடத்தில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

ஃபெப்சிக்கு எதிராக பாரதிராஜா தலைமையில் "படைப்பாளிகள் அமைப்பு' உருவானது. ஒட்டுமொத்த சினிமா புள்ளிகளும் படைப்பாளி கள் பக்கம் நிற்க... கமலும், அஜீத்தும் மட்டும் பகிரங்கமாக ஃபெப்சியை ஆதரித்தார்கள். இதனால் அஜீத்தை கடுமையாக விமர்சித்ததுடன்  அஜீத்திற்கு கொடுத்திருந்த அட்வான்ஸையும் திருப்பி வாங்கினார் ஏ.எம்.ரத்னம்.

இப்படியான மனக்கசப்பையும் மீறி தன் அலுவலக  சகாக்களிடம் அடுத்து யாருக்கு படம் பண்ணலாம்? என விவாதம் செய்து "ஏ.எம்.ரத்னம்' என முடிவு செய்தார் அஜீத். விஷயம் அறிந்து ஓடி வந்த ரத்னம், "நான் கடன்காரனா இருக்கேனே' என கையைப் பிசைய... "எனது அடுத்த பட கால்ஷீட் ரத்னத்திற்கு தரப்பட்டுள்ளது' என தனது லெட்டர்ஹெட்டில் எழுதிக்கொடுத்தார் அஜீத். அதை வைத்து ரத்னம் ஃபைனான்ஸியர்களிடம் பேச... "ரத்னத்திற்கு அஜீத் கால்ஷீட் கொடுத்திருக் காரா?' என ஃபைனான்ஸியர்கள் போன் மூலம் முற்றுகையிட... "ஆமாம்' என அஜீத் அலுவலகம் டவுட் கிளீயர் பண்ணியது. இதனால் தேடிவந்து ஃபைனான்ஸ் கொடுத்தார்கள்.

"ஆரம்பம்' வெளிவருவது கஷ்டம் என புரளி கிளப்பப்பட்டதால் "அழகு ராஜா' படத்தை அதிக தியேட்டரில் நவம்பர் 2-ல் ரிலீஸ் என கமிட் பண்ணியிருந்தனர்.

"பாண்டிய நாடு' நவ 01-ல் தியேட்டர் கமிட்மெண்ட் செய்யப்பட்டிருந்தது.


"31-ந் தேதியே படத்தை ரிலீஸ் பண்ணுங்க' என அஜீத் சொன்னார். இதனால் "பாண்டிய நாடு', "அழகு ராஜா'  படங்களை கமிட் பண்ணிய தியேட்டர்காரர்களும், தியேட்டர் ரெண்டு நாளைக்கு சும்மாதானே இருக்கும் என "ஆரம்பம்' படத்தைப் போட்டனர்.

அப்புறம் என்னாச்சு?

தீபாவளிப் படங்களை ரிலீஸ் பண்ணும் புறநகர் திரையரங்குகள் பலவும் தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்பாக  ஷோவை கேன்ஸல் பண் ணிட்டு லைட், ஸ்பீக்கர் செப்பனிடுதல், தியேட்டரை சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்வார்கள்.

ரசிகர்களும் தீபாவளி பர்ச்சேஸ் மூடில் இருப்பதால் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள். ஆனால் அஜீத் படம் என்பதால் தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்பாக ரிலீஸ் பண்ணினார்கள். அது... வரலாறு காணாத வசூலை அள்ளிவிட்டது.

தமிழகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 01-ந் தேதிகளில் ஒரு நாளைக்கு  ஐயாயிரம் காட்சிகள் நடத்தப் பட்டு வசூலில் திக்குமுக்காடிவிட்டார்கள்.  

ஓஞ்சு கிடந்த ரத்னம் காட்டில் பண மழை பேஞ்சா... வருமான வரித்துறை வரத்தானே செய்யும்.

ad

ad