புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2013





           வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மத்தியான உச்சி உருமத்தி யிலும், பொழுதுபட்ட பிறகும் வெளியே வர பயந்து வீட்டுக்குள்ளேயே முடங் கிக் கிடக்கிறார்கள், ராம லிங்காபுரம் மற்றும் அத்திப்பட்டிக் கிராமங் களின் மக்கள்.

அத்தனை வீட்டு வாசல் நிலைக்கதவு களிலும் வேப்பி லைக் கொத்து களும், மஞ்சள் துணியில் முடியப் பட்ட மந்திரத் தேங்காயும், குங்கு மத்தில் நனைத்த எலுமிச்சம் பழமும் தொங்க விடப் பட்டிருக்கின்றன.

""பழனி, முத்துக்குமார், லட்சுமணன்னு நம்ம ஊர் இள வட்டப் பசங்க மூணு பேர். மூணு பேரும் இணைபிரி யாமத் திரிந்தா னுவ. அதில ரெண்டுபேரு ஆக்ஸிடெண்டுல செத்துப் போனானுவ. ஒருத்தன் விஷத்தைக் குடிச்சிட்டுச் செத்தான். போனமாசம் நடந்த அகாலச் சாவுகள் இவை. மூணுபேரும் கல்யாணம் ஆகாதவனுவ. பொம்பளச் சுகத்தைக் காணாதவனுங்க, இப்பப் பேயா அலை யிறானுவ. அவனுவ ஆவி படுத்துற பாடு பத்தாதுனு இன்னொரு குமரிப் பேய்... அத்திப்பட்டி புள்ளை. கன்னி கழியாத பொண்ணு. சடங்கான நாலஞ்சு மாதத்தில தீயை வச்சுக்கினு செத்துப் போச்சு. அந்தக் குமரிப் பேய் தனியா அலையுது. எங்க ரெண்டு ஊரும்  இந்த இளவட் டப் பிசாசு களாலும், குமரிப் பேயாலயும் நடுங் கிப்போய்க் கிடக்குங்காணும். ஒரு மாசமா நாங்க படுறபாடு இருக்கே!'' -சொல்லும் போதே ராமலிங்காபுரம் ராமசுப்புவின் மேனியில் நடுக்கம் பரவியது. அந்த சாயங்காலப் பொழுதி லும் அவர் முகத்தில் முத்து முத்தாய் வியர் வைத் துளிகள்.


நெல்லை மாவட் டம் குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட் பட்ட ராமலிங்கா புரம், அத்திப்பட்டி கிராமங்களில்தான் பேய்களின் அட்டகாசம் கட்டுப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது.


இளவட்டப் பேய்களால் கொல்லப்பட்ட, 38 வயது சன்னாசியம்மாளின் வீட்டைத் தேடிப் போனோம். வீட்டு நிலையில், எலுமிச்சையோடு ஒரு எலும்புத் துண்டும் சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது.

சோகத்தில் இருந்து மீளமுடியாத் தவிப்பில் இருந்தது அந்த வீடு. தாயைப் பறிகொடுத்த மகள் ரஞ்சிதாவுக்கு ஆதரவாக அங்கிருந்த சித்தி கலாவதியிடம் சன்னாசியம்மாளின் சாவு குறித்துக் கேட்டோம்.

""ஒரு வெள்ளிக்கிழமை மசண்டைப் பொழுதில ஒரு வேலையா அக்கா அத்திப்பட்டி போனாள். ரொம்ப நாழி யாகியும் திரும்பலை. தேடிப் போனோம். வயல்காட்டுல வரப்பில குப்புறக் கிடந்தாள். பதறியடிச்சுத் தூக்கி வந்தோம். ரொம்ப நேரம் சுய நெனைப்பே வரலை. அப்புறமா ஒரு மாதிரி பேய்முழி முழிச்சிட்டு "யாரோ எம் முதுகில அடிச்சு தள்ளி விட்டாவ'ன்னு சொன்னாள். அடிச்ச தடம் முதுகில இருந்துச்சு. காய்ச்சல் விடிய விடிய நெருப்பா கொதிக்கிது. கோயில்பட்டிக்கு கொண்டு போய் டாக்டர் வைத்தியம் பார்த் தோம். ஆயிரக்கணக்கில செலவாச்சே தவிர குணமாகலை. உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இவளுக்கு வேற என்னமோ தெரியலை. கொண்டு போங்கனு டாக்டர் சொல் லிட்டாரு. வீட்டுக்கு கொண்டு வந்தால்... நிலை கொள்ளலை. சாப்பாடும் செல்லலை. தலைமுடியை விரிச்சுப் போட்டுட்டு, நாக்கைத் துருத்தி பல்லை நறநறனு கடிச்சு, கண்ணு முழியை உருட்டி "டாய் எடுபட்ட பயலே... யாருடே நீ'னு எங்க வீட்டு ஆம்பிளையளை பார்த்து ஓங்காரமா கத்தினாள். அதைப் பாத்து புள்ளைகள் எல்லாரும் நடுங்கிட்டானுக. அப்புறம்தான் பேய் புடுச்சிருக்குனு தெரிஞ்சது. நெத்திலிக் கருவாட்டுக் கொழம்பும் அவிச்ச முட்டையும் கொண்டு வாங்கடானு கேட்டாள். சரினு சமைச்சுக் கொடுத்தால், ஒரே மிதிதான். சோத்துத் தட்டு பறந்திருச்சு. அப்புறம்தான் கவுன்சிலர் மாரியப்பண்ணன் ஒத்தாசைக்கு வந்தாக'' -கவுன்சிலரை கை காட்டினார் கலாவதி.

மாரியப்பனோ ""ஒண்ணுக்கு ரெண்டு கோடங்கி களை கூட்டி வந்தோம். ரெண்டாவது கோடங்கி மந்திரம் தெரிஞ்சவர். அவராலேயே இளவட்டப் பேய்களை விரட்ட முடியலை. நாங்க இவளை விட்டுட்டுப் போக மாட்டோம்னு கத்தினாள் சன்னாசியம்மாள். அன்னந் தண்ணி இல்லாம மூணுநாள் கிடந்து அநியாயமா போய்ச் சேர்ந்துவிட்டாளே!'' வேதனையோடு சொன்னார் மாரியப்பன். சன்னாசியம்மாள் வீடிருக்கும் அதே கீழத் தெருவில்தான் ராக்கம்மாளின் வீடும் இருக்கிறது.

முழங்காலைக் கட்டியபடி வாசல்படியில், பித்துப் பிடித்தவராய் உட்கார்ந்திருந்தார் ராக்கம்மாள். வெறித்து வெறித்துப் பார்த்தவர் நீண்ட நேரத்துக்குப் பிறகு வாயைத் திறந்தார்.

""மத்தியான உச்சி வேளைல காட்டுப்பக்கம் விறகுச்சுள்ளி பொறுக்கப் போனேன். திடீர்னு ரெண்டு கையாலயும் என் முதுகில அடிச்சு புடிச்சு தள்ளிச்சு. என்ன ஏதுனு திரும்பிப் பார்த்தேன். யாருமே தட்டுப்படலை. மடார்னு கீழ விழுந் துட்டேன். என் மேல உக்காந்து யாரோ அமுக்கிற மாதிரி இருந் துச்சு. ரெண்டுமணி நேரம் கழிச்சி தான் என்னால எந்திரிச்சு தட்டுத் தடுமாறி வர முடிஞ்சுச்சு. ராத்திரி காய்ச்சல் வந்திருச்சு. டாக்டர்ட்ட ஊசி போட்டோம். காய்ச்சல் விட்ருச்சு. ஆனா யாரோ என் தோள்ல உட்கார்ந்திருக்கிற மாதிரி உடம்பே சுமைதாங்கி கல்லாகிப் போச்சு. பாரம் குறையலை. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகள்ல ரொம்ப ஆங்காரமா இருக்கு. சாமியாடி வந்து திருநீறு போட்டால் சரியா குது. கொஞ்ச நேரத்தில மறுபடியும் பாரமாயிடுது. வேலைக்குப் போக முடியலை. சாப்பாடும் செல்ல மாட்டேங் குது. சன்னாசியம்மாவுக்கு கெடைச்ச முடிவுதான் எனக்கும் வாய்க்குமோ?'' படபடப்போடு சொன்னார் ராக்கம்மாள்.

இளவட்டப் பேயாய் திரியும் மூவருக் கும் நண்பனாய் இருந்தவர் கண்ணன். அந்தக் கண்ணனையும் விட்டு வைக்க வில்லை இளவட்டப் பேய்கள் என்றார் கள் ராமலிங்காபுரம் மக்கள். கண்ணனைத் தேடிப்போனோம், வழியில் வந்தார்.

""எந்தலையெழுத்து... போன வெள்ளிக் கெழமை அத்திப்பட்டியில இருந்து குறுக்குப் பாதையில வந்துகிட்டிருந்தேன். அப்ப என் பின்னாடி இருந்து "டேய் கண்ணா'னு யாரோ ரெண்டு தடவை கூப்பிட்டாக. திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணலை. வேர்க்க விறுவிறுக்க ஓட்டமும் நடையுமா ஊர் வந்து சேர்ந் தேன். அன்னையில இருந்து மக்குப் புடிச்சா மாதிரி சுதாரிப்பே இல்லாம மந்தமா மிதந்துக்கிட்டிருக்கேன்'' -சுரத்தில் லாமல் மென்று விழுங்கினார் கண்ணன்.

ராமலிங்காபுரம் ஏரியாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் முத்து, தனது டூவீலரில் வெள்ளிக்கிழமை முன்னிரவில் திரும்பியபொழுது நடந்த சம்பவத்தை அவரே விவரித்தார்.

""வழியில ஒரு நடுத்தர வயது ஆளு கையைக் காட்டி வண்டியை நிறுத்தினார். "என்னைய ராமலிங்காபுரம் பக்கத்தில இறக்கிவிடுங்க தம்பி'னு சொன்னார். யாரோ ஆட்டுக்கிடை போடுற ஆள்னு நினைச்சு ஏத்திக்கிட்டேன். கொஞ்ச தூரம் வரை என் தோள்ல கையை போட்டுட்டே உட்கார்ந்திருந்தார். அவர் சொன்ன இடம் வந்ததும் வண்டியை நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தேன்.  ஆளைக் காணலை. மல்லிகைப்பூ வாசனை வந்துச்சு. பயத்துல கை, கால் எல்லாம் நடுங்கி அப்பிடியே விழுந்துட்டேன். வண்டி என் மேல சாஞ்சிடுச்சு. வயல்ல கிடை போட்டிருக்கிற ஆளுகளுக்கு டீ வாங்க வந்த கவுன்சிலர் மாரியப்பன்தான் என்னைத் தூக்கி விட்டு தட விக் குடுக்க... அப்புறமா கழுகு மலைப் பாதிரியார்ட்ட போய் தாயத்து மந்திரிச்சு கட்டின பிறகு தான் எனக்கு சரியாச்சு. பக்கத்து ஊர்ல தீக்குளிச்சு செத்துச்சில்ல சடங்கான குமரி, அந்தப் பொண்ணு தான் ஆள்மாறாட்டமா என் வண்டி யில ஏறி வந்திருக்கிறாள்'' பேய் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள வில்லை முத்து.

""உள்ளூர்லயும் அக்கம் பக்கத்தி லேயும் அபாண்டமா செத்தவங்க மட்டுமில்லாம திருநெல்வேலி பாளையங்கோட்டைல செத்தவங்க பிணங்களையும் கொண்டு வர்றதால, அந்தப் பிணங்களின் பின்னாடியே பெரிய பெரிய ஆங்காரமான பேய்களும், முனிகளும் சேர்ந்து வந்து விடுகின்றன. திருநெல்வேலி பிசாசு களையும், மதுரை மொட்டை கோபுரத்து முனியையும் எந்த மந்திர வாதியாலயும், கோடங்கியாலயும் விரட்ட முடியுமா? அந்த மாதிரி வந்தேறிய முனிகளும் உள்ளூர் பேய் பிசாசுகளும் சேர்ந்துதான் எங்க ஊரை பாடாய்ப்படுத்துகின்றன. ஒரு உசுரை எடுத்துருச்சுக... இன்னம் எத்தனை உசுரைப் பறிக்கப் போகுது களோ?'' ராமலிங்காபுரம் பாட்டி காளியம்மாளும் பெரியவர் அய்யனா ரும் பதறினார்கள். இந்தப் பேய்ப் பிசாசுகளை எப்படி விரட்டப்போகி றீர்கள்? ஊர் நாட்டாமை குருசாமித் தேவரிடம் கேட்டோம்.

""உள்ளூர் சாமி பவர்ஃபுல்லா இருந்தால், தன்னோட எல்லைக்குள் பேய், பிசாசுகளை அனுமதிக்காது. தடுத்து நிறுத்திவிடும். எங்க ஊர் காவல் தெய்வம் செல்வவிநாயகர். ரொம்ப வருஷமா குடமுழுக்கு நடத்த லை. அதனால பவர் இல்லாம இருந் தாரு செல்வ விநாயகர். அதனால கண்ட கண்ட பேய் பிசாசெல்லாம் குத்தாட்டம் போட்டுச்சுக. அதனால, பூசாரியோட கலந்து பேசி 2 லட்சம் செலவு செய்து குடமுழுக்கு நடத்தி னோம். இனிமேல எங்க செல்வ விநாயகர் பார்த்துக்கொள்வார்!'' என்றார் நாட்டாமை குருசாமி.

ஆனால் ராமலிங்காபுரம், அத்திப் பட்டி கிராமங்களின் மக்களோ இரவு நேரங்களில் வாசல்படியில் துடைப் பத்தையும் செருப்புகளையும் வைத் துக் கொண்டுதான் தூங்குகிறார்கள்.

-பரமசிவன்
படங்கள்: சக்கரவர்த்திராம்


 உஷ்!

கூடல் நகரின் வடக்கு தொகுதிப் புள்ளிக்கு தீப ஒளிக்கு முன்பு, வெடிகுண்டு கொலை மிரட்டல். மன்றக் கூட்டம் நேரம் என்பதால், முதன்மைக்கு உடனே சொல்லப்பட, அதே வேகத்தில் விசாரணையும் தொடங்கியது. தீபஒளி மாமூலுக்காக துணிவர்த்தகர் ஒருவரை தொகுதிப் புள்ளி குடைய, தாங்கமுடியாத அவர், நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். அதில் ஒரு நண்பரின் திருவினைதானாம், வெடிமிரட்டல். "இதில் மேற்கொண்டு எதுவும் செஞ்சிராதீக சார்' எனக் கெஞ்சிய புள்ளி, அத்தோடு மாமூலை நிறுத்திக்கொண்டாராம்.

ad

ad