புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2013

போர்க்குற்றங்கள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்கின்றனர்!- ஜனாதிபதி
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தெரிவித்தார்.
கொழும்பு தெமட்டகொட சேன்புர தொடர் மாடி வீடுகளை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை குறித்து சர்வதேசத்தில் மேலும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் இந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் பகல் கனவு கண்டு வருகின்றனர்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வந்த பல தலைவர்கள் நாட்டின் அபிருத்தியையும் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர் என்றார்.

ad

ad