புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2013

புதிய உலக சாம்பியன் கார்ல்ஸென்
சென்னை, நவ.23-  அய்ந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, புதிய உலக சாம்பியனாகியுள்ளார். நார்வேயின் கார்ல் ஸென்.

சென்னையில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10ஆவது சுற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சுற்றிலேயே முடிவு தெரியவரும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். இந்த சுற்றில் இருவரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.  9 சுற்றுகள் முடிவில் கார்ல்ஸென் 6 புள்ளிகளுடனும், ஆனந்த் 3 புள்ளிகளுடனும் இருந்தனர். கார்ல்ஸென் செஸ் சாம்பியனாவதற்கு மேலும் அரை புள்ளி மட்டும் இருந்தால் போதும் என்ற நிலையில், 10ஆவது சுற்று டிராவானது. இதனால், 0.5 புள்ளிகள் பெற்ற கார்ல்ஸென் புதிய சாம்பியனாகியுள்ளார்.  கார்ல்ஸென், 10 சுற்றுகளில் 3இல் வெற்றியும்; 7இல் டிராவும் செய்து 6.5 புள்ளிகளைப் பெற்றார். இதனால், 11 மற்றும் 12ஆவது சுற்றுகள் விளையாட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இந்த வெற்றி யின்மூலம் கார்ல்ஸென் சுமார் ரூ. 14 கோடி ரொக்கம் பரிசாகப் பெறுவார்.

ad

ad