புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – குத்துக்கரணம் அடித்தது சீனா

சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சீனா கூறியுள்ளது.
அண்மையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இது சிறிலங்கா தொடர்பான சீனாவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தரும் மாற்றமாக ஊடகங்கள் வர்ணித்திருந்தன.

இந்தநிலையில், கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், மின்னஞ்சல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தேசிய நல்லிணக்கத்தை நோக்கி, மனிதஉரிமைகளை ஊக்குவிப்பதில் முன்னேற்றத்தை எட்ட சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குழப்பமான நிலையை ஏற்படுத்தலாம் என்பதால், நாட்டின் உறுதிப்பாட்டுக்கான உகந்த சூழலை உருவாக்குவதற்கான புறச்சூழலை உருவாக்க உதவ வேண்டும் என்றும் அனைத்துலக சமூகத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் சிறிலங்கா சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, சிறிலங்கா மனிதஉரிமைகளை ஊக்குவிப்பதிலும், தேசிய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதிலும், சிறிலங்கா பெரியளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் சீனத் தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad