புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013


           ""ஹலோ தலைவரே... …  ஒரு பெண் வக்கீல் சட்டம் சம்பந்தமான பத்திரிகையில் எழுதிய கட்டுரை உச்சநீதிமன்றம் வரை கவனத்திற்குப் போய் இந்தியா வையே கிடுகிடுக்க வச்சிருக்கு.''

""ஆமாப்பா.. லா ஜர்னல் பத்திரிகையில் அந்தப் பெண் வக்கீல் எழுதியிருக்கிற பகீர் உண்மைகளைத்தானே சொல்றே? டெல்லியில் இரவு நேரத்தில் பஸ்ஸில்  மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்குள்ளாகி அது தொடர்பான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், இந்தப் பெண் வக்கீல் எந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் கீழ் பயிற்சி எடுத்தாரோ அந்த நீதிபதி தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது பற்றியும், உடல்ரீதியான துன்புறுத்தல்கள் இல்லாமல் தப்பித்ததையும் விளக்கியிருக்காரே!''

""ஆமாங்க தலைவரே.. .. தனக்குத் தாத்தா ஸ்தானத்தில் உள்ள அந்த நீதிபதி தற்போது ரிடையர்டாகிவிட்டதாகவும் அவரைப் பற்றி புகார் தெரிவிக்க விரும்பலைன்னும், இது ஒரு விழிப் புணர்வாக இருக்கவேண் டும்னும் அந்த பெண் வக்கீல் சொல்லியிருக்கிறார். அட்டர்னி ஜெனரல் வாகன்வதி இதை சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி சதாசிவம் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, 3 பேர் கமிட்டியை நியமித்து இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப் பட்டிருக்குது. கடந்த டிசம்பரிலிருந்து ஸ்வதந்திர குமார், டி.கே.ஜெயின், அஃப்தாப் ஆலம், கடைசியா தலைமை நீதிபதியா இருந்த அல்டமாஸ் கபீர் இவங்களெல்லாம் ரிடையர் டாகியிருக்காங்க.'' 



""டெல்லி பெண் வக்கீலின் கட்டுரை தேசிய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய அதே நாளில், தமிழகத்தில் அ.தி.மு.க.வின் லோக்சபா எம்.பி.க்கள் 9 பேரும் ராஜினாமா செய்யப் போறாங்கன்னு தகவல் பரவிக்கிட்டிருந்ததே?''

""அன்றைக்குத்தான் தமிழக சட்ட மன்றத்தின் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கக்கூடாதுன்னு இரண்டாவது தீர்மானம் போடப்பட்டது. தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட முக்கிய கட்சிகளெல்லாம் தீர்மானத்தை ஆதரித்ததில் ஜெ.வுக்கு மகிழ்ச்சி. அந்தநாளில்தான் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க.வின் லோக்சபா எம்.பி.க்கள் 9 பேரும் ராஜினாமா செய்யப்போறதா மீடியா வட்டாரங்களில் பரபரப்பான செய்தி பரவியது. அ.தி.மு.க. எம்.பி..க்கள் அரண்டு போயிட்டாங்க. அதாவது, அ.தி.மு.க தலைமை மீது விசு வாசத்தோடு இருக்கும் சிவப்புக் கட்சியின் மாநிலத் தலைவர்தான் இந்த யோசனையை ஜெ.கிட்டே சொன்னாராம். ஜெ.விடமிருந்து ரிப்ளை எதுவுமில்லை. இருந்தாலும், அரசியல் லாபம் கருதி தன் கட்சி எம்.பி.க்களை ராஜினாமா செய்யவைப்பாருன்னு சிவப்புத் துண்டுக்காரர் நம்பியிருக்காரு. அதை மீடியாக்கள்கிட்டே பரப்பிவிட, 9 எம்.பி.க்களும் ராஜி னாமா செய்யப்போறாங்கன்னும் அதன்மூலமா ஜெ.வின் அரசியல் செல்வாக்கு உயர்ந்து எம்.பி. தேர்தலில் 40க்கு 45 சீட் வரைக்கும் ஜெயிக்கப் போறாருங்கிற அளவுக்கு ஆளாளுக்கு கணக்குப் போட்டுக்கிட்டிருந்தாங்க.'' 

""ம்''…

""தலைவரே.. 2ஜி விவகாரத்தில் கனிமொழிக்கு சாதகமான அளவில் சி.பி.ஐ டி.எஸ்.பி டெல்லி ஸ்பெஷல் கோர்ட்டில் சாட்சியமளித்தது பற்றி ஏற்கனவே சொல்லி யிருந்தோம். கலைஞர் டி.வி.யில் கனிமொழி டைரக்டர் கிடையாது. ஷேர்ஹோல்டர்தான். 2007 ஜூனில் நடந்த கலைஞர் டி.வி. நிர்வாகம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்ற கனிமொழி பிறகு அதே ஜூன் மாதம் 20-ந் தேதி கலைஞர் டி.வி.யிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். அதன்பிறகு எந்த கூட்டத்திலும் கலந்துக்கலை. சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி. 200 கோடி கடன் வாங்கியது. திருப்பி செலுத்தியதெல்லாம் 2008 டிசம்பரில் தொடங்கி 2009 ஆகஸ்ட் வரைக்கும் நடந்திருக்குது. அதாவது, கலைஞர் டி.வி.யிலிருந்து கனிமொழி விலகி 18 மாதங்கள் கழிச்சுத்தான் இது நடந்திருக்குது. அதில் கனிமொழிக்கு சம்பந்தமில்லை. இதைத்தான் சி.பி.ஐ. டி.எஸ்.பி.யும் கோர்ட்டில் சொல்லி யிருக்காரு. ஆனா, தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதா சொல்லி கோபாலபுரம் வந்த ப.சிதம்பரமோ, கடன் வாங்கியது கனிமொழிக்குத் தெரியும்னும், அதனாலதான் சார்ஜ்ஷீட்டில் அவர் பெயர் இடம்பெற்றதுன்னும் சொன்னாராம். திரும்பத் திரும்ப இதையே அவர் சொன்னதால் கலைஞரும் குழப்பமாயிட்டாராம்.''

""அப்புறம்?''

""ப.சிதம்பரம் கிளம்பிப்போனதும் கனிமொழி கிட்டேயே இதுபற்றி கேட்டிருக்காரு. ப.சி.யே ஒரு சீனியர் வக்கீல். அவர் தப்பா சொல்வாரான்னும் கேட்டிருக்காரு. அவங்களோ, சார்ஜ்ஷீட்டே தப்புன்னுதானே நாம சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போயிருக்கோம்னு விளக்கம் கொடுக்க, ப.சி.போன்ற விவரம் தெரிஞ்சவங்களே என்ன கேஸ்னு படிக்காமல் தன் மகளை அனாவசியமா 6 மாசத்துக்கு மேலே உள்ளே வச்சிட்டாங் களேன்னு கலைஞருக்கும் அவரோட குடும்பத்தின ருக்கும் ரொம்ப வருத்தம். சி.பி.ஐ ஒன்றும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இல்லைன்னு ப.சி பேசி யிருக்காரு. ஆனா, பிரதமரும் ப.சி.யும் சி.பி.ஐ.க்கு கூடுதல் அதிகாரங்கள் கொடுக்க மறுப்பதோடு, தணிக்கைத்துறை மத்திய அரசின் பாலிசி மேட் டரில் தலையிடக்கூடாதுன்னு பேசியிருக்காங்க. இது பற்றித்தான் டெல்லி உயர்மட்டங்களில் பேச்சு.''


""அவங்க இரண்டு பேருக்கும் வந்தால் ரத்தம்… மற்றவங்களுக்குன்னா தக்காளி சட்னியா?''

""அடுத்த மேட்டரும்  கோர்ட் சம்பந்தப் பட்டதுதாங்க தலைவரே.. சொத்துக் குவிப்பு கேஸில் நீதிபதி பாலகிருஷ்ணாவேதான் நீடிக்க ணும்னு சுப்ரீம்கோர்ட்டில் ஜெ. தாக்கல் செய்த மனு 19-ந் தேதி விசாரணைக்கு வருது. பால கிருஷ்ணா ரிடையர்டாகி, முடிகவுடர் நியமிக்கப் பட்டு அதற்கப்புறம் மைக்கேல் டி குன்ஹா நீதிபதி யாயிட்டாரு. கர்நாடக அரசுத் தரப்போ, நீதிபதி பாலகிருஷ்ணாவே ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியா தொடர விருப்பமில்லைன்னு சொல்லிட்டாருன்னும் இது பற்றி ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதமாகவே கொடுத்துட்டாருன்னும் சொல்லுது. அந்தக் கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரமா சமர்ப்பிப்பாங்கன்னு தெரிய வருது. கர்நாடக அரசும் உயர்நீதிமன்றமும் தனக்கு சாதகமா இல்லைன்னு நினைக்கும் ஜெ., இந்தக் கடிதமும் சமர்ப்பிக்கப் பட்டால், தன் மீதான வழக்கை ஆந்திராவுக்கு மாற்ற வேண்டும்னு சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைக்க திட்டமிட்டிருக்காராம்.''

""அவசர சட்டமன்றம் கூட்டத் தொடர் நடந்த அன்னைக்கு திடீர்னு வண்டலூர் உயிரியல் பூங்கா வுக்குப்போய் விலங்குகளோடு நேரத்தை செலவிட்டி ருக்காரே ஜெ., என்ன திடீர் பயணம்?''

""சிறுதாவூர் பங்களாவிலிருந்து நேரா சட்டமன்றம் போவதாகத்தான் முதலில் திட்டம். அன்னைக்கு துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி சென்னைக்கு வந்ததால அவரை வரவேற்க ஏர்போர்ட் போக வேண்டியிருந்ததால், பயணத்திட்டம் மாறியது. எந்த ரூட்டில் போகிறோம்னு ஜெ. கேட்க, வண்டலூர் ரூட்டுன்னு அதிகாரிகள் சொல்ல, உடனே உயிரியல் பூங்காவுக்குப் போக ப்ளான் போடப்பட்டிருக்குது. ஊட்டியில் யானை முட்டித் தள்ளியதற்குப் பரிகாரமா மாதம் ஒரு முறை விலங்கு களுக்கு உணவு கொடுக்க ணும்னு ஜோசியர்கள் சொல்லியிருக்காங்களாம். அது தள்ளிக்கொண்டே போனதால இப்ப அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி யானை, புலி, மான் எல்லாத்துக் கும் உணவு கொடுத்துட்டு வந்திருக்காரு ஜெ. சில மாதங்களுக்கு முன் அவர் பேர் வைத்த புலிக்குட்டிகளில் இரண்டு இறந்துபோனது பற்றியும் விசாரித்திருக்காரு''. 


""ஜெ. தொடங்கி வைத்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் நடப்பு உலக சாம்பிய னான தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்துக்கும் நார்வேயின் கார்ல்சென்னுக்கும் புதன்கிழமை வரைக்கும் நடந்த 4 போட்டிகளும் டிராவில் முடிந்தது. மொத்தம் 12 போட்டிகள். ஆட்டம் எப்படிப்போகும்னு எதிர்பார்ப்பு உருவாகியிருக் குது. ஆனந்தோ, நான் நம்பர் ஒன்னாகவும் நடப்பு சாம்பியனாகவும் இருந்தாலும் கார்ல்சென்னின் காய்நகர்த்தல்கள் சர்ப்ப ரைஸாகவும் சவாலாகவும் இருக்குன்னு சொல்லியிருக்காரு.

""அரசாங்க வட்டாரத்தில் அந்தப் போட்டியின் தொடக்க விழா பற்றித்தான் இன்னமும் சொல்றாங்க தலை வரே.. பள்ளிக் கல்வித் துறையின் பொறுப் பில் போட்டி நடப்பதால அதன் செயலாளர் சபீதாதான் எல்லாத் திலும் டாமினேஷ னாம். தொடக்க நாள் அன்னைக்கு அந்தத் துறையின் அமைச்ச ரான வீரமணிகிட்டேயே கெடுபிடி காட்டியிருக்கிறார். அதுவும் சக ஐ.ஏ.எஸ். ஸான பூஜா குல்கர்னிகிட்டே இப்ப பாருங்கன்னு சொல்லிட்டு, வீரமணிகிட்டே போய், உங்க மாவட்டத்திலிருந்து ஆட்களைக் கூட்டிக்கிட்டு வந்து ஸ்டேடி யத்தை நிரப்புவதா சொன்னீங்களே, என்னாச்சு? மந்திரியா உங்க கடமையை செய்யவேண்டாமான்னு கேட்டிருக்கிறாரு. மந்திரி ரொம்ப நொந்துபோயிட்டாராம். இப்ப அவர்கிட்டேயிருந்த விளையாட்டுத் துறையும் பறிபோயிடிச்சி. ஏற்கனவே வைகைச்செல்வன் மாற்றப்பட்டப்பவும் சபீதாவின் கெடுபிடிகள்தான் காரணம்னு சொல்லப்பட்டது. செஸ் போட்டி தொடக்கவிழாவின் கலைநிகழ்ச்சியில் பரதநாட்டி யம் ஆடிய நடிகை ஷோபனா கிட்டேயும் சபீதா கெடுபிடி காட்ட அவர் இதை சி.எம். அலுவலகம் வரை கொண்டு போயிட்டாராம். செஸ் ஆட்டத்தைவிட சபீதாவின் ஆட் டம்தான் ஜோரா நடந்துக்கிட்டிருக்குதுன்னு துறையினரே புலம்புறாங்க.''

""ஒரு அரசியல்வாதியின் புலம்பல் பற்றி நான் சொல்றேன். பா.ஜ.கவோடு ம.தி.மு.க, தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணி சேர்க்க தீவிர முயற்சி எடுத்த தமிழருவி மணியனை கொஞ்ச நாட்களா சீனில் காணோம். என்னனு விசாரிச்சா, குடும்பத்தோடு ஆஸ்திரேலியா போயிட்டாராம். உள்ளூர் அரசியல் அவஸ்தை களுக்கு ஆஸ்திரேலியா க்ளைமேட்டே பெட்டர்னு சொல்றாராம்.''


 லாஸ்ட் புல்லட்!

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் வைகோ தலை மையில் ம.தி.மு.க.வினர் ரயில் மறியலில் ஈடுபட அவரது கட்சியினரும் நாம் தமிழர் கட்சியினரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்களை நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் தரப்பிலும் ரயில் மறியல் நடந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் 2000 பெண்கள் கலந்து கொண்ட ஒப்பாரிப் போராட்டம் நடந்தது.

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பு தொடர்பாக சத்யம் டி.வி.யில் நடந்த நேரலையில் ஒரு நேயர் போன் லைனில் வந்து ஜெ.வையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியையும் தரக் குறைவான வார்த்தைகளால் திட்ட, அது அப்படியே ஒளிபரப்பானதால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒளிபரப்பான புதன் இரவு டி.வி. ஓனரின் வீட்டைத் தேடி போலீஸ் படை சென்றது. மறுநாள் காலையில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

ad

ad