புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013

நெடுந்தீவு பிரதேச சபை தலைவரை சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என்று புகழாரம் சூட்டுகிறார் ஜிப்ரி
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரைச் சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி புகழாரம் சூட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனினும் கடந்த 26ஆம் திகதி காலையில் அவர் தனது வீட்டில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் வெளியில் சென்று வந்திருந்தார். அதன்படி தற்போது பொலிஸாரினால் குறித்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மிகவிரைவில் சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதேவேளை பிரேத பரிசோதனையினையில் அவரது தலையில் இருந்து 9 எம்.எம் தோட்டா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியவர் 5மீற்றர் தூரத்தில் இருந்தே மேற்கொண்டிருக்க வேண்டும் என வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.
எனவே தூரத்தில் இருந்து சுட்டதனாலேயே தோட்டா வெளியில் போகாமல் தலையில் இருந்துள்ளது. சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என்று புகழ்ந்தார் எஸ்.எஸ்.பி.
மேலும் தற்போது இராணுவம், பொலிஸாரைத் தவிர மற்றையவர்களிடம் ஆயுதம் இருக்க வாய்ப்பில்லை. எனவே இச்சம்பவத்துடன் அவர்கள் தொடர்பு பட்டிருக்கவில்லை எனின் யாழ்ப்பாணத்திலும் சட்டவிரோதமாக ஆயுத குழு ஒன்று இயங்குவதாக கூறுகிறீர்களா என்று கேட்ட போது,
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களை அரச அனுமதியுடன் பலர் வைத்திருக்கின்றார்கள் எனவே இச் சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
இதேவேளை, கடந்த 26ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அதன்படி அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது தலையின் பின்பக்கத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அதனையடுத்து பிரேத பிரிசோதனையிலேயே அவரது தலையில் இருந்து தோட்டா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதேச சபைக்கு இவர் கடந்த 2 மாதங்களாக செல்லவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தினம் சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad