புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

வடக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை நிறுத்துங்கள்! எச்சரிக்கும் இராணுவம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் தமிழர்களை ஆத்திரமடைய செய்துள்ளதாக சர்வதேச செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை நிறுத்துங்கள், இல்லை என்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என எச்சரிக்கும் செய்திகள், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் விடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் இதே செய்திகள் இரண்டு மாட்டு மண்டையோடுகளில் எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் செய்தித்தாள் அச்சிடும் இயந்திரங்கள் கொளுத்தப்பட்டன, தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தாம் இலங்கையின் எதிரிகளாகவே இன்னும் பார்க்கப்படுவதாக தமிழர்கள் உணர்கின்றனர்.
இந்த நிலையில், இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி வெகுவிரைவாக முன்னேற்றிச் செல்கிறது. இலங்கை அரசு நல்லிணக்க பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
அதேவேளை, நில ஆர்வலரான சோமசுந்திரம் சுகிர்தன் தெரிவிக்கையில்,
ஞாயிறு இரவு அன்று எனக்கு கிடைத்த தொலைபேசியில் கிடைத்த குறுஞ்செய்தியில் “ நாயே, நீ தொடர்ந்து போராடினால், என்ன நடக்கும் என்று தெரியுமா?. உன் தலை வெட்டப்பட்டு. உனது தலையில்லா உடல் உன் வீட்டுக்கு முன்னால் போடப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மறுதினம் காலையில், அவரது வீட்டின் கேட்டுக்கு அருகில் மாட்டின் மண்டையோடு போடப்படிருப்பதை கண்டார். ஆனால் இது இலங்கை இராணுவத்தினரின் மிரட்டல் நடவடிக்கையே என தான் நம்புவதாக சுகிர்தன் கூறினார்.
போருக்கு பின்னால் இலங்கையில் நிலப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.  இராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்களில் அரசாங்கம் சிங்களவர்களை குடியேற்ற முயற்சித்து வருகின்றது என்று தமிழ்த் தலைவர்கள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.
இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை தமிழர்கள் அல்லாத இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
உதவி கல்வி அதிகாரியான பி. முருகேசு என்பவர் கூறுகையில்,
“நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. நாங்கள் சமாதானத்தை விரும்புகிறவர்கள். எங்களுக்கும் தென்பகுதி மக்களை போன்று பாதுகாப்பான தீர்வுடன் வாழ்க்கை வேண்டும் என்றார்.
முருகேசு கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் ஆறுமுறை பல நகரங்களுக்கு இடையில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, வசதியான வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு, புதிய வர்த்தக நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இருந்த போதிலும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வீ. விக்னேஸ்வரன்,
இலங்கை அரசாங்கத்தின் இராணுவம், தமிழர் பகுதிகளில் நிலையாக தங்கியிருப்பது, தமிழர்களின் உரிமைகளை நசுக்கப்படுவதுடன் அவர்களின் நிலங்கள் பறிக்கப்படும்.  அத்துடன் வடக்கில் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்று கூறுகிறார்.
2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் பத்திரிகையின் அச்சகம் பெட்ரேல் ஊற்றி கொளுத்தப்பட்டது. அந்த பத்திரிகையின் ஆறு ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவற்கான நோக்கம் இல்லை என தெரிவிக்கும் இந்த பத்திரிகையின் உரிமையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன், இலங்கை அரசுக்கு ஒரு சுமூகமான தீர்வை கொண்டு வருவதற்கான விருப்பம் இல்லை எனவும் இதனால் சமாதானத்திற்கான வழியில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் மாகாண சபை எடுக்கும் முடிவுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரால், தடுக்கப்படுகின்றன.
அதேவேளை போருக்கு பின்னர் வடக்கில் நிரந்தரமான வலுவான இராணுவ பிரசன்னம் தேவையில்லை என தெரிவிக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், இது நீடித்தால் மேலும் வன்முறை சம்பவங்களுக்கு அது வழி வகுக்கும் என்று கூறியுள்ளதாக சர்வதேச செய்தி சேவை தெரிவித்துள்ளது.

ad

ad