புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2013

வவுனியா நகரசபையின் உள்ளூராட்சி வார நிகழ்வும் தேசிய வாசிப்பு மாதமும் நேற்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரராரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இ.இந்திரராஜா, தர்மபாலா செனவிரத்ன, ஜெயதிலக, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைத் தலைவர் சிவலிங்கம், ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர், நகரசபையின் முன்னாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம், வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சரின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் உள்ளிட்ட பெரும்மளவிலானோர் கலந்து கொண்டனர்.

நகரசபை எல்லைக்குள் காணப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த நூலக வாசிப்பாளர், நகரின் சிறந்த உணவகங்கள், சிறந்த கைத்தொழிற்சாலை, சிறந்த விடுதிகள் என்பனவும் இனங்காணப்பட்டு அதன் உரிமையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நகர பாடசாலைகளில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

வவுனியா நகரசபை நூலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமைக்காக அதன் ஊழியர்களும் கௌரவிக்கப்பட்துடன் கண்ணை கவரும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

ad

ad