புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2013


                ""ஹலோ தலைவரே... இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கான தேதி நெருங்க, நெருங்க இந்தியாவோட நிலை பற்றி பதட்டமும் அதிகரிச்சிக்கிட்டே இருந்ததைக் கவனிச்சீங்களா?''

""மத்தியில் அமைச்சர்களாக இருக்கிற காங்கிரஸ்காரர் களான ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி இவங்களெல்லாமும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துக்கக்கூடாதுன்னு வெளிப்படையா சொல்லியிருக் காங்களே..'' 

nakeeran
""ஜி.கே.வாசன்கிட்டே ஆரம்பிச்ச குரல் அப்படியே பரவிக்கிட்டிருக்குது. ப.சி.கூட இன்னும் எந்த முடிவும் எடுக்கலைன்னுதான் சொல்லிக்கிட்டிருந்தார்.  அக்டோபர் 31-ந் தேதி வியாழக்கிழமை டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஹை லெவல் கமிட்டி கூட்டத்திலும் நவம்பர் 7-ந் தேதி பிரதமர் வீட்டில் நடந்த கேபினட் மீட்டிங்கிலும் என்ன விவாதிக்கப் பட்டதுன்னு விசாரிச்சேங்க தலைவரே.. கட்சியோட ஹைலெவல் மீட்டிங்கில் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கலந்துக்கிட்டாங்களாம். அவங்க சொன்ன யோசனைகளைப் பரிசீலிச்ச ஹைலெவல் கமிட்டி, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துக்கணும்னு வலியுறுத்தியிருக்குது. ஆனா, தமிழக கட்சிகளிடமிருந்தும் தன்னோட அமைச்சரவை சகாக்கள்கிட்டேயிருந்தும் எதிர்ப்பு வருவதால  மாநாட்டில் கலந்துக்குவது சரியா இருக்காதுன்னு பிரதமர் நினைக்கிறாரு. அவருக்கு இலங்கைக்குப் போக விருப்பமில்லை. அத னால வெளியுறவுத்துறை ஒரு புது ஸ்ட்ராட்டஜியை சொல்லியிருக்குது.''



""என்னது?''

""இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரான விக்னேஸ்வரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதுதான் ஈழத்தமிழர் களுக்கு நல்லதுன்னும், மன்மோகன் சிங் இலங்கை வரும்போது வடக்கு மாகாணத்தையும் நேரில் பார்வை யிடணும்னும் கடிதம் எழுதியிருந் தாரு. இந்திய வெளியுறவு- உளவுத் துறைகளின் யோசனைப்படிதான் இந்த லெட்டர் அனுப்பப்பட்ட தாகவும் பேச்சு உண்டு. இந்த லெட்டரை அடிப்படையா வைத்து காமன்வெல்த் மாநாட்டில் மன் மோகன்சிங் கலந்துக்கிட்டு அப்படி யே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு தமிழர்களை சமாதானப்படுத்திடலாம்னும் ஹைலெவல் மீட்டிங்கில் ஆலோசிக் கப்பட்டிருக்குது. ஆனா, உறுதியான முடிவு எதுவும் எடுக்கப் படலை. ஏன்னா, தமிழக காங்கிரஸ் தலைகளிடமிருந்தே எதிர்ப்பு பலமானதுதான் காரணம். 7-ந் தேதி நடந்த கேபினட் மீட்டிங்கிலும் இதேரீதியில்தான் விவாதிச்சிருக்காங்க.'' 

""பிரதமர் மனநிலை என்ன?'

""தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதால் அவருக்குப் போக விருப்பமில்லை. பிரதமர் போகா விட்டால் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரியை அனுப்பலாம்னும் ஆலோசிக்கப்பட்டிருக்குது. ஆனால் அவரும் மறுத்துட்டாராம். யார் போனாலும் போகாவிட்டாலும் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கைப் பயணத்திற்கு ரெடியா இருக்காரு.  தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளிநாடு சென்றதால் இந்த கேபினட் மீட்டிங்கில் கலந்துக்கலை. இது போன்ற சூழல்களால் வியாழக்கிழமை நடந்த கேபினட் மீட்டிங்கிலும் எந்த முடிவும் எடுக்கப் படலை.  மறுநாள் ஹைலெவல் கமிட்டி கூட்டத்தில் பார்த்துக்கலாம்னு இருந்துட்டாங்க. காங்கிரஸ் கட்சிக்குள்ளே பல விதமான யோசனை கள் ஓடிக்கிட்டிருக்குது.''

""அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள்கூட தங்கள் வீட்டுத் திருமண விழாவுக்கு ஜெ.வை எப்படி அழைப்பது, அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாலும் அவர் வருவாரான்னு கடைசி நேரம் வரைக்கும் சஸ்பென்ஸாகவே இருக்குமேன்னு யோசிக்கிறாங்களாமே?''

""ஆமாங்க  தலைவரே.. .. தன்னைப் பற்றி கட்சி நிர்வாகிகள் யூகிக்க முடியாமல் சஸ்பென்ஸை மெயின்டெய்ன் செய்வது ஜெ.வின் வழக்கம். முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க் கள் கே.பி.கந்தன், வாலாஜா கணேசன், அண்ணா தொழிற்சங்கம் துளசிதாஸ் வீட்டுத் திருமணங் களை ஜெ.தான் நடத்தி வைப்பதா இருந்தது. ஆனா ஜெ. இதுக்கு சம்மதிக்கலை. திருமண விழாவில் ஜெயக்குமாரைப் பற்றி நாலு வார்த்தை நல்லதா பேசியாகணும்ங்கிறதால மொத்தமா எல்லா கல்யாணத்தையும் ஜெ. புறக்கணிச்சிட்டா ருன்னு அ.தி.மு.க வட்டாரத்தில் சொல்றாங்க.''

""எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் வீட்டுத் திருமண வரவேற்பை மட்டும்  தன் தலைமையில் நடத்தித் தருவதா ஜெ. சொல்லியனுப்பினாராமே?''

""அந்தக் கொடுப்பினைகூட முன்னாள் சபாவான ஜெயக்குமாருக்கு இல்லை. எம்.எல்.ஏ. கந்தன் வீட்டுத் திருமணம் 7-ந் தேதி திருவான்மியூரில் நடந்தது. மறுநாள் வரவேற்பு விழா. ஏரியாவையே அதகளம் பண்ணிட்டாங்க. பொதுமக்கள், பள்ளிப்பிள்ளைகள் எல்லோரிடமும் ஜெ.வின் பாதுகாப்புங்கிற பேரிலே போலீஸ் அநியாயத்துக்கு கெடுபிடி காட்டியது. அந்த ஏரியாவில் இருந்த கையேந்தி பவன்களைக்கூட விட்டுவைக்கலை. அதுமட்டு மில்ல.. அந்தப் பகுதியில் மரங்கள் அதிகம். விழா ஏற்பாட்டுக்காக அதையும் சேதம் பண்ணிட்டாங்க. ஜெ. வந்துபோகும் வரைக்கும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, எம்.எல்.ஏ. தரப்புக்கும் டென்ஷன் தான். அடுத்ததா மந்திரிகள் செந் தூர்பாண்டியன், சண்முகநாதன், பழனிச்சாமி வீட் டுத் திருமணங்களை ஜெ. நடத்தி வைக்கிறாரு. அதற்கான ஏற்பாடுகள் ஜோரா நடந்துக்கிட்டிருக் குதுங்க தலைவரே.''…

""2ஜி சம்பந்தமா விசாரித்த ஜே.பி.சி.யில் என்னதான் நடக்குது? எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியும் ஆ.ராசாவை நேரில் அழைத்து வாக்குமூலம் வாங்கலை. அவர் எழுத்துப்பூர்வமா கொடுத்த வாக்குமூலத்தையும் ஜே.பி.சி. அறிக்கையில் பின் இணைப்பா சேர்க்கலை. இது சம்பந்தமா நாடாளுமன்ற சபாநாயகருக்கு காரசாரமா கடிதம் எழுதியிருக் காரே ஆ.ராசா?''

""ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாதான் பிரதமருக்கு தவறா வழிகாட்டுனாருன்னு  காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமையி லான ஜே.பி.சி. அறிக்கை சொல்லுது. ஆ.ராசா வோ தன் துறையின் அத்தனை நடவடிக்கை களையும் பிரதமர், நிதியமைச்சர், அவங்க இருவரின் அமைச்சகத்தோடு ஆலோசித்து தான் எடுக்கப்பட்டதுன்னு உரிய ஆவணங் களோடு பதில் கொடுத்திருக்காரு. அப்படியிருந் தும் அந்தப் பதிலை ஜே.பி.சி. அறிக்கையில்  இணைக்கலை. அதைத்தான் சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் மூலம் தெரிவிச்சிருக் கிறார் ஆ.ராசா. ஜே.பி.சி.யின் அறிக்கை முழுக்க முழுக்க அரசியல் கண்ணோட் டத்திலேயே இருக்குதுன்னும் அது அரைவேக்காட்டுத்தனமானதுன்னும்  காரசாரமா எழுதியிருக்காரு. அது மட்டுமில்லீங்க தலைவரே.. ஜே.பி.சி. அறிக்கை மேலே பார்லிமெண்ட்டில் விவாதம் நடந்தால் அதில் பதில் தர தனக்கு அனுமதி கொடுக் கணும்னும் சபாநாயகர் கிட்டே ஆ.ராசா கேட்கப்போறாராம்.''

""அவரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தன்னோட வண்டவாளங்கள் வெளியே தெரிஞ் சிடக்கூடாதுங்கிற  ஒரே நோக்கத்தில் உண்மைகளைப் புதைச்சிக்கிட்டிருக்குது.  அதிகார பலம் அப்படி!''

""காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாதுங்கிறதுக்காக சேலம் வருமானவரித்துறை அலுவலக வளாகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் தொண்டர்கள் ஒரு சாக்குத்துணியில் நெருப்பு பற்ற வைத்து வீசியதற்காக அந்த இயக்கத்தின் தலைவர் கொளத் தூர் மணியை என்.எஸ்.ஏவில் போட்டிருக்குது ஜெ. அரசு.  இனிமேல் யாரும் போராட்டக்களத் தில் இறங்கக்கூடாதுங்கிற எச்சரிக்கைதான் கொளத்தூர் மணி மீதான என்.எஸ்.ஏ.வாம். போ ராட்டங்களுக்குத் திட்டமிட்டிருக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் அவர்களை ஆதரிக்கிற தலைவர்களுக்கும் சேர்த்துதான் இந்த எச்சரிக்கை.'' 

""வைகோவும் கைது செய்யப்படலாம்னும் அவர் மீதும் கடுமையான சட்டங்கள் பாயும்னும் பேச்சு கிளம்புதே?''

""ஆட்சியில் யார் இருந்தாலும் இதுபோன்ற போராட்டங்களை சட்டங்கள் மூலமாகவும் காவல்துறை மூலமாகவும் ஒடுக்குவது வழக்கம்தான். திருமங்கலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகத் தானே வைகோ மேலே ஜெ. அரசு பொடா சட்டத்தைப் பாய்ச்சியது!  தி.மு.க ஆட்சியில்கூட ஈழ விவகாரம் தொடர்பா வைகோவை கைது செய்யச் சொல்லி மேலிட உத்தரவு வந்தது. பேச் சுக்காக கைது செய்யவேண்டாம்னு அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அந்த சமயத்தில்தான் முத்துக்குமார் தீக்குளித்த கொடூர சம்பவம் நடந்தது. அதிகாரிகளிடம் கலைஞர், நீங்க வைகோவை கைது செய்திருந்தால் கவனம் எல்லாம் அந்தப் பக்கம் திரும்பியிருக்கும். முத்துக்குமாரோட உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. அதனால ஏற்பட்ட பதட்டமும் உருவாகியிருக்காதுன்னு சொன்னா ராம். அதிகாரிகள் தலையாட்டினாங்களாம். இப்போது கொளத்தூர் மணி மீதான என்.எஸ்.ஏ. பாய்ச்சல்''.  

""அதிகாரம் ரொம்பவும் போதையானதுப்பா''.… 

""தலைவரே… தமிழ்நாட்டில் ஒரு காக்கி அதிகாரி அப்படித்தான்  ஆட்டம்  போடுறதா அவரது துறையில் உள்ளவங்களே சொல்றாங்க. விழுப்புரம் டி.ஐ.ஜி முருகன்தான் அந்த அதிகாரி. புதுசா ஒரு சாஃப்ட் வேர் வாங்கியிருக்காராம். அதன் மூலமா மொபைல் போன்களின் இன்கமிங், அவுட் கோயிங் கால்கள், அதன் லொகேஷன் எல்லாத்தை யும் தெரிஞ்சிக்கலாமாம்.  இப்படிப்பட்ட வசதிகளை வைத்து தீவிரவாதிகள், குற்றவாளிகள் இவங்களை ட்ரேஸ் பண்ணுவதுதான் போலீஸ் அதிகாரிகளின் வழக்கம். ஆனால் முருகனோ, தனக்கு ஆகாத கீழ்நிலை அதிகாரிகளை வேவு பார்க்கிறாராம். குறிப்பா, பெண் டி.எஸ்.பி,  இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ இவங்களோட லொகேஷன்களை கண்டுபிடிச் சிட்டு, ஓப்பன் மைக்கில் திட்டிக்கிட்டிருக்காராம். நொந்து போயிருக் கும் காக்கி அதிகாரிகள் இப்ப டி.ஐ.ஜியின் மொபைலை ட்ரேஸ் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. டி.ஐ.ஜி முருகனின் மொபைல் அடிக்கடி நெய்வேலி பக்கம் லொகேஷன் காட்டுதாம். விழுப்புரம் சரகம்ங்கிறது நெய்வேலி மட்டும்தானான்னு போலீஸ் அதிகாரிகள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாங்க.''

""சினிமா தொழிலாளர் சங்கமான ஃபெப்சி யின் நிர்வாகிகள் ஜெ.வை சந்திச்சிட்டு சிரித்த முகத்தோடு பேட்டி கொடுத்தாங்களே.. அவங்க கோரிக்கைகளெல்லாம் நிறைவேறிடிச்சா?''


""கோரிக்கையை சொல்வதில்கூட ரொம்ப பவ்யம் காட்டி, வெற்றித்திருமகளிடம் வேண்டு கோள் பேரணின்னு பேனர் பிடிச்சிக்கிட்டு, ஜெ. படமும் அவர் நடித்த படத்தில் இடம்பெற்ற பாட்டுகளுக்கு ஆட்டமுமாகத்தான் ஃபெப்சி அமைப்பினர் ஊர்வலம் நடத்தினாங்க. கோரிக்கையோடு அதன் நிர்வாகிகள் கோட்டைக்குப்போக, அங்கே ஜெ.வோ ஃபெப்சி ஆட் களால் என்னென்ன விதமான சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகியிருக்குங்கிற ரிப்போர்ட்டோடு காத்திருந்திருக்கிறார். என்ன இதெல்லாம்னு ஃபெப்சி தலைவரான டைரக்டர் அமீர்கிட்டே குரலை உயர்த்திக்கேட்க, சரி பண்ணிக்கிறோம்னு அடக்கமா சொல்லிட்டு வந்திருக்கும் நிர்வாகிகள், தங்களோட கோரிக்கைகள் நிறைவேறும்ங் கிற நம்பிக்கையோடு இருக்காங்க.'' 

""நானும் கோட்டைத் தகவல்ளோடுதான் லைனில் காத்துக்கிட்டிருக்கேன். எல்லா அமைச்சர்களும் ஏற்காட்டில் முகாமிட்டிருப்பதால் கோட்டையில் அவங்க துறை அலுவலகங்களெல்லாம் வெறிச்சோடி கிடக்குது. முதல்வர் அலுவலகத்தி லிருந்து கேட்கும் தகவல்களை மட்டும்தான் அதிகாரிகள் எடுத்துக்கொடுக்கு றாங்க. மற்ற வேலைகள் எதுவும் நடக்கிறதேயில்லை. பள்ளிக்கல்வித்துறையில் 3000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, கால்நடைத்துறையில் சினை ஊசி கொள்முதல் செய்வது உள்பட பல ஃபைல்கள் தேங்கியே கிடக்குது.  ஜெ. அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்து றார். மந்திரிகளெல்லாம் மலையேறிட்டாங்க.'' 

 லாஸ்ட் புல்லட்!

தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடக்குவது, அல்லது பெயருக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கிவைப்பது என்பதில் தெளிவாக இருக்கும் ஜெ, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மட்டும் நேரில் சென்று கொடியசைத்து சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதுவும் தி.மு.க ஆட்சியில் தொடங்கி மத்திய அரசின் துணையுடன் செயல்படுத்தப்பட்ட திட்டம்தான்.  இதில், தான் கலந்துகொள்ளாவிட்டால் மத்திய ரயில்வே அமைச்சரை அழைத்து கொடியசைத்துவிடுவார்கள் என்பதால்தான் நேரில் கலந்துகொண்டார் ஜெ. என்கிறது கோட்டைத் தரப்பு.

பா.ஜ.கவின் தமிழக நிர்வாகிகள் தங்கள் கட்சியின் மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என இவர்கள் சொல்வதற்கு நேரெதிரான நிலையில் இருக்கிறது பா.ஜ.க மேலிடம். ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி பா.ஜ.க.வை ஆதரிக்கும் வைகோ, தமிழருவி மணியன் போன்றவர்களும் பா.ஜ.க மேலிடம் தங்கள் நிலையைக் கண்டுகொள்ளவேயில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர். மேலிடத்திடம் நிலைமையை விளக்க பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், கே.என்.லட்சுமணன் மூவரும் டெல்லிக்குப்  பறந்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில்  தீண்டாமைக் கொடுமை கடைப்பிடிக்கப்படுவதாக தோழமை என்ற அமைப்பு தலைமைச் செயலாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சுப்ரீம்கோர்ட் வரை செல்லும் திட்டமும் உள்ளதாம்.

காமன்வெல்த் மாநாட்டில் எந்தெந்த ஊடகவியலாளர்களை அனுமதிக்கக்கூடாது என ஒரு கறுப்புப்பட்டியலைத் தயாரித்து மகிந்த ராஜபக்சேவிடம் கொடுத்துள்ளார் கோத்தபய ராஜபக்சே. 15 பெயர்களைக் கொண்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஈழப்போர்க் கொடூரங்களை ஆவணப்படமாக சேனல்4ல் வெளியிட்ட கெல்லம் மெக்ரே.

ad

ad