புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகிறது!
தஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர், விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad