புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013




          பா.ஜ.கவினர் கடந்த சில தினங்களாக மோடியை தொழுவதற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து அவர்களே மறந்துபோன வாஜ்பாயியை தொழுது கொண்டிருக்கிறார்கள். சச்சின்
டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுத்ததை ஓட்டி வாஜ்பாயிக்கும் அவ்விருதை கொடுக்க வேண்டும் என்று முழங்கிக்கொண்டிருக் கிறார்கள். மோடியின் புனித பிம்பத்தின் மீது புதிய கறை ஒன்று சில தினங்களுக்கு முன்பு படிந்திருப்பதால் அதை மறைக்க திடீரென வாஜ்பாயின் புனித பிம்பத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். மோடியை தொழுவதை முழுநேர வேலையாக வைத்திருக்கும் ஊடகங்களும் மோடியின் அரசு மீது சொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை பேசாமல் தவிர்ப்பதற்காக பாரத ரத்னா விவகாரத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் மோடி அவ்வளவு சுலபமாக தப்பக்கூடிய விவகாரமல்ல அது.

கோப்ரா போஸ்ட், குலைல் ஆகிய புலனாய்வு இணையதளங்கள்  குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா மேலிட உத்தரவின்பேரில் காவல்துறை, உளவுத் துறை, பயங்கரவாத தடுப்புப் படை ஆகியவற்றைப் பயன்படுத்தி பெங்களூரைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளரான ஒரு 20 வயது இளம் பெண்ணை வேவு பார்த்ததற்கான ஆதாரங்களை சமீபத்தில் வெளியிட்டன. மோடி காவல் துறையை எவ்வளவு தூரம் தனது சட்ட விரோத நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். அவரது காவல்துறை நடத்திய போலி என்கவுன்ட்டர் வழக்குகள் இப்போது மோடியின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விவகாரம் என்பது தனிப்பட்ட விருப்பங்களுக்காக ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் எந்த அளவிற்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகின்றன.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த காவல்துறை உயரதிகாரி ஜி.எல்.சிங்கால் இப்போது சி.பி.ஐ.யுடன் ஒத்துழைத்து வருகிறார். இந்த வழக்கில் கடந்த ஜூன் 9ஆம் தேதி சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்தபோது அத னுடன் சிங்கால் கொடுத்த இரண்டு பென் ட்ரைவ் களையும் இணைத்திருந்தது. அந்த பென் ட்ரைவில் 2009-ல் சிங்கால் குஜராத்தில் காவல் துறை உதவி ஆணையராக இருந்த போது அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவருக்கும் இடையே நடந்த 267 தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் இருந்தன. இந்த அமித் ஷா குஜராத் முதல்வரின் வலதுகரமாகச் செயல்பட்டவர். சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். "குஜராத் மாநிலத்துக்குச் செல்லக் கூடாது' என்ற நிபந்தனையுடன், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதனால் மோடி இவரை, உ.பி., மாநிலத்துக்கான பா.ஜ.க. மேலிட பொறுப்பாளராக  நியமிக்க உதவினார். இந்த அளவு செல்வாக்கு மிக்க மனிதர் காவல்துறையை ஒரு கீழ்த்தரமான வேலைக்கு பயன்படுத்திய விவகாரம் தான் இப்போது வெடித்திருக்கிறது. சி.பி.ஐ.யினால் தாக்கல் செய்யப்பட்ட அந்த தொலைபேசி உரையாடல்கள் தான் இப்போது வெளிவந்து பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றன. 

ஊடகங்கள் மாதுரி என புனைப்பெயர் சூட்டி யுள்ள பெங்களூரைச் சேர்ந்த அந்தப் பெண் பொறி யாளரை 2009-ம் ஆண்டில் காவல் துறையினரின் உதவியுடன் அமித் ஷா உளவு பார்த்துள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால் தலைமையிலான போலீஸார் அந்தப் பெண்ணை விமான நிலையம், ஹோட்டல், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக்கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின் தொ டர்ந்துள்ளனர். அந்தப் பெண் விமானத்தில் பயணம் செய்யும் போதுகூடமாறு வேடத்தில் காவல் துறையினர் கூடவே பின்தொடர்ந்துள்ள னர். அந்த பெண் அவரது குறிப்பிட்ட ஆண் நண்பரை சந்திக்கிறாரா என்பது குறித்து அமித்ஷா திரும்பத் திரும்ப சிங்காலிடம் கேட் கிறார். இந்த உளவு பார்க்கும் பணியை தனக்கு மேலே இருக்கும் சக்திவாய்ந்த ஒருவரின் உத்தர வின் பேரில் செய்வதாகவும் அவரை ‘சாஹேப்’ என்றும் அமித்ஷா அழைக்கிறார். மோடியின் அரசாங்கத்தில் நம்பர் 2-வாக இருந்தவர் அமித் ஷா. அப்படியெனில் அவரைவிட சக்தி வாய்ந்த நபர் யாராக இருக்கக்கூடும? சிங்காலின் உளவுப் படையினர் சரியாக தகவல் தராதபோது அமித் ஷா சிங்காலை கடுமையாகக் கண்டிக்கிறார்.

""உங்கள் ஆட்கள் சரியாக வேலை செய்ய வில்லை. சாஹேப்பின் தனிப்பட்ட உளவாளிகள் அந்த பெண்ணும் அவரது நண்பரும் இப்போது தான் வெளியே போவதைப் பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்...அதேபோல அவர் கள் உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டதாக அங்கிருந்து சாஹேப்பிற்கு தகவல் வந்திருக்கிறது. ஆனால் உங்கள் ஆட்களிடமிருந்து எந்த செய்தியும் இல்லை''’என்று கடிந்துகொள்கிறார். சிங்கால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார். ஆனால் அமித் ஷாவிற்கும் தனக்கு மான அத்தனை தொலைபேசி உரையாடல்களை யும் செல்போனில் பதிவு செய்துகொள்கிறார். 

ஒரு இளம் பெண்ணை அரசு இயந்திரத் தைப் பயன்படுத்தி உளவறியும்படி அமித் ஷாவுக்கு உத்தரவிடும் அளவிற்கு அதிகாரம் படைத்த அந்த சாஹேப் யார்? அந்த சாஹேப் மோடியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை யாரும் வெளிப்படையாகக் கூறத் தயங்கிக் கொண் டிருந்த  வேளையில் பா.ஜ.க.வினர் மாதுரியின் தந்தை ப்ரன்லால் சோனியிடமிருந்து அவசர அவசரமாக ஒரு கடிதத்தை வாங்கி வெளியிட்ட னர். அதில் அவர் தெளிவாகக் கூறுகிறார். "உடல் நலமில்லாமல் மருத்துவமனையிலிருந்த தன் அம்மாவைப் பார்க்க மாதுரி அகால வேளையில் செல்ல வேண்டியிருந்தது. எனவே அவருக்குப் பாதுகாப்பு தரும்படி எங்கள் நெடுங்கால குடும்ப நண்பரான நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண் டேன்.’’ஆக மாதுரியின் பாதுகாப்பிற்காக உளவுத் துறை, பயங்கரவாத தடுப்புப் படை, காவல்துறை மட்டுமல்ல தனது தனிப்பட்ட உளவுப் படையை யும் பயன்படுத்திய அந்த சாஹேப் சாட்சாத் நரேந்திரமோடிதான்' என்பதை பெண்ணின் தந்தையே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். பா.ஜ.க.வும் இதை மறுக்கவில்லை. "அந்தப் பெண்ணிற்கு பாதுகாப்பளிக்கவே உளவு பார்த்தோம்' என்று தெளிவாகக் கூறுகிறார்கள். 



ஒரு பெண்ணிற்கு அகாலவேளையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றால் அதிகபட்சம் ஒரு கான்ஸ்டபிளை உடன் அனுப்பலாம். ஆனால் அந்தப் பெண்ணின் டெலிபோன் உரையாடலை ஏன் ஒட்டுக் கேட்கிறார்கள்? அந்த பெண் என்ன பயங்கரவாதியா? சாஹேப் என்று அழைக்கப்படும் அந்த சக்தி மிக்க மர்ம மனிதருக்கு அந்தப் பெண்மேல் அப்படி என்ன ஆர்வம்? அந்த பெண்ணுடன் அவரது ஆண் நண்பர் ஒருவரையும் கண்காணிக்கும்படி அமித்ஷா உத்தர விட்டார். இந்த தொலைபேசி உரையாடல்களில் அந்த ஆண் நண்பரைப் பற்றிய பேச்சு அடிக்கடி இடம் பெறுகிறது.  அவர் யார்?  இங்கேதான் ஒரு முக்கிய மான ஃப்ளாஷ் பேக் இருக்கிறது.


2009-ல் பவன்நகர் முனிசிபல் கமிஷனராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ப்ரதீப் சர்மா. மாதுரி யை குஜராத் அரசாங்கம் பின்தொடர்ந்த விவகாரம் நடைபெற்ற மூன்று மாதத்திற்குப்பிறகு இவர் பல்வேறு பொய்க்குற்றச்சாட்டுகளின்கீழ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட் டார். அப்போது, தான் நிரபராதி என நிரூபிக்கும் விதமாக அவர் 2011-ல் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனு ஒரு முக்கியமான மர்மக் கதையை சொன்னது. பின்னர் அதில் சில இடங்களை நீக்குமாறு உத்தரவிடப்பட்டபோதும் இந்தக் கதையைச் சொல்லும் அந்த மனு இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

2005-ல் ப்ரதீப் சர்மா குட்ஜ் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்தார். அப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட புஜ் நகரத்தினை அழகுபடுத்துவதற் காக ஏராளமான திட்டங்களை மேற்கொள்ள அர சாங்கத்தால் நியமிக்கப்பட்டார். அப்போது மலைப் பூங்கா ஒன்றை அமைப்பதற்காக கட்டிட கலைஞரான பெங்களூரைச் சேர்ந்த மான்ஸி சோனி என்ற கட்டி டக் கலைஞரை ப்ரதீப்  நியமித்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மலைப்பூங்காவை திறந்து வைப்பதற் காக புஜ் நகருக்கு வந்த போது ப்ரதீப் சர்மா, மான்ஸி சோனியை மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். மோடி மான்ஸியின் பணியை மிகவும் பாராட்டினார். அதற்குப் பிறகு பெங்களூரு திரும்பும் மான்ஸி, மோடி தொ டர்ந்து தன்னுடன் தொலைபேசியில் பேசி வருவதை தனது நண்பரான ப்ரதீப் சர்மாவிடம் குறிப்பிடுகிறார். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருப்பதை ப்ரதீப் சர்மா சில பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கவனித்திருக்கிறார். மான்ஸியிடம் இருந்து போன் வந்தால் அவர் அதிகாரிகளின் கூட்டத்திலிருந்துகூட வெளியே சென்று பேசுவார். இதெல்லாம் ப்ரதீப் ஷர்மாவுக் குத் தெரியும் என்பதால்தான் அது மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் என்ற அடிப் படையில் அவர்மீது இந்த பொய்க் குற்றச்சாட்டு கள் சுமத்தப்படுகின்றன.’’ இப்படிப் போகிறது ப்ரதீப் ஷர்மாவினால் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு. (ஆதாரம். http://www.truthofgujarat.com)

அந்த மான்ஸி சோனியும் இப்போது மாதுரி என்று அழைக்கப்படுபவரும் ஒரே நபர்தானா? உங்களுக்கு இதைப் புரிந்துகொள்ள பெரிய புத்திசாலித்தனமெதுவும் தேவையில்லை. மும்பை மிரர் இதழ் இந்தக் கதையை இன்னும் கொஞ்சம் ஆழமாக விவரிக்கிறது. 

ப்ரதீப் சர்மா சாஹேப்பிற்கு தனது சிநேகிதியான மாதுரியை அறிமுகப்படுத்தி வைத்த பிறகு சாஹேப்பிற்கும் மாதுரிக்கும் நெருக்கமான நட்பு வளர்கிறது. சாஹேப் ....3400 என முடியும் தனது அந்தரங்க ரகசிய தொலைபேசி எண்ணை மாதுரிக்கு கொடுக்கிறார். எந்த நேரம் வேண்டு மானாலும் இந்த எண்ணில் தன்னை அழைக்கலாம் என்கிறார். தொடர்ந்து பேசுகிறார்கள். உச்சக்கட்ட மாக ஒரு நாளில் 18 முறை இருவரும் பேசி யிருப்பதை தொலைபேசி பதிவுகள் காட்டுகின்றன. இதையெல்லாம் தனது நண்பரான குட்ஜ் கலெக்டர் ப்ரதீப் சர்மாவிடம் மாதுரி பகிர்ந்து கொள்கிறார். சாஹேப்பிடம் இருந்து வந்த எஸ்.எம்.எஸ்களையும் ப்ரதீப்பிடம் காட்டுகிறார். ப்ரதீப் அந்த ரகசிய எண்ணை தனது செல்போனில் பதிவு செய்துகொள்கிறார்.

இதற்கிடையில் மாதுரிமேல் சாஹேப்பின் ஈடுபாடு அதிகரிக்கிறது. பொது இடங்களில் தனது இமேஜ் பாதிக் கப்படாமல் அப்பாவும் பெண் ணும்போல் நடந்துகொள்ள சாஹேப் மாதுரியிடம் வலி யுறுத்துகிறார். இது ப்ரதீப் பிற்கு தெரியவருகிறது. 2009-ல் ஒரு நாள் ப்ரதீப், சாஹேப்பின் ரகசிய எண் ணிற்கு போன் செய்கிறார். தனது ரகசிய எண்ணில் யாரோ ஒருவரின் மிஸ்டு கால் பார்த்து சாஹேப் அதிர்ச்சியடைந்து விசா ரிக்கிறார். அது ப்ரதீப் என்று தெரிகிறது. ப்ரதீப்பின் நம்பர் கண் காணிக்கப்படுகிறது. அப் போதுதான் ப்ரதீப் சர்மாவும் மாதுரியும் நெருக்கமான நட்பில் இருப்பது தெரிய வருகிறது. சாஹேப் ஆத்திர மடைகிறார். மாதுரியையும் ப்ரதீப் சர்மாவையும் கண் காணிக்கும்படி அமித் ஷா விற்கு உத்தரவிடுகிறார். சிங்கா லின் படை களமிறங்குகிறது. மாதுரியின் அத்தனை தொலை பேசி உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குப் போகிறது.

62 நாள் கண்காணிப் பிற்குப் பிறகு வேறொருவரை திருமணம் செய்துகொண்டு குஜராத்தைவிட்டே வெளி யேற மாதுரி ஒப்புக் கொண் டார். ப்ரதீப் சர்மா, சாஹேப் பின் அன்பிற்குரிய மாதுரியை நேசித்த பாவத்திற்காக பொய்க் குற்றச்சாட்டில் கிரி மினல் வழக்கு பதிவு செய் யப்பட்டு பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.’’ இது தான் மும்பை மிரர் சொல்லும் கதை.

ஒரு நபரை ஒரு அர சாங்கம் கண்காணிக்க வேண்டு மென்றால் அவர்மீது குற்றம் சார்ந்த கடுமையான சந்தேகங் கள் இருக்க வேண்டும். மேலும் எழுத்துபூர்வமான உத்தரவு இல்லாமல் அதிகாரிகள் அத்தகைய கண்காணிக்கும் செயலை செய்ய முடியாது. ஆனால் வாய்மொழி உத்தரவு கள் வழியாகவே இவ்வளவு பெரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் எந்த முகாந்திரமும் இன்றி தனிநபர் ஒருவரின் தொலைபேசியை இப்படி ஒட்டுக்கேட்பது மிகக் கடுமையான குற்றம். ஒருவேளை ஒரு தந்தை தனது மகளை பாதுகாக்கும்படி கேட்டிருந்தால் அதற்காக அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்பது என்ன நியாயம்? ஒரு தந்தைக்குக்கூட தனது மகள் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் உரிமை இல்லை. அப்படிப்பட்ட கோரிக்கையை ஒரு அரசாங்கம் ஏற்கும் எனில் அது எத்தகைய கொடூரமான அரசாங்கமாக இருக்கும்? அந்த பெண் யாருடன் ஹோட்டலில் தங்குகிறார், யாருடன் உணவருந்துகிறார், எங்கே ஷாப்பிங் செல்கிறார் என அத்தனை இடங்களையும் பின்தொடர்ந்து கண்காணித்திருக்கின்றனர். மேலும் அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்கு அப்படி என்ன ஆபத்து இருந்தது? அவர் சுதந்திரமாக பெங்களூருக்கும் அஹமதாபாத்திற்கும் சென்று வந்துகொண்டிருந்த பெண்.

பா.ஜ.க.வினர் இதை பெண்களை பாதுகாக்கும் செயல் என்று சொல்வது அருவருப்பானது. பா.ஜ.க. தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசி அழைப்பு விவரங்களை காவல்துறையினர் கண்காணித்த விவகாரத்தில் பா.ஜ.க. எவ்வளவு ரகளை செய்தது? உங்கள் தலைவர்களுக்கு இருக்கும் உரிமை எதையும் உங்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் குடி மக்களுக்குத் தர மாட்டீர் களா? மோடியின் தீவிர ஆதரவாளரான பத்திரி கையாளர் மது கிஷ்வர் ‘""இஷ்ரத் ஜஹான் போல மாதுரி பயங்கரவாத சந்தேக நபராக இருந் திருக்கலாம். அவர் கிரி மினல் குற்றம் சாட்டப் பட்ட ப்ரதீப் சர்மாவிடம் தொடர்புகொண்டிருந்தார். அதனால் கண்காணிக் கப்பட்டிருக்கலாம்''’ என் கிறார். இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஒரு அப்பாவி பெண் என்பது நிரூபணமான பிறகும் இதுபோன்ற பொய்யை சொல்லத் துணிகின்றனர். நல்லவேளை மாதுரியை பயங்கரவாதி என இன்னும் சுட்டுக் கொல்ல வில்லை. மேலும் இத்தகைய ஒரு பாதுகாப்பை குஜராத்தில் உள்ள அத்தனை பெண்களுக்கும் அளிக்க மோடி தயாரா? 

காவல்துறை என்பது அரசாங்கத்தில் பொறுப்பு வகிப்பவர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. இந்த விவகாரத்தில் நமது அரசியல் சாசனம் தனி நபருக்கு அளிக்கும் உரிமை, பெண்களுக்கு அளிக்கும் உரிமை அனைத்தும் மீறப்பட்டிருக்கிறது. மோடி எத்தகைய ஒரு  அரசாங்கத்தை மக்களுக்குத் தருவார் என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம். இந்த தேசத்தின்மீது சட்டவிரோத பாசிச ஆட்சி ஒன்றிற்கு அனுமதி தரும்படி அவர் இப்போது மக்களை கேட்டுக்கொண்டிருக்கிறார். மோடி எந்த தலைமை பொறுப்பிற்கும் தான் தகுதியற்றவர் என்பதை மறுபடி மறுபடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

 உஷ்...!

கம்பம் தெற்கு போலீஸ்நிலையத்துக்கு கடந்த வாரம் திடீரென விசிட் அடித்தார், டி.எஸ்.பி. அப்போது, கையில் கவருடன் வந்த ஒருவர், ""இன்ஸ்பெக்டர் முபாவைப் பாக்கணும் சார்'' என டி.எஸ்.பி.யிடம் சொல்ல, என்ன விவரம் என அவர் கேட்க, ""மினிபஸ் உரிமையாளர் சங்கத்தில் இருந்து வரேங்க. தீபாவளிக்காக எங்க ஓனர் இந்த கவரைத் தந்துட்டு வரச் சொன்னார்''’என்று பொறுப்பாக பதில் கூறியிருக்கிறார். இதைக் கேட்டவுடன், டென்ஷன் ஆன டி.எஸ்.பி., கவர்க்காரர் மீது லஞ்சம் தரமுயன்றதாக வழக்குப் போட வைத்து, இன்ஸ்பெக்டரைக் கடுமையாகத் திட்டித்தீர்த்து விட்டாராம்! (லஞ்சத்தை டெலிவரி செஞ்சவர் மேல மட்டும்தான் வழக்கு போடு வாங்களா?)

ad

ad