புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013


விடியும் முன் - விமர்சனம்!

நாம் வாழ்கிற பூமி இவ்வளவு கொடூரமானதா என்ற கேள்வி சில படங்களைப் பார்க்கும்போது தோன்றும். அந்தக் கேள்வியை அதிக பயத்துடன் கேட்க வைக்கிறது விடியும் முன் திரைப்படம். சிறுமிகளை உடலுறவுக்காக பயன்படுத்திக் கொண்டு அவர்களை கொன்றுவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஒரு கொடூர காமுகன் தன் மகனாலே கொல்லப்படுவதை கடைசி காட்சி வரை பதைபதைப்புடன் திரையில் காட்டுகிறது விடியும் முன்.


தன் தந்தை சாவுக்கு காரணமான சிறுமியை(மாளவிகா) தேடி அலைகிறார் வில்லன் சின்னா(வினோத்). அந்த சிறுமியோடு வில்லன் கும்பலிடமிருந்து தப்பி ஓடுகிறார் ரேகா(பூஜா). விபச்சார தொழில் செய்துவரும் ரேகாவையும் அவருடன் இருக்கும் அந்த சிறுமியையும் தேடி அலைகிறது தந்தையின் மரணத்திற்காக பழிவாங்கத்துடிக்கும் சின்னாவின் டீம்.

ரேகாவிற்கு புரோக்கர் வேலை பார்க்கும் சிங்காரம்(அமரேந்தன்) என்றவனை கொன்றுவிடுவதாக சின்னா மிரட்ட,  புரோக்கர் சிங்காரம் இன்னொரு புரோக்கரான தன் நண்பன் லங்கனிடம் அந்த சிறுமியை கண்டுபிடிக்க யோசனை கேட்கிறான். ஒரு வழியாக பூஜா ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருப்பதை தெரிந்ததுகொண்டு ஸ்ரீரங்கம் புறப்படுகிறார்கள். இதன் பின்னணியில் பூஜா எப்படி விபச்சார தொழிலுக்கு வந்தார் என்பதும், அவருக்கும் அந்த சிறுமிக்கும் என்ன தொடர்பு என்பதும், ரேகாவுடன் இருக்கும் சிறுமி எப்படி புரோக்கர் சிங்காரத்திடம் சிக்கினாள் என்பதும் ஃபிளாஷ்பேக்கில்  சொல்லப்படுகிறது.

செக்ஸ் லீலைகள் புரிவதற்காக ஒரு சிறுமி வேண்டும் என சிறுமிகள் மீது காம வெறிபிடித்த பணக்காரன் கேட்க, ரேகா மூலம் ரௌடி கும்பல் தலைவனிடம் கேட்கிறார் சிங்காரம். கடத்தி வைக்கப்பட்ட சிறுமிகளில் ஒரு பெண்ணை தேர்தெடுத்துக்கொடுக்க, பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த சிறுமியை காமக்கொடூரனிடம் ரேகாவே ஒப்படைக்கிறாள். ஆனால் அடுத்தக் காட்சியில் அந்த காமக்கொடூரன் இறந்துகிடக்க ரேகாவையும், சிறுமியையும் வில்லன்கள் துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.


கொலைவெறியோடு வில்லன் கும்பல் துரத்திக்கொண்டிருக்க, சிறுமி அவர்கள் கைக்கு கிடைத்தாளா? அந்தக் காமக்கொடூரன் யாரால்? எப்படி? கொல்லப்பட்டான் என்பது மீதிக் கதை. இந்தப் படத்தில் இவர் தான் வில்லன் என நாம் முடிவெடுத்திருந்தாலும் அவரே க்ளைமாக்ஸில் ஹீரோவாக மாறுவது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி!

பூஜா நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும் அதே உணர்வுபூர்வமான நடிப்பு, கவர்ச்சியைப் பொருத்தவரை, இருக்கு ஆனா இல்ல! என்றே சொல்லவைக்கிறார். படபடவென பேசும் சிறுமி மாளவிகா மனதை ஈர்க்கும் அபார நடிப்பு. இமைக்காத கண்களோடு வசனங்கள் அதிகம் பேசாமல் வலம் வரும் வினோத்திற்கு இனி சீரியசான பல கதாபாத்திரங்கள்  தேடிவரும் என்பதில் ஆச்சரியம் இல்லை.


பின்னணி இசையில் சபாஷ் வாங்கினாலும் பாடல்களைப் பொருத்த வரையில் சுமார் என்றே சொல்ல வைக்கிறார் கிரிஷ் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்திற்கு பாடல்கள் தேவையில்லாததால் இயக்குனர் அதற்காக அதிகமாக உழைக்கவில்லை என்றே தெரிகிறது. வில்லத்தனமாக யோசிக்கும் ஜான் விஜய், பணத்திற்கு ஆசைப்பட்டு கடைசியில் அவர் கையை பாம்பு கடிப்பதும் நச்! ஸ்ரீரங்கம் சென்றதும் நாமம் போட்ட ஒருவர் ஒரு நாட்டி வேலை செய்கிறாரே... பேஷ் பேஷ்!

யோசித்துப் பார்ப்பதற்கே குலைநடுங்க வைக்கும் ஒரு விஷயத்தை, அதிகம் ஆபாசம் கலக்காமல், பரபரப்பான திரைக்கதையோடு கடைசி வரை சஸ்பென்ஸ் குறையாமல் படமாக எடுத்திருப்பதே இயக்குனர் பாலாஜி கே.குமாரின் பாதி சக்சஸ்! மீதி ரசிகர்களிடமே உள்ளது...

விடியும் முன் - கடைசி வரை குறையாத சஸ்பென்ஸ்!

ad

ad