புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2013




           விற்பனை செய்தால், அந்தப் பொருளை திருப்பி வாங்க முடியாது. அடமானம் வைத்தால் அந்தப் பொருளுக்கு வட்டி கட்ட வேண்டும்.

ஒத்தி வைத்தால் வட்டி; இல்லை வட்டிக் குப் பதிலாக, அந்தப் பொருளை ஒத்தி வாங்குபவன் அனு பவித்துக் கொள்ள லாம்.


இந்த விஷ யங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டபிறகுதான், தன் மனைவி சத்தியாவை, நண்பன் முகம்மது உசேனிடம், ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கு ஒத்தி வைத்தார் நாகலிங்கம்.

மதுரை பைக்காரா முத்துப்பட்டியில் வசிக்கும் கொத்தனார் நாகலிங்கத்திற்கும், எதிர்வீட்டில் வசித்த மணியின் மகள் சத்தியாவிற்கும் 7 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இரு மகன்கள் பிறந்தனர்.. தினக்கூலிகளாக இருந்தாலும் முதல் மூன்று வருடங்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல்தான் கடந்து போனது நாகலிங்கம்-சத்தியா காதல் கல்யாண வாழ்க்கை.

இரண்டு வருடம் முன்பு நாகலிங்கம் வீட்டிற்கு எதிர்வீடான பாண்டியம்மாள் காம்பவுண்டுக்கு குடிவந்தார் தென்காசி புளியங்குடிக்காரரான முகம்மது உசேன்.

எந்த நேரமும் 500 ரூபாய் நோட்டுகளோடு வலம் வந்த முகம்மது உசேனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் நாகலிங்கமும் சத்தியாவும். நாகலிங்கம் கேட்கும்போதெல்லாம் கடன் கொடுத்த முகம்மது உசேன், சத்தியாவுக்கு கேட்காமலே பணம் கொடுத்தார்.

இரண்டு மாதம் கடந்த பிறகுதான் நாகலிங்கத்தால் அந்த காட்சிகளைப் பார்க்க முடிந்தது. கொதித்துப் போனார். அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு மனைவி சத்தியாவிடம் கேட்டார். ""நம்ம ரெண்டுபேரும் காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். ரெண்டு பசங்களும் பிறந்துட்டாங்க. உசேன் என் ஃப்ரண்டு. பட்டப்பகல்ல அவன் கூட... வெட்கமா இல்லையா?''.

""அவரை என்னால  மறக்க முடியாது. அவரில்லாம இருக்க முடியாது. வேணும்னா ஒண்ணு செய். அவரை இந்த ஏரியாவை விட்டே போகச் சொல்லிரு!'' யோசனை சொன்னார் மனைவி.

இது நல்ல யோசனையாகப் பட்டது. இதுபற்றி நண்பன் உசேனிடம் பேசினார் நாகலிங்கம்.

""உனக்குத் தெரிஞ்சே உன் மனைவிக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன். அதை யெல்லாம் திருப்பிக் கேட்கலை. ஆனா நீ வாங்கின ஒன்றரை லட்சத்தை வட்டியோட கொடு! நான் போயிடுறேன்!'' உறுதியாகச் சொன்னார் உசேன்.

ஒரு வாரம் இப்படியே ஓடியது பேச்சு வார்த்தை. மறு வாரத்தில், சத்தியாவின் தந்தை மணி, அடுத்த வீட்டு சாத்தையா, சத்தியா ஆகியோர் முன்னிலையில் இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது. உடன் பாடும் ஏற்பட்டது. அதன்படி "உன்னிடம் நான் வாங்கிய ஒன்றரை லட்ச ரூபாய்க்காக என் மனைவி சத்தியாவை உன்னிடம் ஒத்தி வைக்கிறேன். பணத்தை கொடுத்துவிட்டு மீட்டுக் கொள்கிறேன். அதுவரை சத்தியா உனக்குரியவள்' என்று ஸ்டாம்ப் ஒட்டிய வெள்ளைக் காகிதத்தில் எழுதிக் கொடுத் தார் நாகலிங்கம். இதில் உசேனும் சத்தியாவும் கையெழுத்திட்டார்கள்.

தன் மகன்களையும் கூட்டிக் கொண்டு முகம்மது உசேனுடன் சந்தோஷமாகப் புறப்பட்டுச் சென்றார் சத்தியா.

இது நடந்தது 2012 அக்டோபரில்.

கடந்த ஒரு வருடமும் நாகலிங்கத்தை தனிமை வருத்தியது. தீபாவளிக்கு முதல் நாள் ஏதோ ஒரு துணிச்சலோடு புளியங் குடிக்குப் புறப்பட்டுப் போனார் நாகலிங்கம். அங்கே ஒரு வீட்டில் சத்தியாவும் பையன் களும் இருந்தனர். முகம்மது உசேன் புதிய நகைக்கடைகளைத் தேடிப் போயிருந்தார்.

""சத்தியா என் உசுரில்ல நீ... வா... இனிமே உன்னை பூ மாதிரி வச்சுக்கு வேன்...!'' சத்தியம் செய்தார் கெஞ்சினார், மிரட்டினார். காலிலும் விழுந்தார்.

""இப்பதான் நானும் என் பசங்களும் சந்தோஷமா இருக்கோம். போ... போய் விடு...!'' விரட்டினாள் சத்தியா.

வேதனையோடு வெளியே வந்த நாகலிங்கம், விளையாடிக் கொண்டிருந்த இளையமகன் சபரியை மட்டும் தூக்கிக் கொண்டு மதுரைக்கு வந்துவிட்டார்.

3.11.13 அன்று சின்ன வீடு திரும்பிய முகம்மது உசேனிடம் நடந்ததை சொன்னார் சத்தியா.

சத்தியாவையும் தனது சித்தி மகன் முகைதீனையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்தார் உசேன்.

மீண்டும் பாண்டியம் மாள் காம்பவுண்ட்டில் பஞ் சாயத்துக் கூடியது. பஞ்சா யத்துக்குக் கட்டுப்படாத நாகலிங்கம் ""டேய் இன்னும் ரெண்டே நாள்ல உன்னைக் கொன்னுட்டு என் பொண் டாட்டியோட வாழ்வேண் டா!'' சபதம் செய்துவிட்டு ஓட்டம் பிடித்தார் நாகலிங்கம்.

இதன்பிறகு ஏழெட்டு முறை, உசேனின் செல்போனிலிருந்து உசேனும், சத்தியாவும், சத்தியா அப்பா மணியும் நாகலிங்கத்திடம் ""சரி சரி வா... சமாதானமாகப் போகலாம்!'' என்று பேசி னார்கள். மசியவில்லை நாகலிங்கம்.

""சரி... இப்ப எங்கே இருக்கிறாய் சொல்லு... சத்தியாவைக் கொண்டாந்து ஒப்படைக்கிறேன்!'' உசேன் கெஞ்சினார்.

""மதுரா கல்லூரி சுப்பிரமணியபுரம் பாலத்தில நிக்கிறேன்!'' உண்மை சொல்லிவிட்டார் நாகலிங்கம்.

முகம்மது உசேனும் முகைதீனும், மணியும் சாத்தையாவும் அங்கே போனார்கள்.

தன்னிடமிருந்த கத்தியால் கழுத்தில் குத்தினார் உசேன். தன் பங்கிற்கு தானும் குத்தினான் முகைதீன். சத்தமில்லாமல் செத்து விழுந்தார் நாகலிங்கம்.

முகம்மது உசேனையும், சத்தியாவையும் தந்தை மணியை யும், சாத்தையாவையும் ரிமாண்ட் செய்து மதுரை சிறைக்கு அனுப்பிய ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் நம்மிடம், ""நாகலிங்கத்தின் செல்ஃபோனை வச்சு தான் குற்றவாளிகளைப் பிடித்தேன். நாகலிங்கம் கொல்லப் பட்டுவிட்டார். இல்லையென்றால் மனைவியை விற்ற குற்றத்திற்காக அவரையும் கைது செய்திருப்போம்!'' என்றார்.

அனாதைகளாய் நின்ற ஐந்து வயதையும் மூன்று வயதையும் தாண்டாத திருமுருகனையும் சபரியையும் பார்த்தபோது நம் விழிகளில் உதிரம் கசிந்தது.

அணுவைப் பிளந்து மின்சாரம் கறக்குமளவுக்கு, செவ்வாய்க்கிரக வாகனத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவும் அளவுக்கு விஞ்ஞானத்தில் வளர்ந்த நாம்... பண்பாட்டைத் தான் இழந்து கொண்டிருக்கிறோம்.                

ad

ad