புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2013



               மிழினப் படுகொலையை தலைமுறை தலைமுறைக்கும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் முள்ளிவாய்க்கால் முற்றம், அறிவிக்கப் பட்டதற்கு முன்பே, அவசர கோலத்தில் திறக்கப் பட்டதால், குழப்பத்தில் இருக்கிறார்கள் இன உணர்வாளர்கள்.


நவ.8-ஆம் தேதியன்று விளார் சாலையில் உள்ள முற்றத்தின் திறப்பு விழா நடத்தவும் ராம நாதன் மருத்துவமனை அருகில் உள்ள தமிழரசி மண்டபத்தில் 9,10 தேதிகளில் புத்தக வெளியீடு, கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும், உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. 

சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன் னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 4ஆம் தேதி புறப்பட்டு, முற்றத் திறப்பின்போது அங்கு சேரும்படி சுடர்ப் பயணமும் திட்டமிடப் பட்டது. தருமபுரியில் மட்டும் 144 தடை உத்தர வால், ரத்தானது. மற்ற 4 மாவட்டங்களில் தொடங் கப்பட்ட சுடர்ப்பயணங் கள் போலீசால் தடுக்கப் பட்டு, பங்கேற்ற மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். 



ஏற்கனவே, தமிழ் அமைப்புகளிடம் இருந் தும் முற்றக்குழுவுக்கு பலவாறான விமர்சனக் கணைகள் வந்து விழுந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில், அரசுத் தரப்பின் நெருக்கடியும் சேர்ந்துகொள்ள, திறப்புவிழாவுக்குத் தடங்கல் வந்துவிடாதபடி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியது, முற்ற அமைப்புக் குழு. முற்றப் பொறுப்பாளர் நெடுமாறனின் மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மாவட்ட நிர்வாகம், போலீசாரின் நிபந்தனைக்கு உட்பட்டு முற்றத்தைத் திறக்க கடந்த 5ஆம் தேதி அனுமதி அளித்தார். 

அதிகார மேலிடமோ, எப்படியாவது திறப்புவிழாவைத் தடுக்க வேண்டும் என்பதற் காக, நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. 

திறப்புவிழாவுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறை யீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜியே ஆஜராகி, "முற்றத் திறப்புவிழா அனுமதிக்காக மனு கொடுத்துள் ளனர். அது குறித்து, போலீசாரின் ஆய்வில் உள்ளது. ஆனால், அனு மதி தருவதற்கு முன்பாக வே, அவர்கள் நீதிமன் றத்தை நாடிவிட்டனர். மேலும், உள்ளூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும், மத்திய- மாநில உளவுத்துறைகளும், இதனால் பிரச்சினைகள் வரலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன'’எனக்கூறி, டிவிஷன் பெஞ்ச்சிடம், அனு மதியைத் தள்ளுபடி செய்யு மாறு வாதாடினார். ஆனால், இடைக்காலத் தடை வழங்க மறுத்த நீதிமன்றம், 7-ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தது.  

ஊராட்சியின் தீர்மானம் பற்றி அறிய, விளார் ஊராட்சித் தலைவர் சோமசுந்தரத்தைத் தொடர்புகொள்ள முயன்று, ஒருவழியாக செல்போனில்தான் அவரைப் பிடித்தோம். நம்மிடம், “ ""ஒரு வழக்கில் முற்றத்துக்கான அனுமதி, ஆக்கிரமிப்பு பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்டது. அதையடுத்துதான், ஆக்கிரமிப்பு இருந்தால் அதை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு, நீதிமன்றத்துக்குக் கொடுத்துள் ளோம்''’என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். 

மாவட்ட நிர்வாகம் அனு  மதி தராத நிலையில், 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு முற்றம் அமைந்துள்ள இடத்திற்கு வந்தார்கள், பழ.நெடுமாறன், ம. நடராஜன், பெ.மணியரசன், சி.பி.ஐ. மா.செ. திருஞானம் ஆகியோர். திடீரென சிவப்பு நாடாவைக் கட்ட... நெடுமாறன் அதை வெட்டி சம்பிரதாயமாகத் திறப்புவிழா அரங்கேறியது. பின்னர், சிலைகளுக்கு மாலை அணிவித்து, போட்டோவுக்கு போஸ் கொடுத் தனர். பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம், ""நெருக்கடிகள், தடைகளுக்காக இன்றே திறக்கப்பட்டு விட்டது. ஆனாலும் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களும் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடக்கும்''’என்றார், நெடுமாறன். 

தமிழின வரலாற்றின் முக்கியப் பதிவாக நடந்திருக்கவேண்டிய விழா, ஏதோ தகாத செயல் நடப்பது போல, நடத்தப்பட்டதே எனக் குமுறும் தமிழின உணர்வாளர்கள், ""எல்லாத்துக்கும் காரணம், இந்த நடராஜன்தான். ஜெயலலிதாவுக்கும் அவ ருக்கும் ஆகலைனு ஊருக்கே தெரியும். ஆனாலும், அவரை முன்னிலைப்படுத்தி யே இந்த முற்றம் மொத்தமும் உருவாக் கப்பட்டது. ரூ.8 கோடி யாவது இதுக்கு செல வாகியிருக்கும். இவ்வ ளவு பணமும் யார் தந்தது? ஜெயலலிதா வை நெடுமாறன் கோட்டையில போய் சந்திக்க முயற்சி நடந்த போதுகூட, அவருக்கு உரிய மரி யாதை கிடைக்கலை. காத்திருப்பு அவமானம்லாம் நடந்திருக்கு. ஆனா, திறப்பு விழாவுக்கு தடை ஏதும் சொல்ல லைனு இவங்களா நினைச்சு கிட்டு, வேலைகளைச் செஞ் சாங்க. என்ன ஆச்சு? சிறப்பா நடந்திருக்கவேண்டிய முற்றத் திறப்புவிழா, முடங்கிப் போனது போல ஆகிப்போச்சு''’என்று மனத்தாங் கலைக் கொட்டினார்கள்.   

நீலகிரியில் சுடர்ப்பயணம் தொடங்கி யதுமே கைதுசெய்யப்பட்ட சுடர்ப்பயணக் குழுவின் பிரபாகரன், கவுதமன் ஆகியோர், ""தனி மனிதரான நடராஜன் பெயரை தலை மைப் பொறுப்பில் போட்டதால்தான், ஆட்சியாளர்கள் தடைகளை ஏற்படுத்துகிறார்கள்''’என்பதை கசப்பாகச் சொல்கிறார்கள். 

விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப் பின் நிறுவனர் குடந்தை அரசன், ""இந்தச் செயல்கள் எல்லாம், சட்டமன்றத் தீர்மானத் துக்கு எதிராக ஜெயலலிதா செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது'' என்றவரிடம், "முற் றத்தின் உள்ளே எத்தனையோ பெரியவர் களின் படங்களோடு, தந்தை பெரியாரின் படத்தை ஏன் வைக்கவில்லை?' என கேட்டதற்கு, “""பெரியார் படம் பற்றி, அமைப்புக் குழுவினருக்கும் எனக்கும் முரண்பாடு உள்ளது. திரா விடம் என்பதால் பெரியா ரைத் தவிர்த்துவிட்டார்கள். அவரின் படத்தை வைக்க நான் வலியுறுத்தி வருகி றேன்''’என்றார், குடந்தை அரசன். 

இருக்கும் தமிழ னுக்கும் பிரச்சினை, இறந்த தமிழர்களின் நினைவுச் சின்னம் வைக்கவும் பிரச் சினை... என்றுதான் தீருமோ?

-இரா.பகத்சிங்



 உஷ்!

காக்கி ஏரியாவில் 177 இன்சுகளுக்கு அண்மையில் பதவி உயர்வு அளித்தது, ஆட்சி பீடம். ரொம்ப நாளா நடக்கவேண்டியது, நடந்திருச்சு என மகிழ்ச்சியில் ஆழ்ந்த இன்சுகள் மத்தியில் பரபரப்பு. அம்மை ஆட்சிக்கு வந்தபின் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இரண்டு இன்சுகளின் பெயர்களும் பதவிஉயர்வுப் பட்டியலில் எப்படி இடம்பிடித்தது என அவர்களின் மண்டையைக் குடையும் கேள்வி. சுப் பையா, செல்வகுமார் ஐயா ரெண்டு பேரும், இதுக்கு பதில் சொல்வாங்களா?

ad

ad