புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013


இளையராஜா - எம்.எஸ்.வி. தொடங்கிவைக்க சென்னையில்
 சினிமா தொழிலாளர்கள் ஊர்வலம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் அமீர் சென்னையில் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  ’’கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின்
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளதால், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடுகிறார்கள்.


தமிழக திரைப்பட தொழிலாளர்கள், ஸ்டண்ட் யூனியன், நடன கலைஞர்கள் உள்ளிட்ட பலரும், வெளிமா நிலங்களில் வேலைசெய்ய முடியாத சூழ்நிலை அந்தந்த மாநிலங்களில் உருவாகியுள்ளதால், திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண் டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தி சொல்வதற்காக நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டுஇருந்தோம்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு, பதறும் தாய் உள்ளம்போல், திரைப்பட தொழிலாளர்களின் குரல் கேட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா 5–11–13 அன்று நேரம் ஒதுக்கி தந்து இருக்கிறார்கள். ஆகவே, இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாக செல்ல முடிவு செய்திருக்கிறோம். ‘பெப்சி’ உறுப்பி னர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பேரணியை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு இசையமைப்பாளர்கள் எஸ்.எம்.விஸ்வநாதன், இளையராஜா ஆகிய இருவரும் தொடங்கி வைப்பார்கள்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும், சம்மேளனத்தை சார்ந்த தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடும் அடையாள கொடி ஒன்றை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அறிமுகம் செய்து வைக்கிறோம்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பெயரை, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்று மாற்றவும் முடிவு செய்திருக்கிறோம்’’என்று கூறினார்.

ad

ad