புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

பிரதமர் கமரூன் தனது கௌவரத்தை தற்காத்து கொள்ளவேண்டும்: மிரட்டுகிறார் அமைச்சர் கெஹெலிய
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கே அழைத்தது எனவும் அவர் தனது கௌவரத்தை தற்காத்து கொண்டு இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்,
பிரித்தானிய பிரதமரை அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு அழைத்திருந்தாலும் அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி.
எனினும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நாட்டிற்குள் புத்திசாலி மக்கள் இருக்கின்றனர்.
இலங்கை ஒரு சுதந்திரமான நாடு. இதனை மிக தெளிவாக நாங்கள் தெரிவிக்க வேண்டும். எமக்கு சிறந்த கல்வியறிவு இருக்கின்றது.
சிறந்த அனுபவம் இருக்கின்றது. அத்துடன் 2500 ஆண்டுகள் சிறந்த வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. எமது பிரச்சினைகளை எம்மால் தீர்த்து கொள்ள முடியும்.
கமரூன் துரை அவர்களை நாங்கள் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கே அழைத்தோம். அவர் எமது வீட்டுக்கு வந்தால் அவர் எமது உபசரிப்பை அனுபவித்து விட்டு கௌவரமாக சென்றால் நல்லது.
என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் எமக்கு ஆலோசனை வழங்குவதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம். எனினும் நாங்கள் ஆலோசனைகளை பெற எமக்கு நாடொன்று உள்ளது.
நாட்டில் குடிமக்கள் உள்ளனர். குடிமக்கள் தெரிவு செய்த அரசாங்கம் உள்ளது. நாட்டில் உள்ள சட்ட கட்டமைப்பின் படி செயற்பட எமக்கு போதுமான அனுபவங்கள் உள்ளன என்றார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் விசாரணைகளை நடத்தவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு தான் பரிந்துரைப்பேன் என பிரித்தானிய பிரதமர் இன்று காலை கொழும்பில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

ad

ad