புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2013





           மிழகத்தில் அங்கங்கே மழை பெய்தாலும், இடைத்தேர்தல் களமான ஏற்காட்டில் மட்டும் அனலான அனல் அடித்துக்கொண்டிருக்கிறது.

தொகுதியின் 65 சத வாக்குகள் வன்னிய சமூகத்திடம் இருந்தபோதும் பா.ம.க. இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்ப தாக அறிவித்துவிட்டது. இதேபோல் பா.ஜ.க.வும் தேர்தலைப் புறக் கணிக்க, தே.மு.தி.க.வோ  மூன்று முறை வேட்பாளர் பெயரை பரிசீலித்தது.  சேலம் மாவட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களோ, "ஆளும்கட்சி எதையும் செய்யத் தயாராகிவிட்டது. நாம்  டெபாஸிட்டை இழந்தால் மானக்கேடாக இருக்கும். அதனால் நிற்பது பற்றி யோசியுங்கள்'’ என்று விஜயகாந்திடம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தங்களை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை விஜயகாந்த்திற்கு இருக்கிறது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மட்டுமே நேருக்கு நேராய் வரிந்துகட்டிக் களத்தில் புழுதியைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏற்காட்டில் முதலில் களமிறங்கியது தி.மு.க.தான். மாறனை வேட்பாளராக அறிவித்த தி.மு.க. கடந்த மாதம்  14-ந் தேதி வலசையூர் பெரியசாமி உடையார் மண்டபத்தில் ஸ்டாலின் தலை மையில் பிரமாண்டமாக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி ஆளும்தரப்பை திகைக்க வைத்தது. போதாக்குறைக்கு மாஜி மந்திரி பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து விறுவிறுப் பாக களவேலை பார்க்கத் தொடங் கியது. 
இதேபோல் அ.தி.மு.க. தலை மையும் அமைச்சர் ஓ.பி.எஸ். தலை மையில் 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 52 பேர்கொண்ட தேர்தல் பணிக்குழு வை அமைத்தது. இவர்களில் கே.பி. முனுசாமி, எம்.சி.சம்பத், கே.சி வீரமணி, வளர்மதி, முக்கூர் சுப்பிரமணி ஆகிய ஐந்து அமைச்சர்கள் உட்பட 7 பேர் வன்னிய சமூகத்தினர். இந்த தேர்தல் பணிக்குழுவினர் தொகுதி களுக்குள் டீம் டீமாய் ரவுண்டடித்தனர். அப்போது இலைத் தரப்பிற்கு வன்னிய சமூகத்தில் இருந்து அதிர்ச்சி யான அனுபவங்கள் கிடைக்கத்தொடங்கின. வீராணம், மேட்டுப்பட்டி, அனுப்பூர், காரிப்பட்டி போன்ற வன்னிய கிராமங்களில் நுழைந்த அ.தி.மு.க.. தேர்தல் பணிக்குழுவின ரை வழிமறித்த மக்கள் "எங்கள் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமதாஸை கைது செய்து சிறையிலடைத்து ஏகப்பட்ட வழக்குகளைப் போட்டு வரும் உங்களை நாங்கள் எப்படி அனுமதிப்பது?'’என்று முறைப்பு காட்டினர். இதையறிந்த கார்டனோ மேலும் 9 பேரைத் தேர்தல் பணிக்குழுவில் நியமித்தது. அவர்களில் மாஜி சி.வி.சண்முகம், சொரத்தூர் ராஜேந்திரன், அருண்மொழித்தேவன், மாஜி விஜயலட்சுமி பழனிச்சாமி, எம்.எல்.ஏ.வான எஸ்.கே.செல்வம் ஆகியோர் வன்னியர்கள். இப்படி தேர்தல் பணிக்குழுவின் எண்ணிக்கையை 61 ஆக இலைத்தரப்பு உயர்த்திக்கொண்டது. 

இந்த நிலையில் ஏற்காட்டில் நடந்த கலந்துரை யாடல் கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் ‘"இந்தத் தொகுதியின் நிலவரத்தைப் பார்க்கும்போது நமக்கு பயமாகத்தான் இருக்கிறது. 75 ஆயிரம் ஓட்டில் ஜெயித்தாக வேண்டும் என்பது கார்டனின் கட்டளை. இந்த இலக்கில் தோற்றால் கார்டன் பக்கம் நாங்கள் யாரும் போக முடி யாது' என்று கவலையோடு பேசி, ர.ர.க்களை உசுப்பினர்.



மாவட்ட அமைச்சரான எடப்பாடி பழனிசாமியோ ஏரியா பொறுப்பாளர்களை அழைத்து "நமது ஓட்டுக்கள் நமக்குச் சிதறாமல் கிடைத்துவிடும். நாம் எதிர்க்கட்சி ஓட்டுக்களை அறுவடை பண்ணுவதில்தான் கவனம் செலுத்தவேண்டும். அவர்களை சரிக்கட்டி என்னிடம் அழைத்து வாருங்கள்'’என இன்னொரு பக்கம் பரபரத்தார். அதோடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான அவர், மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை அழைத்து "நிலுவையில் இருக்கும் லோன்களை உடனே ரிலீஸ் பண்ணுங் கள். அப்படி பண்ணும் போது கடன்தாரர்களிடம் அம்மாவுக்குதான் ஓட்டு என்று உறுதி வாங்குங் கள்'’ என்றும் உத்தரவு களைப் பிறப்பித்தார். 

ஸ்டாலினின் வலசையூர் கூட்டத்திற்கு பதிலடியாக, 4-ந் தேதி வாழப்பாடியில் ஒரு கூட்டத்தைக் கலக்கலாக  நடத்த ஏற்பாடு செய்தது இலைத்தரப்பு. 'வலசை யூருக்கு ஸ்டாலின் வந்த போது மண்டபமே நிறைஞ்சு இருந்தது. நாம ஆளும்கட்சி. அதைவிட அதிக கூட்டத்தை கூட்டலைன்னா ஒரு பய நம்மை மதிக்கமாட்டான். கூட்டம் மாநாடுபோல இருக்கணும்' என ஒ.செக் களுக்கும், ஏற்காடு தொகுதி நிர்வாகிகளுக்கும் மந்திரி எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட, ஆள்பிடி வேலைகள் அரங்கேறத்தொடங்கின. டாஸ்மாக்கில் இருந்து சரக்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டன. ஒரு வண்டிக்கு டீசல் காசு, மூணு பாக்ஸ் டாஸ்மாக் சரக்கு, அதோடு வழக் கம்போல சிக்கன் பிரியாணி, தலைக்கு நூறு ரூபாய் நோட்டு, சுய உதவி பெண்களுக்கு மட்டும் தலா இருநூறு என்று பேசி, இவை அம்மா பேரவை புறநகர் மா.செ. பெத்தனாயக் கன்பாளையம் இளங்கோவனிடம் ஒப்படைக் கப்பட்டது. 

எனவே வாழப்பாடி ஆலோசனைக் கூட்டத்திற்கு ர.ர க்கள் அலைமோதினர். இதைக்கண்டு உற்சாகமான ஓ.பி.எஸ். "தி.மு.க வை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும். ஏற்காடு அ.தி.மு.க.வின் எக்குக்கோட்டை என்பதை மறுபடியும் நாம் நிரூபித்தாக வேண்டும்'’என்று சூளுரைத்தார். மைக் பிடித்த அனைவருமே "நமது பலத்தை நாம் நிரூபித்தால்தான், அம்மா பாரதத்திற்கு பிரதமராக முடியும்' என்றனர் உற்சாகமாக. மறைந்த பெருமாளைப் பற்றி அமைச்சர்கள் பேசும்போதெல்லாம், உணர்ச்சி மிகுதியால் கண்ணீர்விட்டார் பெருமாளின் மனைவியான வேட்பாளர் சரோஜா. 

அ.தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த நாளே களமிறங்கியது சூரியத் தரப்பு.  ஸ்பெஷலாகக் களமிறக்கப்பட்ட மாஜி துரைமுருகன், அயோத்தியா பட்டினம் பஜாரில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டு, "அண்ணன் வீரபாண்டியாரால் வளர்க்கப் பட்டவன் நான். அவரில்லாம இங்கே நடக்குற முதல் தேர்தல் என்பதால அந்த உணர்ச்சியை, அவர் ஊட்டிய வீரத்தை வாக்கு சேகரிப்பில் காட்டுங்கள். இன் னைக்கு தேதிக்கு நாம வெற்றி யில் இருக்கோம். அந்த பயத் துலதான் அத்தனை மந்திரி களையும் இறக்கிவிட்டுருக்காங்க முதல்வரம்மா. ஒட்டுமொத்தமா கோட் டையையே காலி செஞ்சிட்டாங்க. இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க, நமக்குக் கிடைத்த ஒத்திகைத் தேர்தல் இது.  முதல்வரே... எங்கள் பணிகள் சும்மா அதிருதில்ல...'' (ரஜினி போல செய்து ஆக்ஷன் செய்தார்)  என்றார் ஜாலி யாக. 


தி.மு.க.வின் 32 மா.செ.க்களும் தற்போது ஏற்காட்டில் களமிறக்கப் பட்டுள்ளனர். எல்.ஆர்.என் ஓட்டலில் மா.செ க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட துரைமுருகன், ""வன்னியர்கள் அ.தி.மு.க மேல் கோபத்தில் இருக்கி றார்கள். அந்த கோபத்தை நம் பக்கம் ஓட்டாகத் திருப்ப வேண்டும்'' என்றவர், வேட்பாளர் மாறன் பக்கம் திரும்பி  ""தம்பி, உன் பிரச்சார வீடியோஸ் பார்த்தேன். புதுசுங்குறதால பரவா யில்லை. ஆனா சிரிச்சபடியே வாக்கு கேட்கணும். அப்பதான் ஜனங்களுக்கு நம்ம முகம் பதியும்'' என்று அட்வைசை யும் அள்ளிக் கொடுத்தார்.

யார், யார் எங்கு பொறுப்பேற்று தேர்தல் பணியைப் பார்க்கவேண்டும் என்று சூரியத்தரப்பு ஒரு லிஸ்ட் போட்டது.  இதன்படி வன்னிய சமூகம் அதிகம் இருக்கும் பகுதிகள், மாஜி செல்வகணபதி, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் போன்றோருக்கு ஒதுக்கப் பட்டன. இந்தப் பகுதிகளில் வீடுவீடா கப் போகும் உ.பி.க்கள் "வீரபாண்டி யாரை சிறையில் அடைத்துக் கொன் னுட்டாங்க. ‘வன்னிய சமூகத்துக்கு எதிராக அ.தி.மு.க. செயல்படுது., டாக்டரையும் அன்புமணியையும் ஒரு வழி பண்ணிட்டாங்க. இதையெல்லாம் மனசில் வச்சி ஓட்டுப் போடுங்க'’என தீவிரப் பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றனர். செல்வகணபதி ஒருபடி மேலேபோய், பா.ம.க. அன்புமணியையே தொடர்புகொண்டு, "உங்கள் சமூக வாக்குகளை எங்களுக் குக் கொடுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து பா.ம.க. தரப்பு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இதேபோல் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், வீர பாண்டி ராஜாவிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜாவோ ‘""வீர பாண்டியார் இருந்தபோது உங்களுக்கு நிறைய செய்திருக்           கிறார். அதனால் வீரபாண்டியாரை மறந்துடாதீங்க''’என செண்டிமெண்ட்டாக அவர்களை டச் பண்ணிக்கொண்டி ருக்கிறார்.

எப்படியும் ஜெயித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கும் ஆளுந்தரப்பு, ஓட்டுக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் வீதம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறது. இதை ர.ர.க்கள் மூலம் விநியோகித்தால் எதிரணியினர் பிடித்துக்கொடுத்துவிடுவார்கள் என்பதால், விநியோகிக்கும் பொறுப்பை மகரமான அந்த மாவட்ட அதிகாரியிடம் இலைத்தரப்பு ஒப்படைத்திருக்கிறது என்கிறார்கள். இது அதிகாரிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படுமாம். 

இதற்காக 60 கோடி ரூபாய் ஆல்பா, பீட்டா என்கிற இரண்டு காக்கிகள் டீம் மூலமே தொகுதிக்குள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுவிட்டன என இலைப்புள்ளிகளே மார்தட்டு கிறார்கள்..

அதிகார பலத்தோடும் கரன்ஸி பலத்தோடும் இலைத்தரப்பு அதிரடி கிளப்ப, இதை தற்போது பலமான திண்ணைப் பிரச்சாரம் மூலமே எதிர்கொண்டு வருகிறது சூரியத்தரப்பு. இந்த இருதரப்பின் யுத்தத்தால் ஏற்காடு, தீக்காடாக மாறிக்கொண்டிருக்கிறது.

-சே.த.இளங்கோவன்



 உஷ்!

அடுத்தடுத்து ரெண்டு குருபூஜைகளில் வேலைசெஞ்சு காக்கி அதிகாரிக கலைச்சுப் போய்ட்டாக... (ஆமாமா..) அதுக்காக, சார்பு ஆய்வு முதற்கொண்டு கூடுதல் கங்காணிவரை இருக்கிற அதிகாரி களுக்கு, போன 5ஆம் தேதியன்னிக்கு, கங்கை மாவட்ட கங்காணி அதிகாரி அச் கோட்டு, பிரியாணியோடு போதைத் திரவங்களும் சேர்த்து விருந்து குடுத்தாரு! வெயில்ல காவல் காத்தவுகளுக்கு மட்டும் ஒண்ணும் இல்லைனு சொல்ல, அவுக வெறுத்துப்போய்ட்டாக. இன்னொரு பக்கம், ‘இதோ காசைக் கொண்டுவந்து தாரம்னு சொல்லி, எடுத்துகிட்டுப் போன சரக்குக்கு யாரு பணம் குடுப்பாக?’னு கொலைவெறியா அலையுறாய்ங்க. பாவம்!

ad

ad