புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2013

நிந்தவூரில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல்! டயர்கள் எரிப்பு: கர்த்தால் அனுஸ்டிப்பு - விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பற்ற நடவடிக்கையே பதட்டத்திற்கு காரணம்: ஹரீஸ்
அம்பாறை, நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து, துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்பதாகவும் தொடர்ந்து பதற்றமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிந்தவூர்  பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கவும் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இதனையடுத்து, அக்குழுவின் தீர்மானத்தின்படி, இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது.
இந்நிலையில், நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதி படுத்துமாறு கேட்டுள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள், தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். சம்பவத்தை கேள்வியுற்று அரசியல்வாதிகளும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட அந்த குழுவினரை மீட்டுக்கொண்டு போவதற்கே முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு பொதுமக்கள் இடம்கொடுக்காமையை அடுத்து. விசேட அதிரடிப்படையினர் வானத்தையும் பூமியையும் நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கி சன்னங்கள் தெறித்ததில் பொதுமக்களில் சிலருக்கு சிறுகாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலை தோற்றியதாகவும் அந்நிலைமை இன்னும் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டுள்ளமையால் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிந்தவூரில் கர்த்தால் அனுஸ்டிப்பு
நிந்தவூரில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து, அப்பகுதியில் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
பிரதேசத்திலுள்ள கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கற்கள் மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்த்தால் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.  கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பற்ற நடவடிக்கையே பதட்டத்திற்கு காரணம்: ஹரீஸ்
நிந்தவூர் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு, விசேட அதிரடிப்படையினரின் திட்டமிட்ட செயல் மக்களிடையில் குழப்பம் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்
நிந்தவூர் பிரதேசத்தில் இடம் பெற்ற நிலமை தெடர்பிலும் அங்குள்ள மக்களின் மனநிலைகளை லங்காசிறி வானெலியின் சிறப்புச் செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விபரிக்கிறார்.

ad

ad