புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013




             யாளு அம்மாளிடம் சாட்சியம் பதிவு செய்ய சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி கோபாலனை நியமித்திருந்தது சி.பி.ஐ. கோர்ட். அதன் பேரில் தயாளு அம்மாளிடம் சாட்சியம் பதிவு செய்யும் விசாரணையை 28-ந் தேதி கலைஞரின் கோபாலபுரத்தில் நடத்தி முடித்திருக்கிறார் நீதிபதி கோபாலன்.

காலை 9 மணிக்கெல்லாம் கோபால புரம் வீட்டைச் சுற்றி தி.மு.க. வழக்கறிஞர் கள் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட, மாநில உளவுத்துறையினரும் கோபாலபுரத்தைச் சூழ்ந்திருந்தார்கள். கோபாலபுரம் வீட்டின் மாடியில் இருந்த கலைஞர், ""கோர்ட்டிலிருந்து வந்துவிட்டார் களா?''’என்று மகள் செல்வியிடம் கேட்க, ""இன்னும் வரலைப்பா'' என்றிருக்கிறார் செல்வி. அப்போது மணி 9.30. 

வீட்டின் டைனிங் ஹாலில் விசாரணையை வைத்துக்கொள்ளலாமா? என்று முதலில் ஆராயப்பட்டிருக்கிறது. ஆனால், தாயாளு அம்மாள் அடிக்கடி சோர்வாகி விடுவார் என்பதாலும் பாத்ரூம் போக வேண்டியதிருக்கும் என்பதாலும் டைனிங் ஹால் வேண்டாம் என கலைஞரின் குடும்ப தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், அந்த யோசனை கைவிடப்பட்டு, தயாளு அம்மாளின் பெட்ரூமிலேயே விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் பெட்ரூம், கோர்ட் ஹால் போல மாற்றப் பட்டது.

நீதிபதிக்கு ஒரு இருக்கை, விசாரணையை டைப் செய் யும் உதவியாளருக்கு ஒரு இருக்கை, குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு இருக்கைகள் என போடப்பட்டிருந்தன. நீதிபதிக்கு நேர் எதிரே  தயாளு அம்மாளுக்கு சோபா வடிவி லான குஷன் வைத்த இருக்கை போடப்பட்டது.

காலை 9.40. கோபாலபுரம் வீட்டுக்குள் நுழைந்தனர் கோர்ட் ஊழியர்கள். இதனைத் தொடர்ந்து கனிமொழியும், தனது மனைவியுடன் கலைஞர் டி.வி. சரத்குமாரும் வந்தனர். அடுத்து, கனிமொழி வழக்கறிஞர் பாலாஜி, சரத்தின் வழக்கறிஞர் சுசில்குமார், ஆசிஸ்பல்வா வழக்கறிஞர் ஜெயின் மற்றும் கரீம்மொரானி வழக்கறிஞர் ஆகியோர் ஆஜரானார்கள். இவர்களைத் தொடர்ந்து சி.பி.ஐ. வழக்கறிஞர்கள் கோயல், லலித், சோனியா ஆகியோர் கோபாலபுரம் வர, சரியாக 9.55-க்கு வந்தார் நீதிபதி கோபாலன்.  இவர்களுக்கு முன்பாகவே, தயாளு அம்மாளின் வழக்கறிஞர் குமரேசன் அங்கிருந்தார். தயாளு அம்மாளுக்கு உதவியாக  செல்வி மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர்களைத் தவிர, விசாரணை அறைக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இருக்கையில் நீதிபதி அமர்ந்ததும் 10.10-க்கு விசாரணை துவங்கியது. முதலில்  சி.பி.ஐ. தரப்பிலிருந்து தயாளு அம்மா ளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சி.பி.ஐ. வக்கீல் கோயல், ""அம்மா, எங்களைத் தெரிகிறதா?'' என்று கேட்க,’ ""நீங்கல் லாம் யாரு? அய்யாவை (கலைஞர்) பாக்க வந்தீங்களா?' என் றார். அப்போது கோயல்,’""நாங்கள் சி.பி.ஐ. வக்கீல்கள். 2 ஜி விஷயமா உங்ககிட்டே விசாரிக்க வந்திருக்கோம். 2ஜி-ன்னா என்னன்னு தெரியுமா?''’என்று கேட்க, அந்த கேள்வி தயாளு அம்மாளின் காதில் சரியாக விழவில்லை. அதனால், தயாளு அம்மாளுக்கு கேட்கிற மாதிரி வழக்கறிஞர் குனிந்து மீண்டும் கேட்க, அதற்கு ""தெரியாது'' என்றார் தயாளு அம்மாள். தொடர்ந்து, ""கொஞ்ச நாளைக்கு முன்னால டெல்லி டாக்டர்கள் வந்து உங்களை செக் பண்ணினாங்களே... அது எதுக்குன்னு தெரியுமா உங்களுக்கு?'' என்று சி.பி.ஐ. தரப்பில் கேட்கப்பட, ""ஆமாம், வந்தாங்க'' என்ற தயாளு அம்மாள், எதுக்கு வந்தாங்க என்பது பற்றி நினைவில்லை என்பதால் பதில் எதுவும் சொல்லவில்லை.


""2ஜி விவகாரமா சி.பி.ஐ. கேஸ் போட்டிருக்கு. அதுல நீங்க சாட்சி சொல்லணும். தெரியுமா உங்களுக்கு?'' என்றதற் கும் ""தெரியாது'' என்றார் தயாளு அம்மாள். இப்படியே கேள்விகள் கேட்கப்பட, ஒரு கட்டத்தில்  40 டாகுமெண்டு களை எடுத்த சி.பி.ஐ., அதில் போடப்பட்டிருந்த தயாளு அம்மாளின் கையெழுத்தை அவரிடம் காட்டி, ""இது, உங்கள் கையெழுத்துதானா? நீங்கதான் போட்டீங் களா?'' என்று கேட்க, அதை உற்றுப் பார்த்த தயாளு அம்மாள், ""ஆமாம். என் கையெழுத்துதான். நான்தான் போட்டேன்'' என்றார். உடனே அடுத்த கேள்வியாக, ""எதுக்குப் போட்டீங்க? அந்த டாகுமெண்ட்ல என்ன இருக்குதுன்னு தெரியுமா?'' என்று சி.பி.ஐ. கேட்க, இரண்டு கேள்விக்கும் ""தெரியாது'' என்றார். இதனைத் தொடர்ந்து, ""கையெழுத்து போட்டேன்னு சொல்றீங்க. கலைஞர் டி.வி. அலுவல கத்துக்குப் போய் போட்டீங் களா?'' என்றதற்கு, ""இல்லை, கேசியர் எடுத்துக் கொண்டு வருவார். கையெழுத்துப் போட்டேன்'' என்றார் தயாளு அம்மாள். ""கலைஞர் டி.வி. அலுவலகத்துக்குப் போவீங்களா?'' என்றதற்கு ""போக மாட்டேன்'' என்றவ ரிடம், ""எப்போதாவது போயி ருக்கீங்களா?'' என்ற போதும் ""இல்லை'' என்றார். அப் போது, தயாளு அம்மா ளிடம் கனிமொழியை காட்டி ""அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுதா?'' என்று சி.பி.ஐ. வக்கீல் லலித் கேட்க, ""என் பொண்ணு'' என்றார் தயாளு அம்மாள்.

இப்படியே கேள்விகள் நீண்டுகொண்டிருந்த நிலை யில், திடீரென்று வேறு 5 வகையான டாகுமெண்டு களை சி.பி.ஐ. காட்டி ""அதி லுள்ள கையெழுத்து உங்க ளுடையதா'' என்றதற்கு  ""இல்லை'' என்றார். உடனே ஏற்கனவே காட்டிய டாகு மெண்டில் இருந்த கையெ ழுத்தை காட்டியபோது, ""இது என்னுடையது'' என் றார். இந்தச்சூழலில், அடுத்த கேள்வியை சி.பி.ஐ. ஆரம் பித்தபோது, ""முடியல...… கொஞ்ச நேரம் படுத்துக்க வா?'' என்று தயாளு அம் மாள் கேட்க, ""சரி'' என்றார் நீதிபதி. உடனே தயாளு அம் மாளை அணைத்து மெல்ல தம் பக்கம் சாய்த்துக் கொண்டார் செல்வி.

பத்து நிமிட இடை வெளிக்குப் பிறகு சி.பி.ஐ. தரப்பில் மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் 80 கேள்விகள். இதனையடுத்து கரீம்மொரானி தரப்பில் 20 கேள்விகளும் ஆசிஸ்பல்வா தரப்பில் 15 கேள்விகளும் என தயாளு அம்மாளிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் தரப்பில், "கலைஞர் டி.வி. ஆரம்பிக்க 200 கோடி வாங்கப்பட்டது தெரியுமா? அது யாரிடம் வாங்கப்பட் டது? கலைஞர் டி.வி.யின் போர்டு மீட்டிங்கில் கலந்து கொண்டிருக் கிறீர்களா? அந்த மீட்டிங்கில் எடுக்கப்படும் முடிவுகள் உங்க ளுக்குத் தெரியுமா?' என்பது உள்பட, நிர்வாக ரீதியிலான கேள்விகளே கேட்கப்பட்டன. இதற்கு, தெரியாது, இல்லை… போன்ற பதில்களையே சொன்னார் தயாளு அம்மாள்.

சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணை முழுவதும் டைப் செய்து அதனை முழுமையாகப் படித்துக் காட்டப்பட்டு ஒவ்வொரு பக்கத்திலும் தயாளு அம்மாளின் கை ரேகை பதியப்பட்டது. எல்லாம் முடிந்து வழக்கறிஞர்களும் பிறகு நீதிபதியும் அடுத்தடுத்து கிளம்பினார்கள். "தயாளு அம்மாள் வரவேண்டும்... தயாளு அம்மாள் வர வேண்டும்'…என சி.பி.ஐ.யும் சி.பி.ஐ. கோர்ட் டும் இதுநாள் வரை பரபரப்பு ஏற்படுத்திய சூழல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இனி இந்த வழக்கின் போக்கு எப்படி நகர்கிறது என்பதை கவனிக்கத் தயாராகியிருக்கிறது கலைஞரின் குடும்பம்.                                    

ad

ad