புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2013


கள்ளக்காதலனுடன் காமப்பசி : கணவனை கொல்ல
ஓடி ஓடி கூலிப்படையினருக்கு உதவிய கேவலப்பிறவி மனைவி!


 கள்ளக்காதலனுடன் காமப்பசியை போக்கி கொள்வதற்காக தாலி கட்டிய கணவனையே கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கிறார் ஒரு பெண்(?).   சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி
இருக்கிறது.
ராஜ்குமாரை கொன்றது எப்படி? என்று கூலிப்படையை சேர்ந்த பெருமாள் அளித்த  நடுங்க வைக்கும் வாக்குமூலம்:
’’கூலிப்படை தலைவனான துரையும் நானும் நண்பர்கள். செய்யாரை சேர்ந்த மணி கண்டன் துரையின் நண்பர் ஆவார். இதனாலும் மணி கண்டனுடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மூன்று பேரும் அடிக்கடி சந்தித்து பேசுவோம்.
அப்போது சென்னை கிருஷ்ணாநகரில் வசித்து வரும் வித்யா என்ற பெண்ணை காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
வித்யா வளசரவாக்கத்தில் ஒரு மளிகை கடையில் வேலை செய்தார். அவர் பஸ் ஏற செல்லும் போது மணிகண்டனின் தாயாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தால் வித்யா காஞ்சீபுரம் செல்லும் போது மணிகண்டனின் தாயார் வீட்டுக்கு செல்வார். அப்போது மணிகண்டனுடன் வித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்கள். இந்த சம்பவம் ராஜ்குமாருக்கு தெரிய வந்ததும் கண்டித்துள்ளார்.
தங்கள் கள்ளத்தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்து கட்டி விடலாம் என்று மணிகண்டனிடம் கூறி இருக்கிறார்.  மணிகண்டன் எங்களிடம் வந்து விசயத்தை சொன்னார். ராஜ்குமாரை தீர்த்து கட்டினால் பணம் வாங்கி தருவதாகவும் கூறினார்.
நண்பனுக்காக நாங்களும் கொலை செய்ய சம்மதம் தெரிவித்தோம். எங்கள் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் கூடி ஆலோசித்தோம். 3 வாரங்களுக்கு முன்பே போட்டு தள்ள திட்டம் தீட்டினோம். ஆனால் அப்போது ராஜ்குமார் சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் இருந்தார். அந்த நேரத் தில் அவர் மது குடிப்பதில்லை. இதனால் அவரை போட்டு தள்ளும் திட்டம் தள்ளிப்போனது. ஆனால் வித்யா அடிக்கடி மணிகண்டனை தொடர்பு கொண்டு சீக்கிரம் கதையை முடியுங்கள் என்று நச்சரித்து வந்தார்.
கடந்த 20–ந்தேதி ராஜ்குமாரை கொலை செய்வதற்காக அனைவரும் ஒன்று கூடி மாங்காட்டில் ஒரு கம்பெனியில் சரவணனுடன் தங்கி இருந்தோம்.  மாலை 5 மணியளவில் வித்யா ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் எங்களுக்காக காத்து இருந்தார். நாங்கள் அங்கு சென்று அவரை சந்தித்தோம். அப்போது கணவர் ராஜ்குமாரின் போட்டோவை அடையாளத்துக்காக எங்களிடம் தந்தார். மேலும் செலவுக்கு ரூ.5 ஆயிரமும் தந்தார். இரவில் வேலை முடிந்து கணவர் பைக்கில் வரும் வழியையும் தெரிவித்தார்.
நாங்களும் பைக்கில் செல்லும் போதே போட்டு தள்ளிவிடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர் வேகமாக சென்றதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.  இரவு 10 மணிக்கு வித்யாவை தொடர்பு கொண்டு இப்போது வரவா? என்று கேட்டோம். ‘கீழ் வீடுகளில் ஆட்கள் இன்னும் தூங்கவில்லை’. எனவே இப்போது வர வேண்டாம் என்றார். நள்ளிரவு 1 மணியளவில் வித்யா எங்களை செல்போனில் தொடர்பு கொண்டு ‘இப்போது வரலாம்’ என்றார்.
நாங்கள் புறப்பட்டு வித்யா வீட்டுக்கு சென்றதும் அவர் நைசாக கதவை திறந்து வெளியே வந்து ராஜ்குமார் போதையில் நன்றாக தூங்குவதாக கூறினார்.   உடனே நாங்கள் உள்ளே சென்றோம். செந்தில், சரவணன், கிரிதரன் மூவரும் கையுறை போட்டு கொண்டனர். வித்யா படுக்கையறையில் இருந்து தலையணையை எடுத்து வந்தார்.
2 பேர் தலையணையால் ராஜ்குமாரின் முகத்தை அமுக்கினார்கள். 2 பேர் அவரது வயிற்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கத்தியால் கழுத்தை அறுத்தனர். கழுத்து அறுபட்டதும் துடித்த ராஜ்குமாரின் கால்களை வித்யா கெட்டியாக பிடித்து கொண்டார். காய்கறி நறுக்கும் கத்தியால் அறுத்ததால் கத்தி வளைந்து விட்டது. எனவே உயிர் போகவில்லை. உடனே வீட்டில் இருந்து ‘செலோடேப்பை’ வித்யா எடுத்து வந்தார். அதை ராஜ்குமார் வாயில் ஒட்டினோம். பின்னர் கத்தியில் ‘சரக், சரக்’ என்று அறுத்தோம். சிறிது நேரத்தில் கழுத்து அறுந்து அவர் செத்து விட்டார்.

உடனே கணவரின் கழுத்தில் கிடந்த செயின், கையில் கிடந்த மோதிரத்தை வித்யா கழட்டி எடுத்து எங்களிடம் தந்தார். எங்களுக்கு கூலியாக ரூ.2 லட்சம் தருவதாக பேசியிருந்தார். அவ்வளவு பணம் இல்லாததால் 12 பவுன் நகைகளை தந்தார். நாங்கள் அதை வாங்கி கொண்டு பைக்கில் தப்பி சென்றோம். வழியில் எதிர்பாராத விதமாக போலீஸ் கையில் சிக்கி கொண்டோம்.’’

ad

ad