புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013



             ராஜபக்சே நடத்திய இன அழிப்பின் கொடூரங்களை எடுத்துக் காட்டுகிறது தஞ்சையில் அமைக்கப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம். இறுதிக்கட்ட போரின்போது ஈழத்தில் ஓடிய குருதியோட்டத்தின் முழு வடி வமும் இங்கே சிற்பங்களாக சித்தரிக் கப்பட்டிருக்கின்றன. இந்த முற்றத்தின் மீது சில தாக்குதல்களை கடந்தவாரம் நிகழ்த்தியது அரசு இயந்திரம். சிற் பங்களாக வடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது விடுதலைப்புலிகளின் தோழர் ஓவியர்
வீரசந்தானத்தின் கோட் டோவியம். முற்றத்தின் மீது நடந்த "தாக்குதலால்' மனம் வெதும்பி யிருக்கிறார் வீர சந்தானம். அவரை நாம் சந்தித்தபோது...

""முடியலை தம்பி... நினைச்சுப் பார்க்கவே முடியலை. நினைச்சுப் பார்த்தா இதயத்துல இருந்து ரத்தம் வழியுதடா. ஏன்... இப்படி அலங்கோலப் படுத்தினார்கள்? இப்ப எப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்கு கீழே வாழுறோம்னு கவலையாவும் கோபமாவும் இருக்குடா தம்பி'' என்று மனசு வெடிக் கப் பேசுகிறார் வீரசந்தானம்.

""மூணு வருஷம் கஷ்டப்பட்டு முற்றம் உருவானது. என்னுடைய கோட்டோவியத்தை சிற்பி முருகனும் மற்ற சிற்பிகளும் அப்படியே தத்ரூபமாக சிற்பங்களாக வடித்திருந்தனர். கல்லில் ஒரு பக்கம் ஈழ வரலாறு, அடுத்த பக்கம் ரத்த வெறி பிடித்த ராஜபக்சே ராணுவம் நடத்திய கொடூரங்கள்.  அத்தனையும் ரத்தமாக வழிந்தன. அதுபோலவே, தமிழீழத் திற்காக தமிழகத்தில் தன்னுயிரை ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 பேர்களின் தியாகங்களையும் பதிவு செய் திருக்கிறோம். உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோ, போரின் அழிவுகளை தனது "குருனிகா' என்ற மாபெரும் ஓவியத்தின் மூலம் உலகுக்குச் சொன்னார். முள்ளிவாய்க்கால் முற்றமோ சிற்பங்களாக உலகுக்குச் சொல்கிறது. போர் அழிவுச் சின்னங்களைப் பற்றி உலகத்தில் உள்ள எவன் எழுத முற்பட்டாலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தை தவிர்த்து எழுதிட முடியாது.



அந்த முற்றத்தினை அசிங்கப்படுத்த இந்த ஆட்சி யாளர்கள் சிந்தித்திருக்கிறார்கள். அதான்…முற்றத்தின் சுற்றுச்சுவரையும் பூங்காவையும் நிர்மூலமாக்கிவிட்டனர். எவ்வளவு கம்பீரமாக இருந்தது தெரியுமா அந்த சுவர்!  மிக அழகாக இருந்தது பூங்கா. எப்படி அதை அழிக்க மனசு வந்தது? அழகும் கம்பீரமும் இருந்தால் பிடிக்காதோ?'' என்றபோது... மேலும் பேச முடியாமல் துக்கம் அவரது தொண்டையை அடைத்தது. 

அவரிடம், ""ஆக்கிரமிப்பு என்று சொல்லி இடித்திருக் கிறார்களே?'' என்றபோது, ""எது ஆக்கிரமிப்பு ? ஆக்கிரமிப்பே கிடையாது. முறைப்படி எல்லா அனுமதியும் வாங்கியிருந்தோம். பூங்காவை அமைக்கவும் பராமரிக்கவும் அனுமதி பெற்றிருக் கிறோம். ஓராண்டுக்கு அனுமதி உண்டு. பிறகு அதனை புதுப் பித்து கொடுங்கள் என்று கடிதம் தந்தோம். புதுப்பித்து தர வேண்டியதுதானே ? அப்போ தெரியாதா ஆக்கிர மிப்புன்னு? முற்றம் திறப்பு விழா கண்டதும் ஆக்கிரமிப்புன்னு சொல்லி இடிக்கிறீங்கன்னா... உங்க மனசு அவ்வளவு கொடூரமானதா? இடித்திருப்பது ரொம்ப அயோக்கியத்தனம். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்னா…முறைப்படி நோட்டீஸ் கொடுக்க வேண்டும். கொடுத்தார்களா? சர்வாதிகார ஆட்சியில்தான் இப்படியெல்லாம் நடக்கும். 

தமிழகத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது. அதுவும் அரசியல்வாதிகளின் கைகளிலும் பெருமுதலாளிகளின் பிடியிலும்தான் இருக்கிறது. அதை இடித்துத் தள்ளுங்களேன். முடியுமா? துணிச்சல் இருக்கா? இந்த அம்மையார் ஆட்சியில் நடந்த தாக்குதலை அ.தி.மு.க.காரனாலேயே ஜீரணிக்க முடிய லையே! எத்தனை பேர் என்னிடம் ஆதங்கத்துடன் வருத்தப்பட்டார்கள் தெரியுமா? அவங்களுக்குத் தெரியுமா தெரியலையான்னு தெரியலை. இடிப்பு சம்பவம்… உலகத் தமிழினத்திடம் கோபத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் அம்மாவை ரொம்பவும் மதிச்சோம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதெல்லாம் மகிழ்ந்தோமே. ஈழத்தில் யுத்தம் நடந்தபோது இவங்க முதல்வராக இல்லாமல் போய்ட்டாங்களேன்னு  ஆதங்கப்பட்டோம். இரண்டாவது முறையா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் சறுக்கியபோது வருத்தப்பட்டோம். ஆனாலும் உங்க மீதிருந்த மரியாதையை குறைச்சிக்கலை. ஆனா, இப்போ? 

முற்றத்தை திறக்க நீங்கதான் பொருத்தமானவர்னு உங்களைத்தானே அம்மா அழைத்தோம். உங்களிடமிருந்து பதில் இல்லை. ஆயிரம் பணிகள், மறந்திருப்பார்கள் என நினைத்து காத்திருந்தோம். பதிலே இல்லையே அம்மா. இதுதான் நாகரிகமா? சரி என்று நாமளே திறக்கலாமென முடிவு செஞ்சோம். அதற்கும் எவ்வளவு இடையூறுகள் ? எல்லாத்தையும் தாண்டி முற்றத்தைத் திறந்தோம். உங்களால் திறந்துதான் வைக்க முடியவில்லை. நெடுமாறன் மீதுள்ள மரியாதைக்காக ஒரு வாழ்த்து கடிதமாவது அனுப்பியிருக்கலாம். இல்லையே. கடிதம் அனுப்புவதற்கு பதிலாக பொக்லைனை அல்லவா அனுப்பிவிட்டீர்கள்! நெஞ்சு பதறுகிறது  தம்பி'' என்றவர், ""முற்றத்தையும் இடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அப்படி ஒரு இடிப்பு நடந்தால் அது என் பிணத்தின் மீதுதான் நடக்கும்''‘என்றார் ஆவேசமாக வீரசந்தானம்.

நவம்பர் மாதம் என்பது ஈழப் போராளிகளின் மாதம். பிரபாகரனின் பிறந்த நாள் நவ.26. மாவீரர் தினம் நவ.27. இந்த இரண்டு தினங்களையும் முற்றத்தில் எழுச்சியாகக் கொண்டாட ஈழ ஆதரவாளர்களும் தமிழின உணர்வாளர்களும் இப் போது முடிவு செய்திருக்கிறார்கள். அதனை ஒடுக்க அரசு இயந்திரமும் திட்ட மிட்டிருக்கிறது என்பதை அறிந்து உணர்வாளர்களிடம் இனம்புரியாத அச்சமும் பரவிக்கிடக்கிறது.

-இரா.இளையசெல்வன்
படம் : அசோக்



 உஷ்...!

ஐந்து படித்தவருக்கு ஐ.டி. துறையைக் கொடுத்து, அதிர்ச்சி தந்தார், அம்மை. அதற்கு விசுவாசம் காட்ட, தன் சாதிக்கார பா கட்சியினரை ஒரு கூட்டத்தில் விளாசித்தள்ள, மோத லாகி, வழக்குகூட நிலுவையில் இருக் கிறது. இந்நிலையில், ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக் காக, தேர்தல் நிதி எனும் பெயரில் பா. கட்சியினர் வசூலில் இறங்க, அதற்காக 5 லகரம் தந்தா ராம், முக்கு.. மணி. இவரைப் புரிஞ்சுக்கவே முடிய லையே! 

ad

ad