புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2013

ஆ.ராசா கோரிக்கை : டெல்லி சி.பி.ஐ. கோர்ட் நிராகரிப்பு
சி.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வு அமைப்பின் உருவாக்கமே செல்லாது என்று கூறி, அது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்து கவுகாத்தி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதனால் சி.பி.ஐ.யின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.



இது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில், நேற்று விசாரணை தொடங்கும் முன்பாகவே எதிரொலித்தது. இது தொடர்பாக ஸ்வான் தொலைதொடர்பு நிறுவன அதிபர் வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான வக்கீல் மஜீத் மேமம் நீதிபதி ஓ.பி.சைனியிடம், ‘‘வழக்கு விசாரணையை தொடங்கும் முன்பாக, ‘சி.பி.ஐ., போலீஸ் ஆகாது’ என்ற தலைப்பு செய்தி இன்றைய நாளிதழ்களில் வெளியாகி இருப்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். கவுகாத்தி ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், நாம் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தக்கூடாது. அப்படி செய்தால் அது கோர்ட்டு அவமதிப்பு’’ என கூறினார்.
இதே போன்று வழக்கு விசாரணையை தொடர்வதற்கு ஆ.ராசாவின் வக்கீல் மனு சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கவுகாத்தி ஐகோர்ட்டு தீர்ப்பின் நகலை தனது ‘ஐ–பாட்’ சாதனத்தில் தயார் நிலையில் கொண்டு வந்திருந்தார். நீதிபதியிடம், ‘‘ஐயா, நான் உங்களிடம் தீர்ப்பை காட்ட முடியும்’’ என கூறினார். ஆனால் நீதிபதி ஓ.பி.சைனி அதை நிராகரித்தார்.
‘‘ஊடக தகவல்களின் அடிப்படையில் நான் செயல்பட முடியாது’’ என அவர் கூறி, கோர்ட்டில் ஆஜராகி இருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியும், சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டுமான விவேக் பிரியதர்ஷியின் சாட்சியத்தை பதிவு செய்யத்தொடங்கினார். விசாரணை முடிந்தபோது, கவுகாத்தி ஐகோர்ட்டு தீர்ப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையை நிறுத்தி வைப்பது தொடர்பான முறையான மனுவை திங்கட்கிழமை தாக்கல் செய்வதாக அவர்கள் கூறினர்.
மேலும், 1984–ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பரவிய கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுகிற டெல்லி செசன்ஸ் கோர்ட்டிலும், குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன்குமார் தரப்பில் கவுகாத்தி ஐகோர்ட்டு தீர்ப்பு விவகாரம் எழுப்பப்பட்டது. ஆனால் நீதிபதி ஆர்யன், ‘அந்த தீர்ப்பின் விளைவு குறித்து இப்போது தெரியவரவில்லை, எனவே வழக்கு விசாரணை தொடரும்’ என கூறி விசாரணையை தொடர்ந்தார்.

ad

ad