புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

ஜெனிவா மார்ச் மாதக் கூட்டத்தொடர் இலங்கைக்கு கடுமையானதாக அமையும்! கொழும்பு ஆங்கில நாளேடு
ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள  ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இலங்கைக்கு கடுமையானதாக அமையும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு பிரித்தானியா மீண்டும் தெரிவு செய்யப்பட்ட நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை ஜெனிவாவில் மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரித்துள்ளார்.
இதனால், ஐநா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை முன்னெப்போதும் எதிர்கொண்டிருக்காத நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், 14 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்ய கடந்த 11ம் நாள் நடந்த தேர்தலில், பிரித்தானியாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஜீரியா, சீனா, கியூபா, வியட்னாம், ரஷ்யா, சவூதி அரேபியா, மசிடோனியா, மாலைதீவு, மெக்சிகோ, மொராக்கோ, பிரான்ஸ், நமீபியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நாடுகள் வரும் ஜனவரி 1ம் நாள் தொடக்கம் வரும் மூன்று ஆண்டுகளுக்கு பேரவையில் அங்கம் வகிக்கத் தகுதி பெற்றுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஒரு உறுப்பு நாடான, இந்தியா கூட, இலங்கைக்கு குழிபறிக்கும் வகையில், செயற்படும் என்றும் அந்த இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியாவும் கூட ஆதரவு வழங்கியிருந்தது.
தற்போது புதுடெல்லியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசியல், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பதும், பாஜக தலையிடக் கூடிய நிலையில் உள்ளதும், நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க, பிரித்தானிய, இந்திய கூட்டணி இராஜதந்திர முனையில், கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொமன்வெல்த் அமைப்பின் இரண்டு முக்கிய நாடுகளான, பிரித்தானியாவும், இந்தியாவும், இலங்கைக்கு எதிரான நகர்வில் இறங்கும் நிலையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் கொமன்வெல்த் நாடுகளுக்கும், இலங்கைக்கு எதிரான திட்டத்தில் இணைந்து கொள்ள கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், 2014-2016 காலப்பகுதியில், ஏழு கொமன்வெல்த் நாடுகள் அங்கம் வகிக்கும். கென்யா, மாலைதீவு, பாகிஸ்தான், நமீபியா, இந்தியா, தென்னாபிரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளே அவையாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள கொமன்வெல்த் நாடுகள் மூலம், இலங்கைக்கு எதிரான பொறுப்புக்கூறல் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேறகொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

ad

ad