புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013

வலி. வடக்கிற்குச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை தடுத்து நிறுத்திய இராணும்
வடமாகாண முதலமைச்சரும் இந்துமதப் பெரியார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.வலி. வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெறுகின்ற வீடழிப்புகளின் மத்தியில் இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் இந்து சமய பிரமுகர்கள் குழுவாக பார்வையிட சென்ற சமயமே மாவிட்டபுரம் பகுதியில் உள்ள முதலாவது முன்னரங்க காவல்அரணில் பாதுகாப்புக்கிருந்த இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
ஏமாற்றத்துடன் முதலமைச்சரும் குழுவினரும் யாழ்ப்பாணம் திரும்பியிருந்ததுடன், இது தொடர்பாக இந்து சமய பிரமுகர்கள் மிகுந்த விசனம் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கங்களை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதி தலைமையிலான அரசின் ஏமாற்று வித்தையை எடுத்து காட்டும் அரசின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad