புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2013

இலங்கை தமிழர் படுகொலை பற்றி நம்பகமான விசாரணை: டேவிட் கேமரூன் கோரிக்கை
தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டேவிட் கேமரூன் கூறியுள்ளார். 
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், லண்டன் பத்திரிகை
ஒன்றில் எழுதி இருப்பதாவது:–

நான் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சென்று திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில், தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிபர் ராஜபக்சேவை சந்தித்தபோது, அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்படாவிட்டால், நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என்று தெளிவாக கூறிவிட்டேன்.
இலங்கையில், மனித உரிமை விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர்–சிங்களர் இடையே நல்லிணக்கம் வேண்டும்.நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால்தான், அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது.இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

ad

ad