புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013



          சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது ஏற்காடு இடைத்தேர்தல். போட்டி யில் 11 பேர் குதித்திருந்தாலும் அ.தி.மு.க. சரோஜா வுக்கும் தி.மு.க. மாறனுக்கும் தான் நேரடிப் போட்டி. எங்குப் பார்த்தாலும் அ.தி.மு.க., தி.மு.க. தலைகளே தென்படு கின்றன. வோட் பேங்க் வைத்திருக்கும் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருப்பதால்
அக்கட்சிகளின் வாக்குகளை தங்கள் பக்கம் கவர்வதற்கு கழகங்கள் இரண்டும் முட்டி மோதுகின்றன. 

""அரசின் விளம்பரங்களோ, நடைமுறையிலுள்ள திட்டங்களோ, அதிகாரிகளுக்கு உத்தரவோ என எதுவும் ஆட்சியாளர்கள் செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கச் செல் லும்போதும் அதிக வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நடத்தை விதிகளை சேலம் மாவட்டத்தில் அமல்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், இது அத்த னையையும் மீறி வருகிறார்கள் அமைச்சர்களும் அ.தி.மு.க.வின ரும். மாவட்ட கலெக்டர் மகர பூசணம் அ.தி.மு.க.வின் மா.செ. போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் விதி மீறல்களை மட்டும் கணக் கெடுத்துக் கொள்ளும் கலெக்டர், ஆளும் கட்சியின் மீதான புகார்களைக் கண்டு கொள்வதே இல்லை. அதனால் கலெக்டரை மாற்ற வேண்டும், தொகுதிக்குள் இருந்து ஒட்டுமொத்த அமைச்சர் களையும் வெளியேற்ற வேண்டும்'' என்று சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. வேட் பாளர் மாறன். இது குறித்து பதி லளிக்குமாறு தமிழக அரசுக்கும் மாவட்ட கலெக்டருக்கும் நோட் டீஸ் அனுப்பியிருக்கிறது கோர்ட்.

இதற்கிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரியை சந்தித்துள்ள தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, ""ஜெய லலிதாவின் அரசியல் பெயர் அம்மா. அரசு செலவில் குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகங்களுக்கு அம்மா உணவகம் என பெயரிடப் பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ள அவற்றில் முதல்வரின் படம் இருக்கிறது. மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் அவரது பெயர் அகற்றப்படவில்லை. ஜெ. படம் போட்ட அம்மா வாட்டர் பாட்டில், இரட்டை இலை வரையப்பட்ட ஸ்மால் பஸ் தொகுதிக்குள் வலம் வருகிறது. நடத்தை விதிகளை பாதுகாக்க வேண்டிய மாவட்ட கலெக் டரே விதிகளை மீறி வருகிறார். அரசின் இலவச மடிக்கணினி கள், இலவச சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் அங்கு நேர்மையான தேர்தல் நடக்காது. அவர்களை வெளியேற்ற உத்தரவிட வேண்டும். அனைத்து வகையிலும் நடத்தை விதிகளை அ.தி.மு.க. மீறுவதால் அக்கட்சியின் அங்கீகாரம் மற்றும் அக்கட்சியின் சின்னம் ஆகியவற்றை தற்காலிகமாக திரும்பப் பெறவேண்டும்''’என்று புகார் கொடுத்திருக்கிறார்.

தி.மு.க. சுட்டிக்காட்டிய பல புகார்களில் ஒரே ஒரு புகார் மீது மட்டும் ஆக்ஷன் எடுத்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். அதாவது, ஏற்காடு பஞ்சாயத்து யூனியன் பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி ஜெயராமனை நெடுஞ்சாலைத் துறை  அமைச்சர் தனது வீட்டுக்கு அழைத்து சில உத்தரவு களைப் பிறப்பித்ததாக எழுந்த புகாருக்கு 48 மணி நேரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. 

இப்படி ஆளும் கட்சியின் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளன. தி.மு.க.வில் கே.என்.நேரு, எ.வ.வேலு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கீதாஜீவன் போன்ற முக்கிய தலைகள் தொகுதியில் வலம் வருகின்றன. நேருவும் வேலுவும் வீரபாண்டி ராஜாவை அழைத்துக்கொண்டு பரபரப்பாக சுற்றி வருகின்றனர். இதில் நேருவின் பிரச்சாரம் கேலியும் கிண்டலுமாக அசத்துகிறது.

ஆளும் கட்சியின் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பை பார்க்க முடியவில்லை. இயந்திரத்தனமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ஒவ்வொரு அமைச்சரும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் வலம் வரும் அமைச்சர்கள் கை கூப்பி வணங்கிக்கொண்டே செல்ல, அவர்களோடு வரும் தொண்டர்கள் வாக்காளர்களிடம் பிட் நோட்டீசைக் கொடுத்து "அம்மாவை மறந்திடாதீங்க, ரெட்டை எலையை மறந்திடாதீங்க' என்று வாக்கு சேகரிக்கிறார்கள்.  

ஒவ்வொரு அமைச்சருக்கும் பகுதிகள் பிரிக்கப்பட்டி ருப்பதால், ஒவ்வொரு நாள் காலையிலும் அனைத்து அமைச்சர்களும் தங்களுடன் பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என வேட்பாளர் சரோஜாவை அழைக்க, யாருக்கு முன்னுரிமை தருவது என தெரியாமல் தினம் தினம் திணறி வருகிறார் சரோஜா. அமைச்சர்கள் போகும் எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறி எதிர்ப்புகளைத் தெரிவிக்கிறார்கள். அமைச்சர்கள் சுந்தரராஜ், ஆனந்தன், மூர்த்தி போன்றவர்களால் எதிர்ப்புகளை சமாளிக்க முடியவில்லை.

கழகங்கள் இரண்டும் இரவு நேரங்களில் என்ன திட்டமிடுகிறது என இரண்டு கூடாரங்களையும் எட்டிப் பார்த்தோம். அ.தி.மு.க. தரப்பிடம் எட்டிப் பார்த்தபோது, அமைச்சர்களிடம் விவாதிக்கும் ஒன்றிய செயலாளர்கள், ""இதோ பாருங்க அண்ணே... இந்த பகுதியில் 3,000 ஓட்டு இருக்கு. இதில் 2,200 ஓட்டு தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கு. ஓட்டுக்கு 2,500 ரூபாயை அள்ளிவிட்டால் தான் அவர்களை வளைக்க முடி யும். இல்லைன்னா ஒண்ணும் பண்ண முடியாது. உங்க லிமிட்ல கட்சி தோத்துச்சுன்னா உங்க அமைச்சர் பதவிக்கு சிக்கல் தான்'' என்று சொல்வதை கேட்க முடிந்தது. 

அதேபோல, தி.மு.க. தரப் பில் நாம் எட்டிப்பார்த்தபோது, பொறுப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தி.மு.க. நிர்வாகிகள், ""இதோ பாருங்க... இங்கு 2,500 ஓட்டு இருக்கு. இதுல 2,000 ஓட்டு ரெட்டை இலைக்குத்தான் சாதகம். 2,000 ரூபா கொடுத்து லம்பா அள்ளிக் கொள்ள ஆளும் தரப்பு பேசி முடிச்சிடுச்சி. மீதியுள்ள தி.மு.க.வுக்கு சாதகமான 500 ஓட்டையும் அதேபாணியில் அள்ள முயற்சி நடக்கிறது. வெறும் கையை வீசினால் நம்ம ஓட்டையும் நாம் இழக்க வேண்டியதிருக்கும். அதனால  மனசு வையுங்க,……சூட்கேஸை திறங்கள்'' என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க முடிந்தது.

அட…... என்னதான் நடக்கிறது இங்கே?

ad

ad