புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

தனது தாயின் சமாதியை பார்க்கப் போனதால்தான் ஜெயபாலன் கைதானார்! நோர்வேயிலிருந்து துணைவியார்
தனது தாயின் சமாதியைப் பார்க்கப் போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும், தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்க்போனதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக வாசுகி வலியுறுத்தியுள்ளார்.
அவர்களது வீடு இருக்கும் இடம் பாதுகாப்பு வலயமா? அங்கு செல்வதற்கு வரையறை ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டதற்கு பதிலளித்த நோர்வேயில் உள்ள வாசுகி அவர்கள், மக்களுடைய வீடுகளை அரசாங்கம் ஆக்கிரமித்து, குந்தி இருப்பது வந்து... எங்களுடைய காணிக்குள் நாங்கள் போவது என்ன குறை?'' என்று பதிலளித்தார்.
தன்னுடைய கணவர் இலங்கையில் இனவிரோதத்துக்கு குந்தகமாக எதுவும் அங்கு பேசவில்லை என்றும் வாசுகி கூறினார்.

ad

ad