புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

இலங்கை அரசின் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை தனித்தனியாக அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
 
மாநாட்டில் கலந்துகொள்ள வரும் அரச தலைவர்களை தாமரைத் தடாகத்தில் (நெலும் பொக்குண) இருந்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் விலை உயர்ந்த பென்ஸ் கார்களை இறக்குமதி செய்துள்ளது.
 
தலைவர்கள் தலா ஒரு பென்ஸ் காரில் ஏற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு பின்னாலும் முன்னாலும் யானைகள் மற்றும் குதிரைகள் செல்ல தலைவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலகம், ஆடம்பர சொகுசு பஸ் ஒன்றில் பாதுகாப்பாக சகல தலைவர்களும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
 
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் இழுபறி நிலை தொடர்வதுடன் இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகின்றது.

ad

ad