புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2013

கவிஞர் ஜெயபாலன் நாடு கடத்தப்பட்டார்!
வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்ட நோர்வே பிரஜையும் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் இன்று நாடுகடத்தப்பட்டார்.
வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பான அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு இலங்கை நேரம் 9:20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா  தெரிவித்தார்.

' TK731 Turkis ' என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு அவர் நாடு கடத்தப் படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளில் ஜெயபாலன் வீஸா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன், அதனை அடுத்தே அவரை நாடுகடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நோர்வே தூதரக அதிகாரிகளும்  ஜெயபாலனைச் சந்தித்திருந்தனர். இந்நிலையில் இந்த நாடுகத்தல் இடம்பெற்றுள்ளது என்பது 

ad

ad