புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா 13ந்தேதி பதவி ஏற்பு
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் உள்ள 200 சட்டசபைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 
இதில், பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரியாக
தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் மார்கரெட் ஆல்வாவை சந்தித்து புதிய ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடுத்து முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா வருகிற 13–ந்தேதி பதவி ஏற்கிறார். சிந்தியா ராஜஸ்தானில் ஏற்கனவே 2003-2008 வரையில் முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். பதவியேற்பு விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ad

ad