புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

கசினோவில் 150 மில்லியன் முதலீடு செய்துள்ள அமைச்சர் வீரவன்சவின் மனைவி
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
வஜிரா ஜானகி நெத்திகுமார என்ற பெண் ஊடாகவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு சலாகா கசினோ மையத்தில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை எவ்விதவொரு தொழிலையும் செய்யாத, பெற்றோரிடம் எந்தவொரு சொத்தும் இல்லாத சசி வீரவன்ச, இவ்வளவு பாரிய தொகை பணத்தை எவ்வாறு, எங்கிருந்து, முதலீடு செய்தார் என்பது தற்போது தெற்கு அரசியலின் ஆளும் கட்சிக்குள் முணுமுணுக்கப்படும் கேள்வியாகும்.
எனினும், சசி வீரவன்ச, வஜிர ஜானகி என்பவருக்கு பணம் கொடுத்தற்காக எவ்வித ஆவணத்தையும் பெறவில்லை எனவும், இது தற்போது சிக்கலாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நம்பிக்கை அடிப்படையில் முன்னதாக பணம் வழங்கினாலும், நிலைமையை சுதாரித்துக்கொண்ட சசி வீரவன்ச, தற்போது வஜிர ஜானகியிடம் பணத்தை அல்லது பணம் கொடுத்தமைக்கான ஆவணமொன்றைத் தருமாறு நச்சரித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
எனினும், இதனை நிராகரித்துள்ள வஜிரா ஜானகி, தொடர்ந்து நச்சரித்தால் பணத்தை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
தற்போது சசி வீரவன்ச, அமைச்சர் வீரவங்சவுடன் குடும்ப பிரச்சினையினால் முரண்பட்டுள்ளதால், விமல் வீரவன்சவின் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை சசி வீரவன்சவிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவை தொடர்புகொண்டு இந்தப் பணத்தை மீளப்பெறுவதற்கு ஏதேனும் சட்டவழிகள் இருக்கின்றதா என ஆராயுமாறு பணித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்‌ஷ இந்த விவகாரத்தில் ஏன் தலையீடு செய்கிறார் எனவும் தற்போது முணுமுணுக்கப்படுகிறது. இந்த வர்த்தகத்தில் சசி வீரவன்சவின் பெயரில் ஷிரந்தி ராஜபக்‌ஷவும் 50 மில்லியன் ரூபா பணம் முதலீடு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் அதற்கு விடை கூறுகின்றன.

ad

ad