புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே!: நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்
2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது, மனித படுகொலையே என ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இலங்கை அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை பொதுவாக சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பது வழமையானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மாநாட்டிற்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பது பற்றி உறுதிப்பட எதனையும் கூற முடியாது என மக்கள் தீர்ப்பாய பிரதிநிதிகள் இலங்கை வானொலி ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீர்ர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ அடையாளப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ad

ad