புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013




           நாட்டை ஆண்ட கட்சிகளையே நெட்டித் தள்ளி, நாட்டின் தலைநகரில் 27 லட்சம் வாக்குகளைத் தனியாகக் கூட்டிப்பெருக்கி இருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி.

 ஆமாம்...! "ஆம் ஆத்மி' (சாமானிய மக்கள்) எனும் பெயரின் எளிமையும் ’துடைப்பம்’ சின்னத்தின் வலிமையும் உடன்வர, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் தன்னாட்சி என்கிற பிரச்சாரம், இந்த வெற்றியைச் சாதித்துள்ளது
. நக்கீரன் 

டெல்லியில் மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள நடுத்தர வகுப்பினரின் மன தில், நிறைவேறாத ஆசையாக இருக்கும் ஊழல் எதிர்ப்புக் குக் கிடைத்துள்ள அங்கீ காரம் இது. "டெல்லியை அடுத்து மும்பைதான் அடுத்த இலக்கு' என்று அறிவித் துள்ள அர்விந்த் கெஜ்ரிவா லின் பாணி, உண்மையி லேயே தனியானதாக இருக் கிறது. 

முதலில் டெல்லியில் சாதிப்பது, அதன் மூலம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற் படுத்துவது, அதன் தொடர்ச்சி யாக -வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, எல்லா மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்துவது -இதுதான் அவர்களின் திட்டம். 

தமிழகத்தில் எந்த கட்சி, எந்தக் கூட்டணி என்ற பரபரப்பு ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்க... இதில் ஆம் ஆத்மி கட்சி என்ன செய்யப் போகிறது? என்பதை அறியும் ஆவல் பரவலாக காணப்படுகிறது. 

இங்கு அந்த கட்சியின் செயல்பாடு எப்படி? கட்சி யின் முக்கிய செயல்பாட்டாளர்கள் யார் யார்? என்பதை அறிய, களம் இறங்கினோம்.  கொள்கைகளில் மட்டுமில்லாமல், கட்சியை உருவாக்குவதி லும் வித்தியாசமான முறையைத்தான் கடைப்பிடிக்கிறார் கெஜ்ரிவால். 
டெல்லியில் மட்டும் முன்னர் இருந்த அன்னா ஹசாரே தொடங்கிய ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினரை கட்சியில் சேர்த்துக் கொண்ட கெஜ்ரிவால், தமிழகத்தில் பொறுப்பு தரு வதில் வேறு டெக்னிக்கைக் கையாண்டார். 

குடிசைவாசிகள், பழங்குடியினர், கடலோர மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்காகப் போராடிவரும், மேதாபட்கர் முன்பு, "மக்கள் அரசியல் முன்னணி' என்ற இயக் கத்தை உருவாக்கினார். இதில் தீவிரமாக செயல் பட்டவர், யோகேந்திரா யாதவ். ஆம் ஆத்மி கட்சி யின் முக்கிய பிரமுகரான இவர், மேதாபட்கர் தலை மையிலான ’மக்கள் இயக்கங்களுக்கான தேசிய மேடை’ மூலம், மக்கள் போராட்டங்களை நேரடி யாக அறிந்தவர். இவரைப் போன்றவர்கள் மூலம், மக்கள் பிரச்சினைகளுக் காக, கட்சி சார்பில்லாமல் யார், யார் போராடுகிறார் கள் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு பொறுப்பு அளிக்கி றார் கெஜ்ரிவால். 

இந்தக் கட்சி யில் இதுவரை தலைவர் எனும் பதவி இல்லை. கட்சி யின் தலைமையில் இருந்து கிளை அமைப்புவரை ஒருங் கிணைப்பாளர்தான் மையமானவர். 

கரூர் பகுதியில், ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தியும் அந்தப் பகுதியின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்து, பெண்கள் முன்னணி எனும் அமைப்பின் மூலம், அதிக அளவிலான பெண்களை, உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்க வைத்தவர் கிறிஸ்டினா சாமி. கட்சியின் தேசிய செயற்குழுவில் 13ஆவதாக இடம்பெற்றுள்ளவர். கட்சி சார்பின்றி தன்னந்தனியாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி யவர் என்ற அடிப்படையில், இவர், ஆம் ஆத்மி கட்சியின் தமி ழக ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார். இவரைப் போலவே, இன்னும் 15 மக்கள் போராட்ட செயல்பாட்டாளர்கள், இக்கட்சியின் மாநிலக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

இவர்கள், மாவட்ட வாரியாக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். இது வரை, 12 மாவட்டங்களில் மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு ஒரு மாவட்டக் குழு அமைக்கப்பட்டுள் ளது. இதைப் பிரித்து ஒவ்வொரு எம்.பி. தொகு திக்கும் ஒரு குழு என அமைப்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறார்கள். 

டெல்லி வெற்றி யைத் தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. முக்கியமாக, இணையதளத்தில் புழங்கும் இளைஞர் களைக் குறிவைத்து, உறுப்பினர் சேர்க்கை இயக்கம் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

"காற்றின் போக்கில் வெற்றி பெறலாம். நண் பர்களையும் உறவினர் களையும் ஆம் ஆத்மி கட்சி யில் உறுப் பினர்களாகச் சேருங்கள்'’என்ற வாசகத்தின் மூலம் ஆங்கிலத்தி லும், தமிழிலுமாக அழைப்புவிடுக்கின்றன விளம்பரங்கள். 

மதுரையில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட உறுப்பினர் களுக்கு பயிற்சி முகாம், திருச்சியில் திட்டமிடல் கூட்டம் என மாவட்டத்துக்கு மாவட்டம் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள். ""ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாநிலக்குழு உறுப்பினர்கள் நேரில் மூன்று முறையாவது ஆய்வு செய்த பிறகே, மாவட்டக் குழு அமைக்கப்படுகிறது. அதன் கணக்கு வழக்கு எல் லாமே கட்சியின் தேசியக்குழு வின் பார் வைக்கு உட னடிப் பார்வைக் குப் போய்விடும். இங்கு எல்லா மே, வெளிப் படைதான்'' என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் அருள்தாஸ்.  

ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான கிறிஸ்டினாவிடம் பேசினோம். ’’ 

""டெல்லி தேர்தலுக்குப்  பிறகு, அதிக அளவில் உறுப்பினர்    களாகச் சேர முன்வருகின்றனர். பஞ்சாயத்து, வார்டு அளவிலிருந்து உறுப்பினர் சேர்க்கை நடத்தப் படுகிறது. இதுவரை சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில், மாவட்டக் குழுக்களை அமைத்து முடித்திருக்கிறோம். 

எங்களைப் பொறுத்தவரை, தன்னார்வலர்களையும் உறுப் பினர்களையும் ஒருசேர சேர்க்கும் முயற்சியில் இப்போதைக்கு தீவிரமாக இருக்கிறோம். சென் னையில், வரும் 22ஆம் தேதியன்று உறுப்பினர் சேர்க்கை மேளாவை நடத்தவுள்ளோம்'' என்கிறார், கிறிஸ்டினா. 

பெருமளவில் மக்களை ஈர்த்த பல இசங்களைக் கண்ட தமிழ் நாட்டில், கெஜ்ரிவால் சொல்லும் தன்னாட்சியிசமும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இது எந்த அளவுக்கு எடுபடும் என்பதை அவர்களின் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும்! 

ad

ad