புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
டெல்லியில் 7வது முதல்வராக, ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடக்க உள்ள பதவி ஏற்பு விழாவில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.

இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள். 


இதன் மூலம் அரசியல்வாதிகளின் வி.ஐ.பி. கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும். எம்.எல்.ஏ.க்களும் மக்களில் ஒருவர் தான் என்பதை உணர்த்தும் முயற்சி இது. கசம்பி மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை 11 மணியளவில் கெஜ்ரிவாலுடன் இணைந்து, ராம் லீலா மைதானத்திற்கு செல்ல உள்ளதாக கூறினார். பதவியேற்பு விழா முடிந்த பின்னர் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, ராம்லீலா மைதானத்திற்கு வர காரை பயன்படுத்தப்போவதில்லை. மெட்ரோ ரயில் மூலம் வரப்போகிறோம் என்றார். மேலும், தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ரயிலில் தான் வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
முன்னதாக, காசியாபாத்தில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்த 5 போலீசாரை திருப்பி அனுப்பிய அவர், தனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என போலீஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளார்.

ad

ad