புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2013

டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்
டெல்லி மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி புரிந்த முதல்வர் ஷீலா தீட்சித் இம்முறை கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் கணக்குக
ளையுமே தவறாக்கும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் பாஜக தனது முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்தனை முன்னிறுத்தியிருந்தது.

டெல்லியில் மொத்தமுள்ள 70 இடங்களில் 810 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 66 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அந்த கட்சி தனது கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலிதளத்துக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக 11 இடங்களில் போட்டியிடுகிறது. தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை. டெல்லியில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகள், அவர்களின் கோரிக்கைகள் எங்களால் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவித்தனர். தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமைலவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ad

ad