புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2013


சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில்
தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைப்பதுடன், தில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன. அதேசமயம், மிúஸாரமில் தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் எனத் தெரிகிறது.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, மிúஸாரம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. இதில், தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ஆம் தேதியும், மிúஸாரத்தில் 9ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் "சி வோட்டர்ஸ்', "டுடேஸ் சாணக்கியா', "ஒ.ஆர்.ஜி. மார்க்', "ஏ.சி. நீல்சன்' ஆகியவை தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளை நடத்தியுள்ளன. இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அனைத்து வாக்குக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
தில்லி
தலைநகர் தில்லியில் தொடர்ந்து 3 முறை ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி இம்முறை தோல்வியை சந்திக்கும் என்று வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன. மொத்தமுள்ள 70 இடங்களில், அக்கட்சிக்கு வெறும் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.
அதேசமயம் பாஜக 34 இடங்களில் வெற்றி பெறும் என்றும், முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 இடங்களும், சுயேச்சை மற்றும் பிற கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தில்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும், பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நடைபெற்ற 199 இடங்களில், பாஜக 130 இடங்களில் வெற்றி பெறும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்திக்கும் என்றும் வாக்கு கணிப்புகள் தெரிவிக்கின்றன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சியினருக்கு 21 இடங்கள் கிடைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.
மொத்தமுள்ள 230 இடங்களில், பாஜகவுக்கு 144 இடங்களும், காங்கிரஸýக்கு 77 இடங்களும் கிடைக்கும் என்று வாக்குக் கணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவே தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்று வாக்கு கணிப்புகள் கூறுகின்றன. மொத்தமுள்ள 90 இடங்களில், பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸýக்கு 37 இடங்களும், சுயேச்சை மற்றும் பிற கட்சியினருக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.
மிúஸாரம்
மிúஸாரம் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடம் கிடைக்காது என்றும், தொங்கு சட்டப்பேரவையே ஏற்படும் என்றும் வாக்கு கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும், மிúஸாரம் தேசிய முன்னணி மற்றும் மிúஸாரம் மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு 14 இடங்களும், úஸாரம் தேசியக் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ad

ad