புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்­கோட்டை போதி­ராஜ மாவத்­தையின் அரச மரத்­த­டிக்கு அருகில் அமை­யப்­பெற்­றுள்ள விகா­ரைக்கு பின்­பு­ற­மாக அமைந்­தி­ருந்த (அங்­காடி) பல்­பொருள் விற்­பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை முற்­றாக எரிந்து சாம்­ப­ரானது.
சுமார் 8 மணி­ய­ளவில் கடை­யொன்றில் தீ பர­வி­ய­தை­ய­டுத்து விற்­பனைத் தொகு­தியின் 50க்கும் மேற்­பட்ட கடைகள் சுவாலை விட்டு எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்­ளன.
சம்­ப­வத்தை அடுத்து புறக்­கோட்டைப் பகுதி புகை மண்­ட­ல­மாக காட்­சி­ய­ளித்த அதே­வேளை, அப்­ப­கு­தியில் பெரும் அல்­லோல கல்­லோலம் ஏற்­பட்­டது.
பொது மக்கள் பதற்­றத்தால் அங்­கு­மிங்கும் சித­றி­யோ­டிய அதே­வேளை, கடை­களை தமது விற்­பனைப் பொருட்களுடன் தீ விபத்துக்கு பலி கொடுத்த வாடகை உரி­மை­யா­ளர்கள் கதறி அழுது புரண்­ட­தையும் அதிர்ச்­சி­ய­டைந்த நிலையில் செய்­வ­த­றி­யாது நின்­றி­ருந்­த­தையும் தீயை அணைப்­ப­தற்கு அங்கு மிங்கும் ஓடி­ய­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது.
தீ பர­வ­லுக்­கான காரணம் உட­ன­டி­யாக கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் பல இலட்ச ரூபா பெறு­ம­தி­யான உட­மைகள் முற்­றாக சாம்­ப­ரா­கி­யுள்­ளன. தீ பர­வி­ய­தை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு விரைந்த கொழும்பு மாந­கர சபையின் தீய­ணைப்பு படை­யி­னரும் விமானப் படையின் தீய­ணைப்புப் பிரி­வி­னரும் இணைந்து தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர். எனினும் இதன்­போது அனைத்து கடை­களும் சொத்­துக்­க­ளுடன் எரிந்து சாம்­ப­ரா­கி­யி­ருந்­தன.
இரவு 8 மணி­ய­ளவில் பர­விய தீயை சுமார் 1 1/2 மணித்­தி­யா­லங்கள் போராடி 9.30 மணி­ய­ளவில் முழு­மை­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்து அணைத்­தனர்.
சம்­ப­வத்தில் போதி­ராஜ மாவத்­தையில் புதி­தாக சுய­தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு என பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் கட்­டப்­பட்டு வழங்­கப்­பட்ட அங்­காடி தொகு­திக்கு அருகில் காணப்­பட்ட 50க்கும் மேற்­பட்ட கடைகள் கொண்ட வாடகை அங்­காடி தொகு­தியே இவ்­வாறு எரிந்து சாம்­ப­ரா­னது.
தீச்­சம்­ப­வத்தை அடுத்து பிர­தே­சத்தில் பெருந்­தொ­கை­யான பொது மக்கள் ஒன்­று­கூ­டிய நிலையில் தீயினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் பாது­காப்பு பணி­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கும் என பெரும் எண்­ணிக்­கை­யி­லான பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் இரா­ணு­வத்­தி­னரும் குறித்த பகு­தியில் பாது­காப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
குறித்த பாதை­யூ­டா­கவே இலங்கை போக்­கு­வ­ரத்து சபை பஸ் நிலை­யத்­துக்கு பய­ணிகள் செல்லும் நிலையில் அப்­பா­தை­யா­னது போக்­கு­வ­ரத்­தி­லி­ருந்து முற்­றாக தடை செய்­யப்­பட்­டது.
பைகள், துணி­ம­ணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ,விளை­யாட்டு உப­க­ர­ணங்கள் மற்றும் இரு­வட்டு விற்­பனை நிலை­யங்கள் என்­பன குறித்த பல்­பொருள் அங்­காடி தொகு­தியில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்­தன.
குறித்த அங்­காடித் தொகு­தியில் பைகள் விற்பனை செய்யும்  கடை­யொன்றில் எரிந்து கொண்டிருந்த பெட்­றோல்மாக்ஸ் விளக்­கொன்­றி­லி­ருந்து பர­விய தீயே முழு கடைத் தொகு­தி­யையும் எரித்­த­தா­கவும் மற்றும் எண்ணெய் விளக்­கொன்று சரிந்து விழுந்­த­த­னா­லேயே இந்த தீ ஏற்­பட்­டி­ருக்­க­லா­மென்றும் இரு வேறு­வி­த­மாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.
எனினும் உறுதியான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை.
தீயால் எரிந்து சாம்பரான கடைத் தொகுதியின் மத்திய பகுதியிலேயே முதலில் தீ பரவியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சேத விபரங்கள் மற்றும் தீ பரவலுக்கான உண்மையான காரணம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இதேவேளை தீ அணைப்பு பணிகளுக்கென கொழும்பு மாநகர சபையிலிருந்து 7 தீயணைப்பு பிரிவு வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.

ad

ad