புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2013

பிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்கு பின் கடும் புயல்: லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு! தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை
பிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சூறாவளியினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
140 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் புயல் காற்றுக் காரணமாக, கடல் அலையின் எழுச்சி வேகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் வட கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் இவ்வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 240 இற்கும் மேற்பட்ட வெள்ள அனர்த்த எச்சரிக்கை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரதேசங்களில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில், வெள்ளத்தால் 6000 குடும்பங்கள் இடம்பெயரக் கூடும். புயலின் வேகம் கடுமையாக உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் வீதிகள் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1953ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், 307 பேர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ad

ad