புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2013


ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது.

199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 57 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 11 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது.


பாஜகவின் முதல் அமைச்சர் வேட்பாளரான வசுந்தரா ராஜே சிந்தியா, ஜால்ராபட்டன் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். 
ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா 1953ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். தமிழகத்தில் கொடைக்காண-ல் தனது பள்ளிக் கல்வியை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். கிழக்கு ராஜஸ்தானில் தோல்பூர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ஹேமன்சிங்கை மனந்த இவர், இளமைக் காலங்கள் முதலே பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தினார். 
தாயார் விஜய ராஜேவை பின்பற்றி அரசியலில் ஈடுபட்டு 1984ல் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரானார். 1985ல் ராஜஸ்தான் மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவராக பதவி வகித்தார். 1985ல் தோல்பூர் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1989 முதல் தொடர்ந்து 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 
2003ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் அசோக் கெலாட்டை தோற்கடித்து ராஜஸ்தான் மாநில முதல் பெண் முதல் அமைச்சராக வசுந்தரா ராஜே சிந்தியா பதவி வகித்தார். 2007ல் மகளிர் ஒருமைப்பாட்டு விருது வழங்கி கவுரவித்தது ஐ.நா.

ad

ad