புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கான நினைவு நிகழ்வு உடுத்துறையில் உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிப்பு
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்நிருக்கின்ற சுனாமி நினைவாலயத்தில் இன்று 9.00 மணியளவில் கிராம அலுவலர் த.தவராஜா தலைமையில் நினைவு நிகழ்வு ஆரம்பமானது.
இதில் நினைவுச்சுடரையும் பிரதான நினைவுத்தூபிக்கான மாலைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர்களான திருமதி.அனந்தி எழிலன், அஸ்மின், ப.கஜதீபன், க சர்வேஸ்வரன், எம்.கே சிவாஜிலிங்கம், ஆனோல்ட், கே சயந்தன், ச.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், சஞ்சீவன், பிரதேச சபை உறுப்பினர் மதியழகன் ஆகியோர் அணிவித்ததும் அகவணக்கம் இடம்பெற்றது.
மேலும், காலை 9.25 மணியளவில் முன்னைநாள் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் புத்திரசிகாமணி அவர்களால் பிரதான சுடர் ஏற்றிய சமவேளையில் மரணித்த உறவுகளுக்கான சுடரை உறவுகள் ஏற்றி கண்ணீர் மழையில் நனைந்தனர்.
அதனைத் தொடர்ந்து நினைவுரைகளை திருமதி அனந்தி சசிதரனும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் உடுத்துறை பங்குத்தந்தையும் வழங்கினார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில்,
ஒன்பது வருடங்களுக்கு முதல் கடல் தாயின் சீற்றத்தினால், காவு கொள்ளப்பட்ட அனைத்து உறவுகளையும் மனதில் இருத்தி மீளாத் துயிலில் சமாதிகளில் உறங்கிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
எங்கள் மண்ணோடு வாழ்ந்து மண்ணோடு எத்தனையோ கனவுகளோடு வாழ்ந்த மக்கள் கடல்தாயால் காவு கொள்ளப்பட்ட எங்கள் மனங்களில் இருக்கிற ஆயிரம் ஆயிரம் உறவுகளின் கனவுகளை, நினைவுகளை, இந்த சமாதிகள் சொல்வதாகவே ஒவ்வொரு உறவுகளும் தங்கள் கண்ணீர்களை இந்த இடத்தில் வடிக்கின்றனர்.
ஆகவே இந்த இடம் புனிதமானது. இந்தப் புனிதர்கள் போற்றப்பட வேண்டும் என்றார்.

ad

ad