புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர்

அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.  ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று
பணிப்பாளராக கொண்ட இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் இபிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
ஏற்றம் என்ற மூலிகை தேனீரை தயாரித்து சுவிஸ் மக்களிடம் அறிமுகமான இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியாக முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத முருங்கை ஊக்கசக்தி மென்பானம் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக சுதாகர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
தமது முன்னைய தயாரிப்பான ஏற்றம் மூலிகை தேனீரை விநியோகம் செய்த சுவிஸின் பிரதான அங்காடி விற்பனை நிலையமான கோப் நிறுவனம் இந்த மென்பானத்தையும் சந்தைப்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.  வெறும் தொழில்துறை உற்பத்தியாக அல்லாது ஆரோக்கியத்தை முன்வைத்தது அனைவரும்பருகும் வகையில் ஏற்றம் மூலிகைத்தேனீர் தயாரிக்கப்பட்டது போல இந்த பானமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முருங்கை இலை மூளை வளர்ச்சிக்கும் அறிவுதிறனை அதிகரிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. முருங்கை இலையை வெறுமனே உண்ணமுடியாது. இதனால் இதனை மூலப்பொருளாக கொண்டு இந்த பானம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சுவிஸ் மக்களிடையே இது பெரிதும் வரவேற்பை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சூரிச் நகரை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு சுகாதார மையமாகும்.  இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுதாகர் பரமேஸ்வரன் எழுதிய மூலிகைகளின் பயன்பாடு பற்றிய குறிப்பை எமது மருத்துவ பகுதியில் பார்வையிடலாம்.thx tinakathir

ad

ad