புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2013


அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
 
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
அதில், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:–
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், இருவிதமான யோசனைகள் எங்களுக்கு சொல்லப்பட்டன. ஒன்று, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பது. மற்றொன்று, காங்கிரசின் ஆதரவைப்பெற்று ஆட்சி அமைத்து, நம்மால் நல்லாட்சி தர முடியும் என நிரூபிக்க வேண்டும் என்பது.
பொதுமக்கள் ஆவேசமானவர்கள். எனவே, இப்பிரச்சினை குறித்து அவர்களின் கருத்தை அறிய முடிவு செய்தோம். அதில் பெரும்பாலானோர், ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் கருத்துகளை பெற்ற பிறகுதான், ஆட்சி அமைக்க உரிமை கோரினோம்.
வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு அளிக்க, சிறுபான்மை அரசை அமைப்போம். காங்கிரசின் ஆதரவைப்பெற்ற போதிலும், எங்கள் செயல்திட்டத்தை செயல்படுத்துவோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை. முந்தைய காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அரசுகளில் ஊழலில் ஈடுபட்ட மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரசைப்பற்றியோ, பா.ஜனதாவை பற்றியோ நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் சாதாரண மக்களை பற்றியே சிந்திக்கிறோம். அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில்தான் கவனமாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

ad

ad