புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2013

அமெரிக்க அதிகாரிகள் -கூட்டமைப்பு சந்திப்பு 
அமெரிக்க அரசின் வெளிவிவகரப் பிரிவைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்டநிலை அதிகாரிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
ஆகியோருக்கும் இடையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் 2014 மார்ச், இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை சமர்பிப்பதற்கு முன்னோடியாக வடகிழக்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றிரவு (05.12.13) கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் சிறப்புச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை குறித்தே சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. கடந்த இரு தடவைகள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை மற்றும் அதனால் இங்கு எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. வடக்கில் மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னரும், இராணுவத்தினராலும், அரசாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் பூரணமான தகவல்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.குறிப்பாக வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகள் முடக்கப்பட்டுள்ளமை, மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடுகள் தொடர்பிலும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலும், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்கள் பிரச்சினை ஆகியன தொடர்பிலும் இதில் சுட்டிக்காட்டப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாணசபையைக் கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. வடக்கு மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமையால் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தடங்கல்கள் நிலவுகிறது. இவை தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினோம்.

எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ad

ad