புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

மன்மோகன் சிங்கின் யாழ். வருகையை எதிர்க்கும் ஐ.தே.க: அழைப்பு உயிரோடு தான் இருக்கிறது என்கிறார் ப.சிதம்பரம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அழையா விருந்தாளியாக யாழ்ப்பாணம் வரவிருப்பதாக ஐ.தே. கட்சி வெளியிட்ட கருத்துக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து அழைப்பு இல்லாமல் அழையா விருந்தாளியாக யாழ்ப்பாணம் செல்வது போல் இந்தியப் பிரதமரை ஐ.தே.க சித்தரித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், யாழ்ப்பாணத்திற்கு செல்வது குறித்து அறிக்கையிட்ட இரண்டு நாட்களுக்குள் இலங்கையில் முக்கிய பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க பிரதமர் மன்மோகனின் வருகையை எதிர்க்கின்றது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, இலங்கை பாராளுமன்றத்தில் பேசுகையில், இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் மறுத்துவிட்டதன் காரணமாக சிங்கின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஜனாதிபதி மகிந்தவின் அழைப்பு இல்லாமல், மன்மோகன்சிங் எப்படி இங்கு வருகை தரமுடியும். என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஐ.தே.கட்சி, மன்மோகன் சிங்கின் யாழ்ப்பாண வருகையை எதிர்க்கின்றதாக தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங், பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்தமை பிரிவினை வாதத்தினை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்றும் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் சீ.வி.விக்னேஸ்வரன் பெரும்பான்மை தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஆவார். அவருடைய அழைப்பு இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.
அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது யாவரும் அறிந்ததே.
மேலும் கொமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லாவிடினும், இந்தியாவின் பிரதிநிதியாக சல்மான் குர்சித்தை அனுப்பி வைத்து, இந்தியா தனது பங்கேற்றலையும் வெளிப்படுத்தியது.
இது இந்தியாவின் பெருந்தன்மையே தவிர, எக்காலத்திலும் பிரிவினைவாத செயலுக்கு துணைபோதவதாக அமையாது என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ad

ad