புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2013


மத்தியில் நிலையான ஆட்சி அமைவது சந்தேகம்: ப.சிதம்பரம் கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


மும்பையில் தேசிய பங்கு சந்தையின் 20வது ஆண்டு விழாவில் பேசிய ப.சிதம்பரம், 
இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அவற்றை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம். 
நாம் தேர்தலுக்காக காத்திருக்கிறோம். பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கும் என்று என்னால் நிச்சயமாகக்கூற முடியவில்லை.

இந்திய ஜனநாயகம், சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.நமது அரசு நிர்வாகத்துக்கு, சில அமைப்புகளிள் எல்லை மீறுதல் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. பாராளுமன்றம் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப்போகிறது. நமது பிரச்சினைகளுக்கு நீதித்துறை மூலமாக தீர்வு கண்டுவிட முடியும் என்று தவறான, கவர்ச்சிகரமான கருத்து நிலவுகிறது.
அரசாங்கத்தின் மூன்று கிளைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது அவசியமான முன்நிபந்தனை. நாம் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சுதந்திர இந்திய வரலாற்றின் மிக மோசமான முனையில் நின்றுகொண்டிருக்கிறோம். நாம் அதில் இருந்து கடந்து வர வேண்டும்.பாராளுமன்றத்தின் வேலை சட்டத்தை இயற்றுவதாகும். நீதித்துறை அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பிரச்சினைகளில் நீதிபதிகள் சீர்தூக்கிப்பார்த்து முடிவு செய்வதற்கென்று நீதித்துறை அளவுகோல்கள் இல்லை. நீதித்துறை அளவுகோல்கள் இருக்கிற விவகாரஙக்ளில் தான் நீதிபதிகள் முடிவுகள் செய்ய இயலும்.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

ad

ad