புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் கடந்த 22.11.2013 திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் கட்சியினால் ஒழுக்கக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவினால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2011.3.17 ல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அமரதாச ஆனந்தன் ஆகிய நீங்கள் கையெழுத்திட்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாவிதன்வெளி பிரதேசசபையின் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பொழுது உப தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தீர்கள்.
ஆனாலும் அதன்பின் எமது கட்சியினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன்பின் நடைபெற்ற தேர்தல் காலங்களிலும் எமது நடவடிக்கைகளில் தாங்கள் தன்னிச்சையாகவே செயற்பட்டு வந்துள்ளீர்கள் என்பதை நேரில் அவதானித்திருக்கின்றோம். அத்தகைய நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதேவேளை நாவிதன்வெளி பிரதேச சபையில் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் நோக்கில் உறுப்பினர்களிடம் எதிரணி உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டுவருவது தங்கள் மீது ஒழுக்கக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும் என தெரியத்தருகின்றேன்.
ஒட்டு மொத்தமாக நாவிதன்வெளி பிரதேச சபையின் சுமூகமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விரோதமாகவும் செயற்பட்டுவரும் தங்களை 22.11.2013 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எனும் பொறுப்பில் இருந்து இடை நிறுத்தப்படுகிறீர்கள் என இத்தால் அறியத்தருகின்றதுடன், இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக எமது கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் மாவை.எஸ்.சேனாதிராஜா கையப்பமிட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ad

ad