புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2013

புலிகளின் பொலிஸாரை விட சிறந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும்! தமிழ்ப் பொலிஸாரிடம் இலங்கக்கோன் வேண்டுகோள்
இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் அறிந்து வைத்திருந்த புலி பொலிஸாரை விடவும் எமது இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர்கள், நல்லவர்கள் என நிரூபிக்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த கல்லூரியிலிருந்து 240 தமிழ் கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 233 தமிழ் கனிஷ்ட கான்ஷ்டபிள்கள் வெளியேறினர்.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சிநேகபூர்வமான சேவை வழங்குவது முக்கியம் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் வலியுறுத்தியுள்ளார்.
பயிற்சி பெற்று வெளியேறும் அனைவரையும் வடக்கு மற்றும் கிழக்கிலிருக்கும் பொலிஸ் நிலையங்களில் சேவைக்கு அமர்த்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை மக்கள் அறிந்துள்ள புலி பொலிஸாரை விட இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர்கள் என இவர்கள் நிரூபிக்க வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்

ad

ad