புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013



         ""ஹலோ தலைவரே... தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு டிசம்பர் 19-ந் தேதி 92-வது பிறந்தநாள்விழா. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிச்சிட்ட அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களு
ம்- நக்கீரன் வாழ்த்து தெரிவிச்சாங்க.''

""தி.மு.க சார்பில் கலைஞர், மு.க.ஸ்டாலின்  பங்கேற்ற பேராசிரியர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடந்ததே!  அரசியல் நிலவரங்கள் பற்றி பேராசிரியர் என்ன சொல்றாராம்?''

""தனக்கு சால்வை, மாலை போட வந்த நிர்வாகிகள்கிட்ட, பொதுக்குழுவிலே இப்படி ஒரு முடிவை கலைஞர் அறிவிப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே யில்லை. கூட்டணி சம்பந்தமா குழு அமைக்கப்படும்னு தீர்மானம் போட்டதால, எல்லாத்தையும் அப்புறம் பார்த்துக்குவாரு கலைஞர்னு நினைச்சேன். அவரோ காங்கிரசும் வேண்டாம், பி.ஜே.பியும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. எதிர்பார்க்காத முடிவுதான். ஆனா, கலைஞர் எடுக்கிற முடிவு பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும்னு பேராசிரியர் சொல்லி யிருக்காரு.''



""இப்படிப்பட்ட முடிவை எதிர்பார்த்த மாதிரி முஸ்லிம் லீக்கின் காதர்மொய்தீன் நேரில் கலைஞரை சந்திச்சி வாழ்த்து  சொல்லியிருக்காரே?''

""கலைஞர்கிட்டே காதர்மொய்தீன், பா.ஜ.க வோடு கூட்டணி இல்லைன்னு சொன்னதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்னு சொல்ல, நீங்களெல் லாம் இருக்கிறப்ப நான் எப்படி இந்த முடிவெடுப் பேன்னு கலைஞரும் சந்தோஷமா சொல்லியிருக்காரு. காதர்மொய்தீன் சந்திச்சிட்டுப் போனபிறகு தி.மு.க நிர்வாகிகள்கிட்டே, அவங்க எண்ணிக்கையிலே சின்னதா இருந்தாலும் அவங்க எண்ணத்திலே நாமதானே இருக்கோம்னு கலைஞர் சொல்லியிருக்காரு. நிர்வாகிகளுக்கோ, இப்படியொரு முடிவை எடுத்தபிறகு நம்ம கூட்டணியில் ரொம்ப வருடமா இருக்கிற திருமாவளவனும் கலைஞரை சந்திக்க வரலை. கனிமொழியை ராஜ்யசபா எம்.பியாக்க ஆதரவு தெரிவித்து கூட்டணிப்பக்கம் வந்த ம.ம.கவும் புதிய தமிழகமும்கூட வரலையேன்னு யோசனை.''

""அதானே, அவங்களெல்லாம் ஏன் இன்னும் எட்டிப்பார்க்கலை?''

""அந்தக் கட்சிகளெல்லாம் பா.ஜ.க கூட்டணியை விரும்பலைதான். ஆனா, தி.மு.க.வோடு காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., புதிய தமிழகம், முஸ்லிம் லீக் இப்படியொரு அணி உருவானால் எம்.பி. தேர்தலில்  வலுவான  கூட்டணியா இருக்கும்னும் சீட்டுகளை ஜெயிக்க முடியும்னும் எதிர்பார்த்திருந்தாங்க. இப்ப காங்கிரசோடு கூட்டணி இல்லைன்னு கலைஞர் சொல்லிட்டாரு. தே.மு.தி.கவும் வர்றதுக்கான அறிகுறி தெரியாது.  இப்படி யிருந்தா ஜெயிக்க முடியுமான்னு விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., புதிய தமிழகம் கட்சி களுக்கு சந்தேகம் இருக்குதாம். அதனால?''

""அதனால?''‘    

""ம.ம.க. நிர்வாகிகளில் ஒரு தரப்பு நாம மறுபடியும் அ.தி.மு.க கூட்டணிக்கே போயிடலாம்னு வலியுறுத்துதாம். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வ மும் ம.ம.க எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவைத் தொடர்பு கொண்டிருக்காரு. ஆனா, உறுதியான பதில் எதுவும் அவருக்குக் கிடைக்கலை. ம.ம.கவில் இன்னொரு தரப்போ, ஜெ.கிட்டே நாம இடஒதுக்கீடு, அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை, திருமண பதிவுச்சட்ட வயது தளர்வுன்னு 3 கோரிக்கைகளை வச்சோம். எதையும் நிறைவேத்தலை. தி.மு.க தலைமைன்னா நாம எளிதா அணுகலாம். அடுத்ததா அவங்க ஆட்சிக்கு வர்றப்ப நம்ம கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்றலாம். அதனால தி.மு.க கூட்டணிதான் சரின்னு சொல்றாங்களாம். 21-ந் தேதி நடக்கும் ம.ம.க  செயற்குழுவில் இதெல்லாம் சீரியஸா விவாதிக்கப்படும்னு நிர்வாகிகள் சொல்றாங்க. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் அவசரப்பட வேண்டாம்ங்கிற முடிவில் இருக்காரு. தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவும் வெயிட் பண்ணிப் பார்ப்போம்னு அவசரம் காட்டாமல் இருக்காரு.''

""கூட்டணியில் இருக்கிற கட்சிகளே யோசிக்கிற வகையிலான ஒரு முடிவை பொதுக்குழுவில் கலைஞர் அறிவிச்சதோட பின்னணி என்னவாம்?''


""கலைஞரை தினமும் சந்திக்கிற துரைமுருகன், பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், எ.வ.வேலு இவங்க வட்டாரத்தில் பேசுனேங்க தலைவரே.. .. எல்லா தரப்புமே, நாங்களே இதை எதிர்பாக்கலை. தலைவர் திடுதிப்புன்னு போடுபோட்டுட்டாருன்னு சொல்றாங்க. ஏற்கனவே தி.க. தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீ இவங்களெல்லாம் காங்கிரஸ் கூட்டணியை விரும்பலை. காங்கிரசால அதிகபட்சம் 8% ஓட்டு கிடைக்கும்னாலும், நடுநிலையாளர்களோட 6% ஓட்டு நிச்சயமா தி.மு.க வுக்கு எதிரா திரும்பிடும்னும், காங்கிரசை தி.மு.கதான் தூக்கிக்கிட்டு சுமக்கணும்னும் சொல்லியிருக்காங்க. கவிஞர் வைரமுத்துவும், இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் மேலே இருக்கிற கோபத்தை தி.மு.க மேலேதான் பழியாப் போடுவாங்க. அதுக்கு பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே எம்.பி. தேர்தலே முடிஞ்சிடும்னு சொல்லியிருக்காரு. அரசியலுக்கு சம்பந்தமில்லாத தொழிலதிபர் நல்லி குப்புசாமிகூட காங்கிரஸ் வேணாம்னு கலைஞர்கிட்டே சொல்லியிருந்தாராம். ஏற்கனவே காங்கிரஸ் வெறுப்பை மனசிலேயே வச்சிருந்த கலைஞர், பொதுக்குழுவில் காங்கிரசுக்கு எதிரான கருத்துகள் வெளிப்பட்டதோடு அதுக்கு பலமான கைதட்டலும் கிடைச்சதால, தொண்டர்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு அதன்படி முடிவை அறிவிச்சிட்டாருன்னு கோபாலபுரத்துக்கு தினமும் விசிட் அடிக் கும் கட்சி நிர்வாகிகள் தரப்புல சொல்றாங்க.''

""சரி.. காங்கிரஸைத்தான் தொண்டர்கள் வேணாம்னு சொன்னாங்க. பா.ஜ.க. வையும் சேர்த்துல்ல, கலைஞர் வேண் டாம்னு சொல்லிட் டாரு. காதர்மொய் தீன் சந்திச்சிட்டுப் போனபிறகு பிரஸ் காரங்ககிட்டே இதை ரொம்ப பிரஸ் பண்ணி பேட்டி கொடுத்திருக்காரே?''

""பொதுக்குழு கூடுன அன்னைக்கு காலையில வந்த பேப்பர்களில் பா.ஜ.க.வின் இல.கணேசன் பேட்டி கொடுத்திருந்தாரு. அதில் தி.மு.க.வோடு கூட்டணி இல்லைன்னு சொல்லியிருந்தாரு. இதைப்பார்த்த கலைஞர், தி.மு.க இவங்ககிட்டே பேசுனுச்சா? இவங்க என்ன சொல்றது, நானே சொல்றேன்னு முடிவு பண்ணி பா.ஜ.க.வோடும் கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டாரு. பொதுக்குழு முடிஞ்சி வந்தப்ப ஸ்டாலின் உள்பட கட்சி சீனியர்கள் யார் முகத்திலும் உற்சாகம் இல்லைன்னு நிர்வாகிகள் சொல்றாங்க. காரில் கலைஞரோடு திரும்புறப்ப, கூட்டணி சம்பந்தமா பேசியதை முரசொலியில் போடாம விட்டுடலாம்னு ஸ்டாலின் வலியுறுத்தியிருக்காரு. கலைஞர் எந்த பதிலும் சொல்லலை. வீட்டுக்கு வந்ததும் கலைஞர் செய்திகள் சேனலில் காங்கிரஸை பற்றி பொதுக்குழுவில் கலைஞர் விமர்சித்த தெல்லாம் ஒளிபரப்பாகிக் கிட்டிருந்திருக்குது. அதைப் பார்த்த கலைஞர், நம்ம டி.வியிலேயே காட்டிட்டாங்க.. முரசொலியில் ஏன் எடிட் பண்ணணும். அதிலும் வரட்டும்னு சொல்லிட்டாராம். ஸ்டாலினுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.''

""பொதுக்குழு முடிவு பற்றி கனிமொழி என்ன சொல்றாராம்?''

""சி.ஐ.டி. காலனி வீட்டிலும் ஷாக்தான். கனிமொழி  ரொம்ப அப்செட்டாகி, நான் ஜெயிலில் 6 மாசம் இருந்தேன். அப்ப இந்த பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் காங்கிரசை விட்டுட்டு வரணும்னு சொல்லலை. இப்ப என் கேஸெல்லாம் க்ளியராகி வரப்போற நேரத்துல, பொதுக்குழுவுல கையைக் கையைத் தட்டி காங்கிரசுக்கு எதிரா அப்பாவை முடிவெடுக்க வச்சிட்டாங்க. கொஞ்ச நாள் முன்னவரைக்கும் காங்கிரஸ் கூட்டணி வேணும்னு சொன்னவங்களெல்லாம் இப்ப திடீர்னு காங்கிரஸ் சரிப்படாதுன்னு பொதுக்குழுவுல பேசுறாங்கன்னா திட்டமிட்டு தூண்டிவிட்டதால தானே பேசுறாங்க. காங்கிரசை விட்டுட்டு பா.ஜ.க பக்கம் போலாம்ங்கிறதுதான் அவங்க ப்ளான். ஆனா, அப்பா அதுக்கும் கதவடைச்சிட்டாருன்னு கோபமா சொல்லியிருக்காரு.''

""பா.ஜ.க பக்கம் போலாம்ங்கிற ப்ளான் யாரோடது?''

""ஸ்டாலினைத்தான் கனிமொழி சொல்றாருன்னு தி.மு.க நிர்வாகிகள் சொல்றாங்க. காங்கிரஸ் வேணாம்ங்கிறதில் ஸ்டாலின் பிடிவாதமா இருந்தார். அதற்கு ஆல்ட்டர்நேட்டா பா.ஜ.க பக்கம் போலாம்ங்கிற ஐடியா இருந்தது. ஸ்டாலினுக்கு வேண்டிய சில தொழிலதிபர்கள்  அதற்காக லாபியும் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா கலைஞரோ இரண்டு கட்சிகளும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. லாபி செஞ்சிக்கிட்டிருந்தவங்களெல்லாம் இப்ப என்ன செய்றதுன்னு யோசிச்சிக்கிட்டி ருக்காங்க.'' 

""காங்கிரஸ் மேலிடம் தமிழக அரசியல் பற்றி என்ன யோசனையில் இருக்குதாம்?''

""சோனியா ரொம்ப அப்செட். டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர்கிட்டே அவர் பேசுனப்ப, கலைஞரை என் அப்பா மாதிரிதான் நினைச்சிருந்தேன். அவர் ஏதோ கோபத்தில் இருந்தாலும் கட்சியில் உள்ள மத்தவங்க அவரை சமாதானப்படுத்தியிருக்கணும். அதை யாரும் செய்யலை. இப்போதைக்கு நீங்க யாரும் தி.மு.கவுக்கு பதில் கொடுத் துக்கிட்டிருக்கவேணாம். வெயிட் பண்ணலாம்னு சொல்லியிருக்காரு. புதன்கிழமையன்னைக்கு பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் தி.மு.க எம்.பிக்கள் குளோப்ஜாம் சாப்பிட்டுக் கிட்டிருந்தப்ப, சோனியா க்ராஸ் பண்ணிப்போயி ருக்கிறார். அப்ப எம்.பிக்கள் அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல, பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லிட்டுப் போனார்.''

""சென்னையில் மு.க.ஸ்டாலின் கலந்துக் கிட்ட கிறிஸ்துமஸ் விழா விலும் காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸ் கலந்துக் கிட்டாரே?''

""ஆமாங்க தலைவரே.. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்துன அந்த விழா பற்றி நாம ஏற்கனவே பேசியிருக்கோம். இன்வி டேஷனில் பீட்டர் அல் போன்ஸ் பேரு இருந்ததால அவரு வருவாரா மாட் டாருன்னு ஸ்டாலினும் எதிர்பார்ப்போடுதான் இருந்திருக்காரு. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை பீட்டர் தொடர்புகொண்டு இந்த விழா பற்றியும் அதில் ஸ்டாலின் கலந்துக்கிறது பற்றியும் சொல்ல, அழைப் பிதழை ஸ்கேன் பண்ணி அனுப்ப சொன்னாராம். பீட்டரும் அனுப்ப சோனியா வரைக்கும் அழைப் பிதழ் போய் கலந்துக்க அனுமதி கிடைச்சதாம். அதனால ஸ்டாலினோடு பீட்டரும் இந்த விழாவில் கலந்துக்கிட்டாரு. கிறிஸ்துமஸ் கேக் ஊட்டிவிட்டுக்கொள்ளும் அளவுக்கு விழாவில் அன்னியோன்யம் காட்டுனாங்க.'' 

""இந்த விழாவைத் தடுக்கத்தானே ஆளுந்தரப்பு ரொம்ப மும்முரமா இருந்தது?''

""அதே விழாதான். போலீஸ் பர்மிஷனில் நெருக்கடி. கார்ப்பரேஷன் அதிகாரிகள் மூலமா நெருக்கடி. விழாவை நடத் திய இனிக்கோ இருதயராஜ் அலுவலகத்துக்கு அதிகாரி களை காலை நேரத்தில் அனுப்பி  நெருக்கடின்னு பல நெருக்கடி கள் கொடுத்தும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பா நடத்திட் டாங்க. ஆனாலும், இந்த விழா பற்றிய நியூஸ் எதுவும் மீடியாக்களில் பெருசா வந்திடக்கூடாதுங்கிறதில் ஆளுந்தரப்பு ரொம்ப கவனமா செயல்பட்டது. நான் மறுபடியும் காங்கிரஸ் ஏரியாவுக்கு வர்றேங்க தலைவரே..''

""வாப்பா''…

""டெல்லியில் கனிமொழியும் கபில்சிபலும் சந்திச்சிப் பேசியிருக்காங்க. தி.மு.க பொதுக்குழு முடிவு பற்றித்தான் சட்ட மந்திரி கபில்சிபல் கேட்டிருக்கிறார். அதற்கு கனிமொழி, தொண்டர்களோட மனநிலை யைப் பார்த்து எங்க தலைவர் எமோஷனலா எடுத்த முடிவு அது. மாறும்னு எதிர்பார்க்கிறேன்னு சொல்லியிருக்காரு. அதற்கப்புறம் அரசியல் நிலவரங்கள் பற்றி அரை  மணிநேரத்துக்கும் மேலே பேசிக்கிட்டிருந்திருக்காங்க. பார்லிமெண்ட்டில் தி.மு.க எம்.பிக்கள்கிட்டே பேசும் காங்கிரஸ் எம்.பிக்கள், என்ன அவசரப்பட்டுட்டீங்க. நாங்கதான் பார்த்துக்கலாம்னு சொன்னோம்ல. இப்ப உங்களுக்கும் தேர்தலில் கஷ்டம், எங்களுக்கும் கஷ்டம்னு  சொல்றாங்களாம். தி.மு.க தொண்டர்களோ நம்ம உணர்வுக்கு மதிப்பு கொடுத்து கலைஞர் எடுத்த முடிவு இதுன்னு சந்தோஷப்படு றாங்க. பொதுக்குழு முடிவுக்குப் பிறகு ஏற்காட்டில் ஸ்டாலின் கலந்துக்கிட்ட நன்றி யறிவிப்பு பொதுக்கூட்டத்தில் எக்கச்சக்கமான தொண்டர்கள் திரண்டிருந்ததோடு அவங்க கிட்டே ஒரு உத்வேகமும் தெரிஞ்சுது.''

""சரி.. தமிழகத்தில் எப்படியாவது ஒரு வலுவான கூட்டணியை அமைச்சிடணும்னு தீவிரமா இருக்கிற பா.ஜ.கவோட முயற்சிகள் எப்படி இருக்குது?''

""முயற்சிகள் தீவிரமாத்தான் இருக்குது. ஆனா அதை வெளியில் சொல்ல ரொம்பவே யோசிக்குது பா.ஜ.க. தரப்பு. வைகோ டெல்லிக்குப்போய் ராஜ்நாத் சிங்கை சந்திச்சதில் கூட்டணிக்கான முக்கியத்துவம் எதுவுமில் லைன்னு  பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணே சன், தமிழிசை சவுந்திரராஜன்னு ஆளாளுக்கு கருத்துகளை சொல்ல, தமிழக பா.ஜ.கவினர் மேலே வைகோ செம கடுப்பில் இருக்காரு. இதற்கிடையில் பா.ம.கவின் அன்புமணியும் டெல்லியில் ராஜ்நாத்சிங்கிட்டே பேசியிருக்காரு.''

""ராமதாஸ் சம்மதத்தோடுதானே?''


""சாதிக்கட்சிகளுடனான கூட்டணியோடு தேர்தலை சந்திக்கணும்ங்கிறதுதான்  ராம தாஸோட கணக்கு. ஆனா, அன்புமணியோ பா.ஜ.கவோடு கூட்டணி சேர்ந்தால் எம்.பி. தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகமாகும்னும், தி.மு.க-அ.தி.மு.கன்னு திராவிடக் கட்சிகளோடு தான் கூட்டணி இல்லைன்னு நாம அறிவிச் சிருக்கோம். சமுதாயக் கட்சிகளோடு பா.ஜ.கவும் நம் பக்கம் இருந்தால் லாபம்தான்னு சொல்லி ராமதாஸை சமாதானப்படுத்தியிருக்     கிறார்.  பா.ம.க சார்பில் ஏற்கனவே அறிவிக் கப்பட்ட வேட்பாளர்கள் தொகுதிக்குப் போய் வாக்கு சேகரிச்சாலும் உற் சாகம் இல்லை. பா.ஜ.க கூட்ட ணின்னா வேகமா வேலை பார்ப்பாங்கன்னும் அன்புமணி  சொல்லியிருக்காரு. பா.ஜ.க.வோடு சேர்ந்தால் சிறுபான்மையினர் ஓட்டுகளை இழக்கணும்னு பேச்சு வந்தப்ப, முஸ்லிம்கள் நமக்கு பெருசா ஓட்டுப்போடுறதில்லைங்கிறதை ராமதாஸ், அன்புமணி இரண்டு பேருமே ஒத்துக்கிட்டாங்களாம். அதனால பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்வதற்கு இரண்டு பேருமே ரெடி. ஆனா, எதிர்பார்ப்புகள் இருக்குது.''

""என்ன எதிர்பார்ப்பு?''

""வடமாவட்டங்களில் 10 தொகுதி களில் பா.ம.க களமிறங்கத் திட்ட மிட்டிருக்குது. செல்வாக்குள்ள    இந்தத் தொகுதிகளில் ஜெயிச்சே ஆகணும்ங்கிறது பா.ம.க.வோட கணக்கு.  ஆளுங்கட்சி யான அ.தி. மு.க தொகு திக்கு 10சி செலவு பண்ண திட்ட மிட்டிருக்குன்னும், அதே அளவுக்கு ஈடுகொடுத்து செலவு செஞ்சாதான் ஜெயிக்க முடியும்னு ராஜ்நாத்சிங்கிடம் சொல்லப்பட்டிருக்கு. பார்க்கலாம்னு மட்டும் பதில் வந்ததாம்.''

""லேட்டஸ்ட்டா வந்த ஒரு தகவலை நான் சொல்றேன். எம்.ஜி.ஆர். நினைவு நாளான 24-ந்தேதியன்னைக்கு அவரோட சமாதியில் அஞ்சலி செலுத் திட்டு கொடநாட்டுக்குப் போறார் ஜெ. பொங்கல் வரைக்கும் அங்கிருந்துதான் அரசுப் பணிகளை கவனிப்பாராம்.''


 லாஸ்ட் புல்லட்

திருச்சியில் பிப்ரவரி 15, 16 தேதிகளில் தி.மு.க. மாநில மாநாடு என கலைஞர் அறிவித்திருப்பதால், தேர்தல் பணிக்கு ரெடியாகிவிட்டனர் உ.பி.க்கள். கலைஞர் தன்னுடைய அறிக்கையில், கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைப்பது பற்றி தி.மு.க. யோசிக்கவேயில்லை என்றும் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கும் சி.பி.எம்.மின் ஜி.ராமகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெ.விடம் கூட்டணி வைத்திருப்பது எதற்கு எனக் கேட்டு உரிய பதிலளிக்கவும் கோரியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ் வரன். தமிழர்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டவர். வடக்கு மாகாண கவர்னர் சந்திரஸ்ரீயின் தலையீடுகள் வடக்கு மாகாண அரசு நிர்வாகத்தில் அதிகரித்து வருவதால்... அதில் அதிருப்தியடைந்திருக்கும் விக்னேஷ்வரன் தன் பதவியை ராஜினாமா செய்து விடுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனை அறிந்து, விக்னேஷ்வரனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் ராஜபக்சே.

தமிழக அரசின் செய்தித் துறையில் பி.ஆர்.ஓ.வாக இருந்தவர் அண்ணாதுரை. முன்னாள் மத்திய அமைச்சர் காந்திச்செல்வனிடம் உதவியாளராக இருந்த இவர், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகிய நிலையில் செய்தி துறைக்கே திரும்பினார். ஆனால் பல மாதங்கள் இவருக்கு போஸ்டிங் போடாமல் காத்திருப்பு பட்டியலிலேயே வைத்திருந்த செய்தித்துறை இயக்குநர் குமர குருபரன், கடந்த மாதம்தான் சுற்றுலாத் துறையின் பி.ஆர்.ஓ. வாக நியமித்தார். இந்த நிலையில், கடந்த 15-ந்தேதி நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் அண்ணாதுரை கலந்துகொள்ள, அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது ஜெ. அரசு. கடந்த தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. தலைமையகத்தில் நடந்த ஜெ. விழாவில் கலந்து கொண்ட பி.ஆர்.ஓ.க்கள் சரவணன், தங்கையா இருவரையும் அப்போது தி.மு.க.அரசு சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி  விருது பெற்றிருக் கிறார் கொற்கை நாவல் எழுதிய ஜோ டி  குரூஸ். அவருக்கு குவியும் பாராட்டுகளுடன் நக்கீரனின் பாராட்டும் இணைகிறது. மீனவர் வாழ்வை ரத்தமும் உயிருமான படைப்பிலக்கியங்களாகப் பதிவு செய்து வருபவர் இவர். குரூஸின் முதல் நாவலான ஆழி சூழ் உலகு பற்றி 2004ஆம் ஆண்டு நக்கீரன் இதழில் பிரபல எழுத்தாளர் பொன்னீலன் மிக விரிவாகத் திறனாய்வு செய்திருந்ததை நினைவூட்டுகிறார்கள் இலக்கிய வட்டத்தினர்.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி ஆறாம் பாகத்தை நீதிபதி கோகுலகிருஷ்ணன் வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்ட விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. உடல்நலன்தேறிய பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி. தொண்டர்கள் குவிந்திருந்தனர். தன்னுடைய அரசியல் பயணத்துடன் தமிழக-இந்திய அரசியல் நிலவரங்களையும் ஆறு பாகங்களாக நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்த கலைஞர், இன்னும் பல பாகங்களை எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் சென்றனர் ஆறாம் பாகத்தை வாங்கிச் சென்ற தி.மு.கவினர்.

ad

ad