புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

கமலேந்திரன் வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை கூறினார்.
டானியல் றெக்சியன் ஈபிடிபி கட்சியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது கொலை தொடர்பில் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட றெக்சியனின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளன என அமைச்சர் தேவானந்தா கூறினார்.
கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் கட்சியிலும், வடமாகாண சபையிலும் அவர் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யும்படி நான் அவரை கேட்டுள்ளேன்.
கமலேந்திரன் தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் நிரூபிப்பாராயின் அவரைத் திரும்பவும் சேர்த்துக் கொள்வது பற்றி யோசிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
தான் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார். கமலேந்திரனின் பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால ஆதரவாளர்கள் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் நான் கட்சியின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். இவர் சகல பதவிகளையும் துறக்க வேண்டும், இல்லாதுவிடின் நான் அவரை சகல பதவிகளிலிருந்தும் அகற்றுவேன் என அமைச்சர் கூறினார்.

ad

ad